Published:Updated:

சிம்மராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கி அவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதுவரை உங்களின் பூர்வ புண்ணிய வீடான 5 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை சிரமப்படுத்திய சனிபகவான் தற்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டத்தில் அதிரடி யோகம் தரும் 6 ம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், புகழ், பாராட்டுகளையும் அள்ளித் தரவுள்ளார். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் புகைந்து கொண்டே இருந்த நிலை மாறும். இனி உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கரடுமுரடாகப் பேசிய கணவர் இனி பாசமாகப் பேசுவார். எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் இருந்த நிலை மாறி இனி உங்கள் கையிலும் நாலு காசு தங்கும்.

சனிபகவான்
சனிபகவான்

அடிவயிற்றில் இருந்த வலி, ஹார்மோன் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் கூடும். பிள்ளைகள் நீங்கள் எதை சொன்னாலும் அதற்கு ஏட்டிக்கு போட்டியாகச் செய்த நிலைமாறி இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தள்ளிப் போய் கொண்டிருந்த மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மாமனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். நாத்தனார், மச்சினருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.

தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கி அவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். புது வாகனம் வாங்குவீர்கள். கண்டுகொள்ளாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அயல்நாடு சென்று வர அனுமதி கிடைக்கும். சனிபகவான் உங்களின் 3 - ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சனிபகவான் 12 - ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சனி
சனி

வியாபாரம் செய்யும் பெண்கள் மறைமுகமாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பார்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கியெல்லாம் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுக்காக இனி பயப்படவேண்டாம். புதுக் கிளையும் உங்களின் கணவர் உதவியுடன் தொடங்குவீர்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். சம்பளம் கூடும். சக ஊழியர்களோட இருந்த மோதல்கள் விலகும். தனியார் நிறுவனம், கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறைப் பெண்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். புகழ் கிடைக்கும். இந்த சனி மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு