Published:Updated:

சிவகங்கை: மும்மதத்தினர் இணைந்து எழுப்பிய பள்ளிவாசல் - மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு பனங்குடி!

பள்ளிவாசல் திறப்புவிழா
News
பள்ளிவாசல் திறப்புவிழா

"நேற்று, இன்று இல்லை, நூற்றாண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக மும்மதத்தினரும் மத நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையாக வாழ்கிறோம்" என்று கூறி நெகிழ வைக்கின்றார்கள் பனங்குடி மக்கள்.

Published:Updated:

சிவகங்கை: மும்மதத்தினர் இணைந்து எழுப்பிய பள்ளிவாசல் - மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு பனங்குடி!

"நேற்று, இன்று இல்லை, நூற்றாண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக மும்மதத்தினரும் மத நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையாக வாழ்கிறோம்" என்று கூறி நெகிழ வைக்கின்றார்கள் பனங்குடி மக்கள்.

பள்ளிவாசல் திறப்புவிழா
News
பள்ளிவாசல் திறப்புவிழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது பனங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தினரும் வசித்து வருகின்றனர். கோயில், தேவாலயம், பள்ளிவாசல் என மும்மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் அருகருகே இருக்கின்றன.

இந்த நிலையில்தான், இந்தக் கிராமத்தில் இருந்த நூற்றாண்டுகள் பழைமையான பள்ளிவாசல் சிதலமடைந்து, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த முடியாத சூழலில் இருந்துள்ளது. இதையடுத்து, புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிராமத்தில் உள்ள இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் திறப்புவிழா
பள்ளிவாசல் திறப்புவிழா

கூட்டத்தில் முடிவாக மும்மதத்தினரும் இணைந்து பள்ளிவாசல் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தாமாக முன்வந்து தங்களால் முடிந்த நிதி உதவியைச் செய்திருக்கின்றனர். இதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு பிரமாண்டமான முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளி வாசல் கட்டப்பட்டு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் திருவிழா போல, திறப்பு விழா செய்திருக்கின்றனர்.

"எங்க ஊரில் நேற்று, இன்று இல்லை, நூற்றாண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக மும்மதத்தினரும் மத நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையாக வாழ்கிறோம்" என்று கூறி நெகிழ வைக்கின்றனர்.

இதுகுறித்து பனங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாமிதாஸிடம் பேசினோம்.

"எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்தே இங்க மும்மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்க கோயில்ல கும்பாபிஷேகம், திருவிழா வந்தால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர் எடுத்துக்கிட்டு வருவாங்க. அதே மாதிரி அவங்க எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், நாங்க சீர் எடுத்துக்கிட்டு போயிடுவோம். சாதி, மத வேறுபாடு எதையுமே நாங்க பார்க்கிறதில்லை. அண்ணன், தம்பி, மாமா, மச்சான்னு தான் பழகிக்கிட்டு இருக்கோம். என்னைக்கும் இது தொடரும்" என்றார் நெகிழ்ச்சியாக.

பள்ளிவாசல் திறப்புவிழா
பள்ளிவாசல் திறப்புவிழா

இதுதொடர்பாக, அப்துல் ரசாக்கிடம் பேசினோம்,

"வலது பக்கத்துல பெரியநாயகி அம்மன் கோயில் இருக்கு, இடது பக்கத்துல சர்ச் இருக்கு, மையத்துல பள்ளிவாசல் இருக்கு. எல்லாரும் ஒற்றுமையாக இருக்கோம். எங்க கிராமம் ஆண்டாண்டு காலமாக சமத்துவபுரமாக இருந்துக்கிட்டு இருக்கு. கிறிஸ்த்தவர்களும், இந்துக்களும் தாமாக முன்வந்து நிதி உதவி செஞ்சு எங்களை நெகிழ வச்சிட்டாங்க. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக எங்க கிராமத்தினர் இருப்பது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.