Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி பலன்கள்... வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்பு பலன்கள் - ரிஷபம்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை தொழிலுக்காக அதிக வட்டிக்குப் பணம் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டீர்கள். கடன் தொல்லையால் சில நேரங்களில் தலைமறைவாகவும் இருந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்கள்.

ரிஷப ராசி வியாபாரிகள், இதுவரை தொழிலுக்காக அதிக வட்டிக்குப் பணம் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டீர்கள். கடன் தொல்லையால் சில நேரங்களில் தலைமறைவாகவும் இருந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்கள். வேலையாள்களை நம்பித் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களையே பதம் பார்த்தார்கள். சிலர் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்கள். அந்த நிலை இப்போது மாறுகிறது. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள்.

சனி பகவான்
சனி பகவான்

ஹோட்டல், ஏற்றுமதி - இறக்குமதி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் பங்குதாரர்களாக வருவார்கள். உங்களின் லாப ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் உங்கள் பேச்சுத் திறமை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை உங்கள் பேச்சினால் மயக்குவீர்கள். லாபம் இரட்டிப்பாகும். தொழிலுக்காக வாங்கியிருந்த கடன்களை அடைத்துமுடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே... இதுவரை அஷ்டமத்தில் அமர்ந்து எந்த வேலையும் சிறப்பாகச் செய்யவிடாமல் ஆக்கிய சனிபகவான், தற்போது ஒன்பதாம் இடத்தில் சென்று அமர்கிறார். அஷ்டமத்தில் சனி இருந்தபோது சிலருக்கு பணியில் இடைநீக்கம் செய்தார். யாரோ செய்த தவறுக்கு உங்களை பலிகடா ஆக்கினார்கள். அந்த நிலையெல்லாம் மாறும். சிலர் நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேருவீர்கள். உயர்மட்ட அதிகாரிகள் குழுவில் இடம் பிடிப்பீர்கள்.

சனிபகவான்
சனிபகவான்

அரசுப் பணியாளர்களின்மீது வீண் பழி சுமத்தினார்கள். மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே போனது. இனி அவரின் கோபம் தணியும். வேலை காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள், இப்போது சொந்த ஊருக்கே மாற்றல் ஆவார்கள். கணினி துறையினர் இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்கள். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

இதுவரை அடிமையாய் இருந்தவர்களை அதிகாரத்தில் அமரவைக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி. பற்றாக்குறையிலிருந்து மீண்டு பணம், காசையும் அள்ளித்தரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு