3,6,11 ம் இடங்களை சனி பார்ப்பதால் என்ன நடக்கும்?- சனிப்பெயர்ச்சி சனிபகவான் பார்வை பலன்கள்... ரிஷபம்!

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,6,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். இதனால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதையும் சேர்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
இதுவரை 8 ம் இடத்தில் அமர்ந்து உங்களைப் பாடாய்ப்படுத்திய அஷ்டம சனி தற்போது 9 ம் இடம் சென்று அமர்கிறார். அங்கு ஆட்சிபலம் பெற்று அமரும் சனிபகவான் அங்கிருந்து சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,6,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். இதனால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதையும் சேர்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

சனிபகவான் உங்களின் 3 - ம் வீடான கடக ராசியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். சனிபகவான் உங்களின்
6 - ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும்.

சனிபகவான் உங்களின் லாப வீடான 11 ம் இடத்தைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு சனியின் பார்வை மிகவும் சிறப்பான பலன்களையே தரும்.