Election bannerElection banner
Published:Updated:

மேஷ ராசிப் பெண்களுக்கான சிறப்பு சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி...
சனிப்பெயர்ச்சி...

உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களின் வெற்றிகரமான திட்டங்களைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வும் சம்பள உயர்வும் வந்து சேரும்.

மேஷராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, 27.12.2020 அன்று நிகழும் சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்களே ஏற்படப்போகின்றன. அடுத்த இரண்டரை வருடங்களுக்கு சகல விஷயங்களிலும் உங்களின் அணுகுமுறை வெற்றியை ஈட்டித் தருவதாக அமையும். மனத்தில் புது நம்பிக்கை பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமரப் போகிறார் சனி பகவான். 10-ல் சனி பகவான் எனில் காரிய பங்கம் நேரிட வாய்ப்புள்ளதே என்று கவலை வேண்டாம். உங்கள் ராசிக்கு சனி பகவான் ஜுவனாதி பதியும், லாபாதிபதியுமாகத் திகழ்கிறார். அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப் போகிறார். ஆகவே யோக பலன்களே தருவார் என்கின்றன ஜோதிட நூல்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாகவும், சலிப்பாக வும் இருந்தீர்களே! இனி கலகலப்பாக பேசுவீர்கள். ஆகவே, சோர்வும் தாழ்வு மனப்பான்மையும் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். கணவர் சகல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வார். உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த வீண் சந்தேகம், பிரச்னைகள் அனைத்தும் தீரும். உங்களின் பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த வீண் கவலைகள் அனைத்தும் விலகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்கள் எனில், அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களின் வெற்றிகரமான திட்டங்களைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வும் சம்பள உயர்வும் வந்து சேரும்.

சனி பகவான்
சனி பகவான்

மேஷ ராசியைச் சேர்ந்த கன்னிப்பெண்களே, உங்களின் திருமண விருப்பம் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும். கல்யாண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களின் மனத்துக்குப் பிடித்தமான கணவர் அமைவார். வீட்டில் பார்க்கும் வரன் நல்லபடியாக உங்களின் கரம் பிடிப்பார். ஊரே மெச்சும்படி கல்யாணம் கோலாகலமாக நடந்தேறும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு