Published:Updated:

பிராண வாயுவை அதிகரிக்கும் அற்புத யோக-வர்மப் பயிற்சிகள்!

தேகம் தெய்விகம் - மு.அரி

பிரீமியம் ஸ்டோரி

பிரணவம் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது என்றால், பிராணன் எனும் மூச்சே அதிலுள்ள ஜீவன்களை இயக்குகிறது. பிறந்தது முதல் இறுதி வரை நம்மை இயக்கும் மூச்சு குறித்து அதிகம் சிந்தித்து, அதன் அளப்பிலா ஆற்றல்களை அறிந்துகொண்டவர்கள் நம் சித்தர்கள்.

பதஞ்சலியும், வியாக்ரபாதரும் மூச்சைக் கட்டுப்படுத்தினால் இறவா தன்மையை எட்டலாம் என்றார்கள். திருமூலரோ, `மூச்சின் வழியே ஈசத்துவம் என்னும் தெய்வ நிலையையும் அடைய முடியும்’ என்றார்.

யோகா மு.அரி
யோகா மு.அரி

‘எங்கே இருக்கினும் பூரி இடத்திலே

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை

அங்கே பிடித்து அதுவிட்டளவும் செல்லச்

சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே’

- என்பது திருமந்திர வாக்கு.

மூச்சின் முக்கிய படிநிலைகள் மூன்று. அவை - மூச்சை உள்ளே இழுக்கும் ‘பூரகம்’; மூச்சை உள்ளே நிறுத்தும் ‘கும்பகம்’; மூச்சை வெளியேற்றும் ‘ரேசகம்’ ஆகும்.

இந்த மூன்றையும் முறைப்படி குறிப்பிட்ட கால அளவில் செய்ய ஆரம்பித்தால், பூரண ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்வைப் பெறலாம் என்பது சித்தர்கள் வாக்கு.

மூச்சுக்கும் சப்தம் உண்டு. அது சப்தமில்லா சப்தம் என்று கூறப்படுகிறது. மூச்சு வெளியேறும்போது ‘ஹம்’ என்றும் மூச்சு உள்ளே வரும்போது ‘ஸம்’ என்றும் சப்தம் எழும். இதுவே ஹம்ஸம் எனும் ஜபிக்காத காயத்ரீ மந்திரம் எனச் சொல்லப்படுகிறது. இதுவே அஜபா ஜபம், அஜபா காயத்ரீ எனச் சிறப்பிக்கப்படுகிறது. இதுவே நடராஜப்பெருமானின் ஆடலுக்கான தாளமாகவும் அமைந்துள்ளது.

இப்படி உயிர்களின் சகல சலனத்துக்கும் காரணமாக அமைந்த மூச்சைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்பது இன்றைய நவீன அறிவியலே ஒப்புக் கொண்ட உண்மை. பிராண வாயுவை நம்முள் அதிகப்படுத்தி, நுரையீரலை விரிவாக்கிப் பாதுகாத்து, அதன் வழியே ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலை உற்சாக மாக்கி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கலாம்.

தொற்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும் இந்த வேளையில் பிராண வாயுவை அதிகரிக்கும் யோக நிலைகள், மூச்சுப் பயிற்சிகள், வர்மப் புள்ளிகளை இயக்கும் முறைகள், அதோடு நுரையீரலை சுத்தப்படுத்தும் முறைகள், நோய்த் தொற்றைத் தடுக்கும் மூலிகைகளின் பயன்கள், வாய்க் கொப்பளிக்கும் விதங்கள், பாதுகாப்பான உணவுகள், பான வகைகள் என பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

அந்த வகையில் வாசகர்கள் பயன்பெறும் விதம் சக்திவிகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து வழங்கும் `பிராண வாயுவை அதிகரிக்கும் அற்புத யோக - வர்மப் பயிற்சி’ நடைபெறவுள்ளது.

வரும் ஜூன் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 முதல் 8.30 மணி வரை இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் நீங்களும் பங்கேற்று பலன் பெறலாம். பிராண வாயுவை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் இந்த எளிய யோக - வர்மப் பயிற்சிகள் உதவும்.

இந்தப் பயிற்சியின் பலன்கள்:

முறையான சுவாசப் பயிற்சியால் நுரையீரல் தூய்மையாகி, உள்ளே செல்லும் பிராண வாயுவின் அளவு அதிகரிக்கும்.

பிராண வாயு அதிகரிப்பதால், உடல் ஆற்றல் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி தாமாகவே உருவாகும்.

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை உருவாக்கும் வர்ம, யோகப் பயிற்சிகள், உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் உருவாகி உங்களை வெற்றியாளர் என்ற நிலைக்கு உயர்த்தும்!

வாசகர்கள் கவனத்துக்கு...

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள ₹.500 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். இந்தப் பயிற்சி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சியில் வழங்கப்படும் ஆலோசனைகள், மூலிகைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

ஏற்கெனவே, உடல்நலக் குறைபாடுகள் இருப்பின், மருத்துவர் மற்றும் தகுந்த குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. பயிற்சியின்போது உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு: 89390 30246

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு