`ஶ்ரீமத் சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சந்நிதி முறை’

வெளியீடு : திருப்புகழ்ச் சங்கமம், சென்னை.
(பக்கங்கள் - 240; விலை - ரூ 150) தொடர்புக்கு: 98947 72502

முருகப் பெருமானை முத்தமிழால் பாடிப் பரவிய அருளாளர்களில் திருப்போரூர் ஶ்ரீமத் சிதம்பர சுவாமிகள் குறிப்படத்தக்கவர். சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்த திருப் போரூர், முருகப்பெருமான் அசுரார்களோடு விண்ணிலே போர் புரிந்து ஆணவத்தை அடக்கிய இடம். அருணகிரிநாதரின் அற்புதத் திருப்புகழ் பெற்ற தலம். இங்கிருந்த புராதனமான பல்லவர் காலத்துத் திருக்கோயில் காலக்கிரமத்தில் ஜீரணமாகிவடவே, ஶ்ரீமத் சிதம்பர சுவாமிகள் இதனைத் தேடிவந்து பனைமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக விளங்கிய கந்தனைக் கண்டு கோயில் கட்டித் திருப்பணி செய்தார்.

அவர், கற்கோயிலோடு 726 பாடல்கள் கொண்ட ‘திருப்போரூர்ச் சந்திதி முறை’ என்னும் சொற்கோயிலையும் நமக்குத் தந்துள்ளார். முருகன் சந்நிதியில் நம் குறைகளைக் கூறி முறையிட்டு அருள்பெற மிக அழகான, எளிமையான தெய்வத் தமிழில் அமைந்த அற்புதப் பாமாலை இது. ஶ்ரீமத் சிதம்பர சுவாமிகள் போரூர் முருகன் புகழ் பாடிப் பிணி தீர்த்தது, மழை பொழிவித்தது போன்ற பல அற்புதங்களை அகச் சான்றாக இந்நூலில் கண்டு இன்புறலாம்.

`அழுகணிச் சித்தர் பாடல்களில் வாழ்வியல் தத்துவங்கள்’

ஆசிரியர்: நீல பாண்டியன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வா பதிப்பகம், சென்னை-1
(பக்கம்-151 விலை ரூ.160)
தொடர்புக்கு: 9444 640986

சித்தர்களின் மரபு தொன்மைமிக்கதும் பாரம்பரியம் நிறைந்ததும் ஆகும். சித்தர்கள் பலவகையினர் என்றும் வட நாட்டைச் சேர்ந்தவர் நாதசித்தர் என்றும், தென்னாட்டு மரபினர் சிவசித்தர்கள் என்றும் வகைப்படுத்துவர். இந்நூலில், `இறைவன் நமக்குள்ளே இருக்கிறான் என்று அவரை அறிந்து தெளிந்தவர்களே சித்தர்கள்' என்று விளக்குகிறார் நூலாசிரியர்.

அழுகணிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் குண்டலினி யோகத்தைப் பற்றியும் வீடுபேறு அடைதலைப் பற்றியுமே பேசுகின்றன. 32 பாடல்களின் பதப் பொருள் மற்றும் விளக்கம் என விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி வாக்கில் இருப்பதால், இவை அழுகணிப் பாடல்கள் என்றும், மனித சமுதாயம் ஒப்பரத் (கடைத்தேற) துறவிகள் பாடிய ஞான அழுகை என்றும் விளக்குகிறார் நூலாசிரியர். மேலும், நீர்வட்டான் செடியின் மறுபெயர் அழுகண்ணி. இந்த மூலிகையால் மருத்துவச் சேவை செய்தவர் இந்தச் சித்தர் என்பர். இங்ஙனம் அரிய விளக்கங்களோடு இந்நூலைத் தந்துள்ள

நூலாசிரியரின் முயற்சி பாராட்டுதற்குரியது.

`ஶ்ரீபூதநாத உபாக்யானம்’’

ஆசிரியர்: வி.அரவிந்த் சுப்ரமண்யம்,
வெளியீடு: ஶ்ரீவேத பப்ளிகேஷன்ஸ், கோவை - 12
(பக்கம்-151 விலை 160)
தொடர்புக்கு: 99946 41801

பிரமாண்ட புராணத்தைச் சேர்ந்த கேரள கல்பத்தின் அங்கமாக விளங்கும் - சபரிகிரி ஸ்ரீதர்மசாஸ்தாவின் முழுமையான புராண சரிதம் இந்நூலாகும். மஹிஷமுகி ஸ்வர்க விஜயம் தொடங்கி, சபரிகிரி க்ஷேத்ர நிர்மாணம்வரை பதினைந்து அத்தியாயங்களுடன் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், அதன் பொருள் விளக்க உரைநடை, ஆங்காங்கு கோட்டோவியங்களுடன் மிகத் தெளிவாகத் தொகுக்கப் பெற்றுள்ளது இந்த நூல்.

சபரிகிரி க்ஷேத்திரத்தைக் குறித்து முக்கியமான ஆதாரங்களை மிகவும் அரும்பெரும் முயற்சியுடன் நூலாசிரியர் சேகரித்துள்ளார். குறிப்பாக எருமேலியில் வாபுரன் என்ற பூதகணத்தின் கோயில் இருந்தது என்றும், வாவர் என்ற இஸ்லாமியப் பள்ளி வாசலுக்குச் செல்வது போன்ற ஐயப்ப வழிபாட்டிலுள்ள பல தேவையற்ற பழக்கங்கள் பிற்காலத்தில் வந்தவையே என்றும் மூலநூலைக் கொண்டு விவரிக்கிறார்.

ஸ்ரீபூதநாத பூஜாவிதி என்ற அத்தியாயத்தில், அனுஷ்டிக்க வேண்டிய விரதம் மற்றும் பூஜை முறைகள் பகவானின் திருவாக்கினாலேயே வந்தது எனும் தகவலையும், கோயில் நிர்மாணம் மற்றும் சிலாவிக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக் கதையையும் தெளிவாகக் காட்டுகிறார் ஆசிரியர்.

ஏற்கெனவே மகா சாஸ்தா விஜயம் என்ற நூலை வெளியிட்டுப் பிறகு பல ஆண்டுகள் முயற்சி செய்து அரிய பல தகவல்களைத்தேடி, இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

அவர் சாஸ்தாவின் பேரருளைப் பெற்றவர் என்பதை இந்நூலைப் படிக் கும்போது உணர முடியும்.

சாஸ்தா பக்தர்களுக்கு அரிய பொக்கிஷம் இந்நூல்.

அன்பார்ந்த வாசகர்களே!

‘புத்தகம் புதிது - நூல் விமரிசனம்’ பகுதிக்கு நீங்கள் தொகுத்தும் எழுதியும் வெளியான ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களை அனுப்பிவைக்கலாம். தேர்வு செய்யப்படும் புத்தகங்கள் குறித்த விமர்சனம் இந்தப் பகுதியில் இடம்பெறும். விமர்சனத்துக்குப் புத்தகங்களை அனுப்ப விரும்புவோர், இரண்டு பிரதிகளை அனுப்பவும்.

முகவரி:

‘நூல் விமரிசனம்’ சக்தி விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.