அலசல்
Published:Updated:

`வெற்றிக்கு மிக அவசியம் எது தெரியுமா?’ - விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

அனைத்துக்கும் காரணம், தன்னுடைய குறைகளைப் பொருட்படுத்தாத அவரின் அயரா உழைப்பு. தம் வாழ்நாள் முழுவதையும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவே அவர் அர்ப்பணித்தார்.

தனவான் ஒருவர் புகழ்பெற்ற ஞானியைச் சந்திக்கச் சென்றார். ஞானியைக் கண்டதும் கேட்டார், ``உங்களின் சிறப்புத் தன்மை என்ன?’’

ஞானி சொன்னார், ``பசித்தால் உண்பேன். படுத்தால் உறங்குவேன்.’’

தனவானுக்கு ஏமாற்றமாகிவிட்டது. இந்த ஞானியைக் குறித்து மிகப் பெரிதாக மற்றவர்கள் சொல்லக் கேட்டிருந்தார். ஆனால் இவரோ பாமரத்தனமாக இருக்கிறாரே என்று நினைத்தார்.

``எனில், தனித்தன்மை எதுவும் இல்லாதவர் நீங்கள். எல்லோரும் செய்வதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள் அப்படித்தானே?’’ எனக் கேட்டார் தனவான்.

ஞானி பதில் சொன்னார், ``உண்மைதான். ஆனால் சின்ன வித்தியாசம். நீங்கள் சாப்பிடும்போது எங்கெங்கோ மனதை அலையவிடுவீர்கள். நான் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவேன். படுக்கையில் விழுந்தால் உடனே உங்களுக்குத் தூக்கம் வந்துவிடாது. பல்வேறு கவலைகளால் கண் மூட முடியாமல் தவிப்பீர்கள். எனக்கு அப்படியல்ல; படுத்ததுமே தூக்கம் வரும்’’ என்றார் ஞானி. தனவானுக்கு உண்மை புரிந்தது.

`வெற்றிக்கு மிக அவசியம் எது தெரியுமா?’ - விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

இந்த ஞானியைப் போன்று வாழ்க்கையை ஒரே சீரில் கொண்டு செல்லும் தன்மை பெற்றவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வே தவமாகிவிடுகிறது. செய்யும் தொழில், பார்க்கும் உத்தியோகம் என தான் இருக்கும் துறைகளில் தனித்தன்மையைப் பெற்றுவிட முடிகிறது.

ஓர் அந்திப்பொழுதில் கடற்கரையில் கால்கள் மணலில் புதைய நடந்துகொண்டிருந்தோம் நானும் நண்பரும். அவர் தொழில் முனைவோருக்கான வழிகாட்டல்களில் வித்தகர். எங்கள் உரையாடலின் ஊடே நண்பர் கேட்டார்...

``ஒரு தொழிலில் வெற்றி பெறுகிறோம் எனில் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? தொழில் முனைவோரின் சாமர்த்தியமா, உற்பத்தி அல்லது விற்பனைப் பொருளின் தரமா, வாடிக்கையாளரின் திருப்தியா...’’

அவர் சொல்லி முடிப்பதற்குள் ஆர்வக்கோளாறுடன் இடைமறித்துச் சொன்னேன், ``வாடிக்கையாளரின் திருப்திதான்!’’

நண்பர் புன்முறுவலோடு என்னைப் பார்த்தார். ``நண்பரே... வெற்றிக்குக் காரணம் விருப்பம்... தொழில் முனைவோரின் விருப்பம். அதுவே முழு ஈடுபாட்டை அளிக்கும். அந்த ஈடுபாடு வந்துவிட்டால்... பொருளின் தரம், தேவையான பொருளீட்டல், வாடிக்கையாளர்களின் திருப்தி எல்லாவற்றிலும் நிறைவைக் கண்டுவிடுவோம்... சரிதானே?’’ என்றார்.

மிகவும் சரி! விருப்பம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. கூட்டுப்புழுவின் விருப்பம்தான் வண்ணத்துப்பூச்சியாய்ச் சிறகு விரிக்கிறது. மனிதகுலத்தின் அரும்பெரும் விருப்பங்கள் தானே அரிய பல கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் காரணம்?!

விஸ்வாமித்திரரின் விருப்பம்தானே அவரைப் பிரம்மரிஷியாக மாற்றியது.

விஸ்வம் என்றால் உலகம்; மித்திரன் என்றால் நண்பன். காதி எனும் அரசனின் புதல்வனான விஸ்வாமித்திரர், ஆட்சிக்கு வந்ததும் அப்படித்தான் வாழ்ந்தார். பெயருக்குத் தகுந்தாற்போல், மக்களுக்கு நண்பனாகவும் பாதுகாவலனாகவும் இருந்தார்.

ஒருமுறை அவர் குலகுரு வசிஷ்டரின் ஆசிரமத்துக்குச் சென்றார். மன்னரை உபசரித்த வசிஷ்டர் அவருக்கும் உடன் வந்த படைகளுக்கும் அறுசுவை விருந்தளித்தார். மன்னர் வியந்தார். ‘தனியே காட்டில் வாழும் ஒரு முனிவர், அரசாங்கத்தையே மிஞ்சும் அளவுக்கு விருந்தோம்பலைச் சிறப்பித்துவிட்டாரே, எப்படி?’

`வெற்றிக்கு மிக அவசியம் எது தெரியுமா?’ - விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

இதற்கான காரணத்தை வசிஷ்டரிடமே கேட்டார். அவரோ தம்மிடம் இருக்கும் காமதேனுவைச் சுட்டிக்காட்டி, ‘இவள்தான் காரணம்’ என்றார். இப்போது மன்னருக்கு ஒரு விருப்பம் தோன்றியது. இந்தப் பசு நம்மிடம் இருந்தால் பஞ்ச காலத்திலும் மக்களைப் பட்டினியில்லாமல் பார்த்துக் கொள்ளலாமே என்று கருதினார். தெய்வப்

பசுவைத் தமக்குத் தரும்படி கேட்டார்.

``காமதேனு விரும்பினால், தாராளமாக அழைத்துச் செல்லலாம்’’ என்று புன்னகை

யோடு சொன்னார் வசிஷ்டர். ஆனால், காமதேனு விஸ்வாமித்திரருடன் செல்ல மறுத்தது.

வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்ல முனைந்தும் பயனில்லை. உடனே, அதன்மீது படைகளை ஏவினார் விஸ்வாமித்திரர். தனது உடலிலிருந்து லட்சக்கணக்கான வீரர்களைத் தோற்றுவித்தது காமதேனு. அந்த வீரர்கள், விஸ்வாமித்திரரின் படையைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர்.

இந்தத் தோல்வி, வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே பகையாக வளர்ந்தது. வசிஷ்டரை வெல்லும் எண்ணத்தில், தவம் இருந்து வரம் பெற்று, மீண்டும் படையுடன் போருக்கு வந்தார் விஸ்வாமித்திரர். அதை அறிந்த வசிஷ்டர், தனது தண்டத்தை முன்னிறுத்தி, அவர்களின் பாணங்கள் அனைத்தையும் விழுங்கச் செய்தார். நிலைகுலைந்த சைன்யமும் விஸ்வாமித்திரரும் செயலற்றுப்போனார்கள்.

ஆனால் விஸ்வாமித்திரர் தன் முயற்சிகளைக் கைவிடவில்லை. அவரின் விருப்பமே உந்தித் தள்ள, நிறைவில் வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டத்தைப் பெற்றார்!

`வெற்றிக்கு மிக அவசியம் எது தெரியுமா?’ - விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

ஹெலன்கெல்லர் பிறக்கும்போதே உடல்திறன் குறைபாடு கொண்டவராக இருந்தார். பார்வையற்றவர், காது கேளாதவர், வாய் பேசாதவர். ஆனாலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவரது வாழ்க்கை, நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டது. ஹெலன்கெல்லர் பெயரில் உலகெங்கும் சமூக சேவை நிறுவனங்களும் தோன்றின.

அனைத்துக்கும் காரணம், தன்னுடைய குறைகளைப் பொருட்படுத்தாத அவரின் அயரா உழைப்பு. தம் வாழ்நாள் முழுவதையும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவே அவர் அர்ப்பணித்தார். அவருள் இருந்த இந்த விருப்பம் அவரை உழைக்கவும் சாதிக்கவும் தூண்டியது என்றால் மிகையல்ல.

சரி... விருப்பம் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? போதாது!

வெற்றியை நோக்கிய பயணத்தில் - எதில் விருப்பம் கொள்கிறீர்களோ அதில் வெற்றி

பெறும் குறிக்கோளை அடைவதில் துல்லியத் தன்மையும் தெளிவும் நிச்சயம் வேண்டும்.

செல்லும் பாதையில் பல்வேறு விமர்சனங்

களும் தடைகளும் வரலாம். எக்காரணம் கொண்டும் நம்முடைய நோக்கம் சிதைவுபடக் கூடாது.

மிகக் குறுகலான பாலம் அது. மகா பண்டிதரான முனிவர் ஒருவர் அதன்மீது நடந்து வந்துகொண்டிருந்தார். ஓர் ஒற்றையடிப் பாதை அளவேதான் அந்தப் பாலம் இருந்தது. பாதி வழி வந்த போதுதான் தனக்கு நேர் எதிரே மிகவும் அதிகாரம் படைத்த மன்னன் ஒருவன் வருவதைக் கண்டார். உடனே, `‘பின்னால் திரும்பிப் போ! அப்போதுதான் என்னால் இந்தப் பாலத்தைத் தாண்டிப் போக முடியும்!’’ என்றார்.

`‘நீங்கள் பின்னால் போங்கள்!’’ பதிலுக்கு உறுமினான் மன்னன்.

``‘நான்தான் பாலத்தின் மீது முதன்முதலாக அடி எடுத்து வைத்தேன்!’’ என்றார் முனிவர்.

`வெற்றிக்கு மிக அவசியம் எது தெரியுமா?’ - விஸ்வாமித்திரரின் கதை சொல்லும் ரகசியம்!

‘`ஆனால், என்னால் உங்களைத் தள்ளிவிட்டுப் போக முடியும்!’’ என்றான் மன்னன்.

`‘அது நியாயம் அல்ல. நான் ஓர் ஆசான். இந்த தேசம் மிகவும் மதிக்கும் ஒரு தத்துவ ஞானி. அதனால், முதலில் செல்லும் உரிமை எனக்கே தரப்பட வேண்டும்’’ என்று வாதாடினார் முனிவர்.

ஆனால், மன்னனோ, ‘`நீர் பயிற்றுவிக்கும் கல்விக்கூடம் நான் கட்டித் தந்தது. உமது காரியங்கள் அனைத்துக்கும் நிதி அளிப்பவன் நான். என் ஆதரவு இல்லாமல் நீர் எதிலும் சாதிக்க முடியாது. எனவே, மன்னனாகிய எனக்குத்தான் முதல் உரிமை இருக்க வேண்டும்’’ என்றான்.

இப்படியே இருவருக்கும் இடையே வாதம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் போனபோது, கோபம் கொண்ட மன்னன் முனிவரைத் தாக்கினான். வெகுண்டு போன முனிவர், ‘`நீ ஓர் அரக்கன் போல நடந்துகொண்டிருக்கிறாய். அதனால், அரக்கனாகவே நீ மாறக்கடவது!’’ என்று சாபமிட்டார்.

சாபம் பலித்தது. மன்னன் நர மாமிசம் தின்னும் அரக்கனாக மாறி, முனிவர்மீதே பாய்ந்தான்; அவரை விழுங்கி ஏப்பம் விட்டான்! இந்தக் கதை உணர்த்துவது என்ன? முனிவர் அல்லது மன்னனின் நோக்கம் என்ன, பாலத்தைக் கடப்பதா, அல்லது, பாலத்தை முதலில் கடப்பதா?

இருவருமே போட்டி ஆவேசத்தில் `பாலத்தைக் கடக்கவேண்டும்’ எனும் நோக்கத்தை மறந்துவிட்டார்கள். அவர்களின் பிடிவாதம் உண்மையான நோக்கத்தைச் சிதறடித்துவிட்டது. சில வேளைகளில், நம் உரிமையைக் காக்கும் ஆவேசத்தில் நாமும் குறிக்கோளைக்கூட மறந்து செயல்பட்டு, தோற்றுப்போய்விடுகிறோம்!