கட்டுரைகள்
Published:Updated:

`முயற்சி மட்டுமே போதுமா?’

`முயற்சி மட்டுமே போதுமா?’
பிரீமியம் ஸ்டோரி
News
`முயற்சி மட்டுமே போதுமா?’

நண்பன் புன்னகைத்தபடியே சொன்னான் ``நம்பிக்கை மட்டும் போதாது, தன்னம்பிக்கை தேவை. கடின உழைப்பல்ல; முன்னேற்றத் துக்குத் தேவை திட்டமிட்ட உழைப்பு.

பல காலமாக ஆசிரமத்தில் தங்கியிருந்து குருவிடம் தத்துவ உபதேசம் பெற்று வந்தான் ஒரு சீடன். அவன் விடைபெறும் நாள் வந்தது. இரவே புறப்படவேண்டும். அன்று அமாவாசை இருள் கவிந்து கிடந்தது.

வழியில் வெளிச்சம் பெற, கை விளக்கு ஒன்றைச் சுடரேற்றிச் சீடனின் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் செய்தார் குரு. விளக்குச் சுடரிலிருந்து வந்த வெளிச்சம், ஓரடி வரைதான் வழியைக் காட்டியது.

‘`குருவே! நான் நீண்ட தூரம் நடக்கவேண்டும். இந்த விளக்கின் வெளிச்சம் ஓரடி தூரம்தானே தெரிகிறது?’’ என்றான் சீடன்.

அதைக் கேட்ட குரு, ‘`நல்லது! முதலில் ஓரடி தூரம் நட. அங்கு அடுத்த அடிக்கான வெளிச்சம் கிடைக்கும். அடி அடியாய் நடந்தால் இறுதி வரை வெளிச்சம் கிடைக்கும்’’ என்றார்.

கல்வி, குருமார்களின் வழிகாட்டல், நண்பர்களின் துணை, பெற்றோர்தம் ஊக்கம், எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் திருவருள் என எல்லாமும் இருந்தாலும் நமக்கான இலக்கை அடைய நாம்தான் நடந்தாக வேண்டும்.

அர்ஜுனனுக்கு நெருங்கிய நண்பன் கண்ணன். இருந்தும் வெறும் பார்வையாளனாகவே செயல்பட்டான். பாண்டவர்கள், தங்களது முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு கண்ணனை உதவிக்கு வைத்துக்கொண்டனர். அவர்களது முயற்சி, கண்ணனின் மேற்பார்வையில் பயனளித்தது. 16 வயதோடு முடிய வேண்டிய மார்க்கண்டேயனின் வாழ்வை, `என்றும் 16 ’ ஆக மாற்றியமைத்தது மார்க்கண்டேயனின் முயற்சி அல்லவா?

இரண்டு இறக்கைகளையும் அசைத்தால் தான் பறவை பறக்க இயலும். அதில் ஒன்று தெய்வம், மற்றொன்று முயற்சி எனலாம். அதிர்ஷ்டத்தை வரவழைக்க முயற்சி நிச்சயம் தேவை என்கிறது தர்ம சாஸ்திரம்.

சமீபத்தில் பால்ய நண்பன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. பல விஷயங்கள் எங்கள் உரையாடலில் இடம்பெற்றன. நண்பன் கேட்டான். `நம்பிக்கை, உழைப்பு, முயற்சி இந்த மூன்றும் போதுமா ஒருவன் வாழ்வில் உயர்வதற்கு?’ என்று.

`முடியும்தானே?!’ என்றேன் நான்.

நண்பன் புன்னகைத்தபடியே சொன்னான் ``நம்பிக்கை மட்டும் போதாது, தன்னம்பிக்கை தேவை. கடின உழைப்பல்ல; முன்னேற்றத் துக்குத் தேவை திட்டமிட்ட உழைப்பு. அதேபோன்றுதான்... முயற்சி என்ற பதத்தை விடாமுயற்சி என்று மாற்றிக்கொள்’ என்றான். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்!

இந்த இடத்தில் இரண்டு கடலோடிகளின் நினைவு வருகிறது. ஒருவர் வாஸ்கோடகாமா! கடல் பயணங்களின்போது உணவு, குடிநீர்த் தேவை, பணியாளர்களின் உடல்நலக் குறைபாடுகள் என அவர் சந்தித்த பிரச்னைகளும் துயரங்களும் ஏராளம். எனினும் அவர் மனம் தளரவில்லை; முயற்சியை நிறுத்திக்கொள்ளவில்லை.

`முயற்சி மட்டுமே போதுமா?’

ஒருநாள் பெரும் சூறாவளி தாக்கியது. கப்பல் திசை மாறியது. பயணப் பாதையில் பாறைகளைக் கண்ட மாலுமிகள் அலறினர். அப்போதும் வாஸ்கோடகாமா தன்னம்பிக்கையை இழக்கவில்லை. மாலுமிகள் மற்றும் பணியாளர்களை ஆறுதல்படுத்தி, தைரியம் ஊட்டினார். ஒருவாறு சூறாவளி அடங்கியது; இருளும் விலகி பொழுது புலர்ந்தது. விண்ணில் பறவைக் கூட்டத்தைக் கண்ட மாலுமிகள் உற்சாகக் கூச்சலிட்டனர். அருகில் எங்கோ கரை இருப்பதைப் பறவைகள் உணர்த்துகின்றன!

வாஸ்கோடகாமாவின் கண்களுக்குக் கரை தென்பட்டது. மலைகளும் வனங்களும் நிறைந்த அந்த நிலப்பகுதி ஒரு தீவு என்பதை அறியமுடிந்தது. அனைவரும் தீவை அடைந்தனர். அங்கு, அவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. வாஸ்கோட காமா அந்த இடத்துக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? ‘நன்னம்பிக்கை முனை!’

இன்னொருவர் கொலம்பஸ். இந்தியாவைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதன் பொருட்டு அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகள் 18 ஆண்டுகள் நீண்டன. நிறைவில் அமெரிக்காவைக் கண்டறிந்தார். அவர், தனது பயணத்தைப் பற்றிய விஷயத்தை முன்வைத்தபோது, ‘முட்டாள்தனமான கனவு காண்பவர்’ என்றே கருதப்பட்டார். ஆனால், விடாமுயற்சியால் சாதித்தார்.

ஸ்பெயின் நாட்டுக் கனவான்கள் அவருக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அவர்மீது பொறாமை கொண்டவர்களில் ஒருவர், ‘யார் வேண்டுமானாலும் கடல் வழியாகப் பயணம் செய்து மற்றொரு நிலப்பரப்பை அடையலாமே! இது ஒரு சாதனையா?’ என்று கேட்டார். கொலம்பஸ் உடனே அருகிலிருந்த வேகவைத்த முட்டை ஒன்றை எடுத்துக் காட்டி, ‘உங்களில் யாராவது இந்த முட்டையை நிற்கவைக்க முடியுமா?’ என்று கேட்டார்.

ஒவ்வொருவராக முயற்சி செய்தனர். எவராலும் முடியவில்லை. கடைசியில் கொலம்பஸ் அந்த முட்டையை வாங்கி, அதன் முனைப் பகுதியை லேசாக மேசையில் ஒரு தட்டுத் தட்டி, அதன் ஓட்டை நுனியில் சற்று உடைத்து, நிற்க வைத்துக் காட்டினார். அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். ‘முதலில் முயன்று ஒன்றைச் செய்து காட்டுவது கடினம். அதற்குப் பிறகு யார் வேண்டுமானாலும் அதை எளிதாகப் பின்பற்ற முடியும்’ என்றார் கொலம்பஸ்!

இவரைப்போன்றே விடாமுயற்சியும் மாற்று யோசனையும் கொண்டிருத்தல் வெற்றிக்கு மிக அவசியம்.

`முயற்சி மட்டுமே போதுமா?’

மன்னர் ஒருவர் குதிரைப் பிரியர். ஒருமுறை உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த இரண்டு குதிரைகளைப் பார்த்தார். அவற்றிலும் சிறந்த ஒன்றைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆகவே இரண்டையும் ஓடவைத்து, ஜெயிப்பதை வாங்கவேண்டும் என்று முனைந்தார்.

பந்தயம் தொடங்கியது. குதிரையோட்டிகள் குதிரைகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம்... இரண்டுமே அன்ன நடை நடந்தனவே தவிர, ஒன்றை ஒன்று முந்தமுற்படவில்லை. மன்னர் சலித்துக்கொண்டார். அருகில் இருந்த மந்திரிக்கு ஒரு சிந்தனை உதித்தது. எங்கோ சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர், ஏவலாள் மூலம் குதிரை ஓட்டிகளுக்கு ரகசியக் கட்டளை ஒன்றைச் சொல்லி அனுப்பினார்.

அதன்படி செய்தனர் குதிரை ஓட்டிகள், மீண்டும் பந்தயம் தொடங்கியது. இப்போது புயலெனப் பாய்ந்தன குதிரைகள். ஒன்று ஜெயித்தது. அதை மன்னன் வாங்கிக்கொண்டார்.

ஆனால் மந்திரி பிறப்பித்த ரகசியக் கட்டளை என்ன என்பதை அறிய ஆவல் கொண்டார். அவரிடமே விசாரித்தார். ``வேறொன்றும் இல்லை... விசாரித்துப் பார்த்ததில், அந்தக் குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் இருவருமே தங்கள் குதிரையை மிகவும் நேசிப்பதாகவும், பந்தயத்தில் ஜெயித்துவிட்டால் வேறு வழியின்றி மன்னருக்குத் தங்கள் குதிரையைத் தரவேண்டுமே என்பதால், அவர்கள் தங்கள் குதிரையை மெதுவாகச் செலுத்துகிறார்கள் என்பதையும் அறிந்தேன். ஆகவே ஒரு சின்ன மாற்றம் செய்தேன். இவரது குதிரையை அவர் செலுத்தட்டும்; அவரது குதிரையை இவர் செலுத்தட்டும் என்று உத்தரவிட்டேன்.... என் எண்ணம் பலித்தது’’ என்றார் மந்திரி.

`முயற்சி மட்டுமே போதுமா?’

இதுபோல, நடைமுறையில் வித்தியாசமாகச் சிந்திப்பது, வெற்றி பெறுவதற்கு அவசியம்!

சிலர் இருக்கிறார்கள்... அவர்களின் முயற்சியும் வித்தியாசச் சிந்தனையும் விநோதமானவையாக இருக்கும்.

மாவு மில்லில் வரிசையில் காத்திருந்தான் ஒருவன். அவ்வப்போது தன் பக்கத்தில் நின்றவனின் பையிலிருந்து அரிசியை அள்ளித் தன் பையில் போட்டுக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனுடைய செயலை மாவுமில்காரர் கவனித்துவிட்டார்.

‘`என்ன செய்கிறாய்?’’ என்று அதட்டினார். இவனோ சட்டென்று சமாளிக்க முயன்றான்.

``மன்னிச்சுடுங்க... நான் ஒரு முட்டாள்... அப்பப்ப இப்படித்தான் எதையாவது செஞ்சிட்டிருப்பேன்’’ என்றான்.

‘`நீ முட்டாளாக இருந்தால், உன் பையில் இருக்கிற அரிசியை எடுத்துப் பக்கத்தில் உள்ளவரின் பையில் போட வேண்டியதுதானே? ஏன் அப்படிச் செய்யவில்லை?’’ என்று மடக்கினார் மாவுமில்காரர்.

உடனே அவன் சொன்னான், ‘`அப்படிச் செய்தால் நான் இரண்டு மடங்கு முட்டாளாக, அடிமுட்டாளாக அல்லவா இருப்பேன்!’’