Published:Updated:

`மகான்களை வழிபட்டால் இறையருள் கிடைக்குமா?'

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

`மகான்களை வழிபட்டால் இறையருள் கிடைக்குமா?'

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

? இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலே சகல தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்கிறார் பெரியவர் ஒருவர். எனக்கு இதுகுறித்து தங்களின் வழிகாட்டல் தேவை.

- எம்.பாலா, மதுரை


ஒவ்வொருவருக்கும் இறை பக்தியும் நம்பிக்கையும் அவசியம். அவ்வகையில் ஒரு தெய்வத்தையேனும் விருப்பத்துடன் பிடித்துக் கொள்ளலாமே என்ற அடிப்படையில் பெரியவர் கூறியிருப்பார். நமக்குப் பிடித்த இறைவனின் வடிவத்தை வழிபடுவதுதான் இஷ்ட தெய்வ வழிபாடு.

`மகான்களை வழிபட்டால்
இறையருள் கிடைக்குமா?'
SABARISH SANKARAN‘ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி’ என்பது வேத வாக்கு. பரம்பொருள் என்பது ஒன்றுதான். எனினும் ஞானியர் அதைப் பலவாறாகக் கூறுகிறார்கள். நாம் நமக்கு இஷ்டமான ஒரு செயலைச் செய்யும்போது, மிகவும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்வோம். அதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலனும் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதும்கூட. இஷ்டதெய்வத்தை வழிபடும்போது, நம்முடைய மனம் வழிபாட்டில் ஆத்மார்த்தமாக ஈடுபடுகிறது. அதனால் நமக்கு உடனடியான பலனும் கிடைக்கிறது.

? குருமார்கள், மகான்களை வழிபடுவதால் மட்டுமே இறைவழிபாட்டின் பலன்கள் நமக்குக் கிடைக்குமா?

- சுபா கிருஷ்ணன், கடலூர்

`கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்’ என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங்களின் முடிவு.

குரு, மகான்கள் ஆகியோர் எந்தவிதச் சலனமும் இல்லாதவர்கள். கடவுளை அடைவதையும், தாம் கற்று அல்லது அனுபவித்து உணர்ந்த உண்மையை அனைவருக்கும் தெரிவிப்பதையும், அன்பர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தங்களுடைய அனைத்து விருப்பு-வெறுப்புகளையும் துறப்பதையும் கடமையாகக் கொண்டிருப்பவர்கள்.

பரம்பொருளின் அருளை நிறையப் பெற்றவர்கள் அவர்கள். அவர்களுடைய உபதேசங்கள் அனைத்தும் அந்த உண்மைப் பொருளின் வழியைக் காண்பதாகவே அமையும். ஆக, அவர்களை வழிபடுவதும், அந்தப் பரம்பொருளை அடைவதற்காகவே என்று அறியலாம்.

இந்தக் காரணத்தை அறிந்த நம் முன்னோர், நமக்குக் குருமார்கள் மற்றும் மகான்களின் பெருமைகளையும், அவர்களை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, அந்த வழிமுறையை நாமும் பின்பற்றி குருவின் வழியாகக் கடவுளை அடைவதென்பது சரியே. அதேநேரம், தவறான வழிகளைக் கற்பிக்கும் போலியானவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் சரணடையக் கூடாது.

`மகான்களை வழிபட்டால்
இறையருள் கிடைக்குமா?'

? எங்கள் கடையில் காமாட்சி விளக்கு வைத்து வழிபட்டு வருகிறோம். சமீபத்தில் பூஜைக்காக விளக்கேற்றும்போது, ஏதோ பொருள் விழுந்து தீபம் அணைந்துவிட்டது. இது அபசகுனமா? காமாட்சி விளக்கு அம்பாள் அம்சம் என்கிறார்களே... அதுகுறித்து விளக்குங்களேன்?

- சி.ராமசாமி, திருநெல்வேலி


சகுனங்கள் என்பவற்றை, எதேனும் ஒன்றை மனதில் எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது அவை நிகழ்ந்தால்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மற்ற காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளை வெறும் சம்பவங்களாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

தவறுதலாக ஏதோ பொருள் விழுந்து தீபம் அணைந்துவிட்டால், அதற்காக கவலைப்படத் தேவையில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் மனதைத் தளரவிடக் கூடாது. ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று மகாகவி கூறியபடி, நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை நம்முடைய வினைப்பயன்களின் பரிசே என்று ஏற்றுக்கொண்டு, பக்குவப்பட்ட மனதுடன் நம்முடைய காரியங்களைத் தொடரவேண்டும்.

ஆகவே பூஜை செய்யும் போது தீபம் அணைவது, தேங்காய் உடைக்கும் போது கோணலாக உடைவது, அது அழுகியிருப்பது ஆகியவற்றை எல்லாம் அசுப சகுனமாக பார்த்து சஞ்சலப்பட வேண்டாம்.

ஏதேனும் ஒரு காரியத்தின் நிமித்தமாகச் சகுனம் பார்க்கும் தருணத்தில், இதுபோன்று நிகழ்ந்தால்தான் அசுப சகுனமாகக் கருத வேண்டும். அப்போது, குறிப்பிட்ட காரியத்தைத் தவிர்த்துவிடலாம். அவசியமான காரியமாக இருந்தால், சிறிது காலம் தாழ்த்தி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு செய்யலாம்.

காமாட்சி விளக்கின் மகிமை குறித்து கேட்டிருந்தீர்கள். `கா’ என்றால் சரஸ்வதி; ‘மா’ என்றால் லட்சுமி. `அட்சி’ என்றால் கண்கள். சரஸ்வதி, லட்சுமி ஆகியோரைக் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு, பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் வேண்டும். அவற்றை நமக்கு அருள்பவள்தான் காமாட்சி.

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை - விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி. எனவே, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும்போது, நம்முடைய வீட்டில் சகல மங்கலங்களும் நிறைவதுடன், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவும் நமக்குக் கிடைக்கும்!

`மகான்களை வழிபட்டால்
இறையருள் கிடைக்குமா?'
aijohn784

? சுப காரியங்களுக்கு நாள் குறிக்கும்போது ராகு காலம், எமகண்டம் பார்ப்பது ஏன்? சிலர் தினப்படி வேலைகளுக்கும் ராகு காலம், எமகண்டம் என்றெல்லாம் நேரம் பார்த்துச் செய்கிறார்கள். இது சரியா?

- கே.ராஜேந்திரன், சென்னை-45


ராகுகாலம், எமகண்டம் எல்லாம் ஜோதிட சாஸ்திரத்தின் அங்கங்கள். ஜோதிட சாஸ்திரம், ரிஷிகளால் கண்டறியப் பட்ட வேத சாஸ்திரத்தின் கண்களைப் போன்றது. ரிஷிகள் நம்முடைய நன்மைக்குத்தான் சில விஷயங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

ஒருநாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. இந்த மூன்று மணிநேரத்தைத் தவிர்த்துவிடுவதால், நமக்கு பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இங்கே முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை முக்கியமான காரியங்களைத் தொடங்குவதற்குத் தான் பார்க்கவேண்டுமே தவிர, அன்றாடப் பணிகளுடன் தொடர்புப்படுத்தக் கூடாது.

? தெய்வ மந்திரங்களை `ஓம்’ என்று கூறிதான் தொடங்க வேண்டுமா, அதற்கான தத்துவ விளக்கம் என்ன?

- எம். பாண்டியன், மதுரை-4


‘ஓம் இதிதகும் ஸர்வம்’ என்று கூறி, `அனைத்தும் ஓம்காரமே’ என்று விளக்குகிறது வேதம். `ஓம்’ - இந்த ஒலியில் உலகம் முழுவதும் அடங்கியிருப்பதாக நம் ரிஷிகள் விளக்கியுள்ளார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபாவம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்தும் இந்த ஓம்காரத்தினுள் அடக்கம்.

எந்தத் தெய்வத்தின் மூல மந்திரமாக இருந்தாலும் ‘ஓம்’ இல்லாமல் இருப்பதில்லை. மந்திரங்களின் ஓரெழுத்து வெளிப்பாடே ஓம்காரம். மகான்கள் பலரும் `பிரணவ ஜபம்’ என்று ஓம்காரத்தை மட்டுமே ஜபம் செய்து ஸித்தி அடைந்திருக்கிறார்கள். மந்திரங்களை உபதேசமாகப் பெற்றவர்கள் அனைவரும், மூல மந்திரங்களை ஜபிப்பதும், தெய்வ ஸ்தோத்திரங்களையும், ஓம்காரத்தையும் உச்சரிப்பதும் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism