Published:Updated:

பொற்காசுகளை ஆற்றில் போட்டுவிடு!

ஶ்ரீராமகிருஷ்ணர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராமகிருஷ்ணர்

ஆன்மிகக் கதைகள்

பொற்காசுகளை ஆற்றில் போட்டுவிடு!

ஆன்மிகக் கதைகள்

Published:Updated:
ஶ்ரீராமகிருஷ்ணர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராமகிருஷ்ணர்


பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். ‘

பொற்காசுகளை  
ஆற்றில் போட்டுவிடு!

’சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?’’ என்று கேட்டார் பரமஹம்சர். ‘’ஒரு தடையும் இல்லை!’’ என்றான் செல்வந்தன்.

‘’இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!’’ என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொரு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், ‘’என்ன முட்டாள்தனம் இது? ஒரேயடியாக ஒரு கணப் பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாகத் திரும்பா மல், ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?’’ என்று கேட்டார்.

‘`ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன்’’ என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், ‘`இழப்பதற்கு முடிவெடுத்துவிட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்’’ என்றார்.

- எஸ்.வேலம்மாள், சத்தியமங்கலம்

பொற்காசுகளை  
ஆற்றில் போட்டுவிடு!

மூவரில் சிறந்தவர் யார்?

சேது பாலம் அமைக்கும் பணியில், தங்களை இணைத்துக் கொண்ட மூவர்... சுக்ரீவன், விபீஷணன் மற்றும் அணில்! இவர்களில் மற்றவர்களை விட, அணில் செய்த தொண்டே உயர்வானது என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். காரணம்?

அரசாட்சியைப் பெற்றதற்கு நன்றிக்கடனாக தொண்டு செய்தான் சுக்ரீவன். அரசாட்சியைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்தான் விபீஷணன். ஆனால், லாப நோக்கம் எதுவும் இன்றி ராமனுக்கு தொண்டு செய்தது அணில். ஆகவே, அதன் தொண்டே மகத்தானது என்கிறார் இந்த ஆழ்வார்.

- எம். அஞ்சனா, திருச்சி-4

அவர் பாடுவது இறைவனுக்காக!

மாமன்னர் அக்பரின் ஆஸ்தான வித்வான் தான்சேன். ஒருநாள் இருவரும் தான்சேனின் குருநாதராகிய பாவா ஹரிதாஸை தரிசிக்க அவரின் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரது இசையைக் கேட்டு அக்பர் மெய்ம்மறந்தார்.

சில நாட்களுக்குப் பின் தன்னுடைய சபையில் தான்சேன் பாடிய போது அக்பர், ‘‘தான்சேன், உன் குரு எவ்வளவு நன்றாகப் பாடுகிறார். அவரது பாட்டுடன் ஒப்பிட்டால் உனது பாட்டு சப்பென்று இருக்கிறதே?’’ என்று கேட்டார்.

அதற்கு தான்சேன், ‘‘அரசே, நான் உங்களுக்காகப் பாடுகிறேன். அவர் பகவானுக்காகப் பாடுகிறார். இதுதான் காரணம்!’’ என்றார் நிதானமாக!

- வீ.செந்தில், திருநெல்வேலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism