திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

நோபல் பரிசை மறுத்த அன்னை!

மகான் ஸ்ரீஅரவிந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகான் ஸ்ரீஅரவிந்தர்

நோபல் பரிசு அறிவிக்கும் முன்பாக அரவிந்தர் ஜீவன் முக்தராகி விட்டார்

மகான் ஸ்ரீஅரவிந்தருக்கு அவரது ஆன்மிக சேவைகளைப் போற்றி 'நோபல் பரிசு' தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தீவிரவாதி என்று தேடப்பட்டுவந்த அரவிந்தர், ஆன்மிக உலகில் நுழைந்ததும் பலருக்கு ஆறுதல் அளிக்கும் மகாகுருவாக உருமாறினார். குறிப்பாக அமைதியை விரும்பிய பல மேலைநாட்டினருக்கு அவர் நிழல் தரும் தருவாக உருவானார். இந்நிலையில் நோபல் பரிசு அறிவிக்கும் முன்பாக அரவிந்தர் ஜீவன் முக்தராகி விட்டார். எனவே அரவிந்தருக்கு அளிக்கவிருந்த நோபல் பரிசை, அவரின் முக்கிய சீடரான 'அன்னை'க்குக் கொடுக்க விரும்பினார்கள்.

மகான் ஸ்ரீஅரவிந்தர்
மகான் ஸ்ரீஅரவிந்தர்

ஆனால் அன்னை, ''நான் ஒரு கருவி மட்டுமே. இயக்குவதெல்லாம் ஸ்ரீஅரவிந்தரே. எனது எண்ணங்களும் அவற்றைச் செயல்படுத்தும் ஆன்மிக சக்தியும் ஸ்ரீஅரவிந்தருடையதே. ஆதலால், வெறும் கருவியான என்னை, பெயருக்கும் புகழுக்கும் ஆளாக்குதல் சரியில்லை!'' என்று கூறி, நோபல் பரிசை பெருந்தன்மையுடன் மறுத்து விட்டார்! அமைதிக்கு மிஞ்சிய பரிசு உண்டோ என்று நிரூபித்தும் விட்டார்.

-எஸ். விஜயலட்சுமி,சென்னை-88