Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

சிம்ம ராசியில் பிறந்தவேளை (லக்னம்) அல்லது நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்) இருக்கும் தறுவாயில் சுக்கிரனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், ஏற்கக்கூடாத கணவனை ஏற்பாள். குழந்தைச் செல்வமும் குறைவே! தாம்பத்திய உறவில் அளவுகடந்த ஆர்வம் உடையவளாகவும் தென்படுவாள் என்கிறது ஜோதிடம். சந்தர்ப்பச் சூழலானது விருப்பமில்லாத அல்லது தகுதியற்ற ஒருவனைக் கணவனாக ஏற்கவைக்கும். குழந்தையை உருவாக்கி ஈன்றெடுக்கும் திறன் ஒரு குழந்தையோடு நின்றுவிடும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

 பண்டைய சுயம்வரத்தில் வீரத்துக்கு அடிமையாகி, தகுதியில்லாத கணவனை ஏற்ற பெண்கள் உண்டு. ஓர் ஆண் அல்லது ஒரு பெண் குழந்தையோடு முற்றுப்பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். இதை ஜோதிடம் 'மலடி’ என்று சுட்டிக்காட்டும் (காகவன்த்யா, கதளீவன்த்யா). உடலுறவில் திருப்தி தென்பட்டாலும், பழக்கத்தைக் கைவிடமுடியால் அதைத் தொடரத் துணிவாள். சுவைக்கும் இன்பத்தை ஈட்டித் தருபவன் அல்லது இன்பத்க்ச் சுவைக்கும் தகுதியை ஏற்படுத்துவன் சுக்கிரன். அவனது த்ரிம்சாம்சகம், கணவனை வலுக்கட்டாயமாக ஏற்கவைக்கும்; ஒரு குழந்தையோடு தகுதியைக் கட்டுப்படுத்தும்; தாம்பத்திய சுகத்தை சுவைப்பதில் அதிக ஆர்வத்தை ஊட்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்றும் இன்றும்!

ஸனாதனத்தின் ஆட்சி, சமுதாயக் கட்டுப்பாடு, அறவழி ஆகியவற்றை அன்றைய மக்களைக் கடைப்பிடிக்க வைத்த காலம் அது. அன்றைக்கு தகுதியில்லா கணவனை தள்ளிவைத்து மாற்றுக் கணவனை ஏற்பதும், குழந்தையை இரண்டாவதாகத் தத்தெடுப்பதும், கணவனை இழந்தவள் தாம்பத்தியத்தைச் சுவைக்க மறுமணம் செய்வதும் அறத்துக்குப் புறம்பானதாகவும், அநாகரிகமானதாகவும் கருதப்பட்டது. பழைய சித்தாந்தங்கள் இன்று பொய்த்துவிட்டன என்று எண்ண வேண்டாம். அன்றைய சமுதாயம் அறத்துக்குக் கட்டுப்பட்டது; இன்றைய சமுதாயம் கட்டுப்பாடு தளர்ந்தது. சட்டதிட்டங்களாலும், விஞ்ஞான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் அவளது குறையை அகற்ற நினைத்தாலும், அது அனுபவத்துக்கு வராமல் போய்விடும்; சுமையாக மாறிவிடும்.

விசித்திரமும் நிதர்சனமும்

புதிய தலைமுறை ஜோதிடர்கள் சிலர், சாஸ்திரம் சொல்லும் குறைகளைப் பரிகாரத்தால் நிறைவு செய்து, புதுப்பொலிவான வாழ்க்கையை ஈட்டித்தருவதாகத் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். விஞ்ஞான மருத்துவம் 'உயிருக்கு நான் பொறுப்பில்லை’ என்கிறது. இன்றைய ஜோதிடம், 'உன் மகிழ்ச்சிக்கு நான் பொறுப்பு’ என்கிறது. விசித்திரமாக இருக்கிறது உலகம்! குறைபாடுகளுக்கும் பரிகாரத்துக்கும் உள்ள தொடர்பையோ, குறையை நிறைவாக்கும் விதத்தில் பரிகாரம் எங்ஙனம் வேலை செய்யும் என்பதையோ விளக்கமாட்டார்கள். கடவுள் வழிபாட்டு முறையைச் சுட்டிக்காட்டி, பொறுப்பிலிருந்து நழுவிவிடுவார்கள்.

அனுதினமும் பூஜையில் ஈடுபடும் பூசாரி மாறாப் பிணியில் சிக்குவது உண்டு. மருத்துவர்களும் பிணியில் சிக்கித் தவிப்பார்கள். ஜோதிடர்களின் குடும்பத்தாரும் துயரத்தைத் தழுவுவது உண்டு. அது என்னவோ... நமது முயற்சிகளை முறியடிக்கும் ஒரு சக்தி உள்ளது என்பதை ஏற்கவேண்டி இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவே ஜோதிடம் எழுந்தது. ஜோதிடரின் தனிப்பட்ட முயற்சியையும் அது வென்றுவிடும். அவர்களது பரிகாரங்களும் நம்பிக்கைக்கு உகந்தவையல்ல. அவர்கள் தங்களுக்கு வரும் இடர்களையே பரிகாரத்தின் மூலம் எதிர்க்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!

ஆக்கமும் அழிவும் அவன் செயல்...

சுக்கிரனுக்கு 20 வருடங்கள் தசாகாலம். சனிக்கு 19, ராகுவுக்கு 18, புதனுக்கு 17, குருவுக்கு 16, சந்திரனுக்கு 10, செவ்வாய்க்கும் கேதுவுக்கும் 7, சூரியனுக்கு 6  - இப்படி விளக்கப்பட்டிருக்கும். 'வாழ்க்கையைச் சுவைக்க வைப்பவனும் முடித்து வைப்பவனும் அவன்’ என்கிறது ஜோதிடம். ராசி புருஷனில் சுக்ரன் 2க்கும், 7க்கும் உடையவனாக இருந்துகொண்டு, செழிப்பையும் இழப்பையும் அளிப்பவனாக சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். கேந்திரத்திலும் (லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 வீடுகளில்) த்ரிகோணத்திலும் (1, 5, 9 வீடுகளிலும்) சுக்கிரனுக்கு இடமிருந்தால், அவன் செழிப்பை ஏற்படுத்தி இன்பத்தைச் சுவைக்கவைப்பான். கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் இடம்பெற்ற கிரகத்தை 'யோககாரகன்’ என்கிறது ஜோதிடம். அந்த கிரகம் தானும் நல்லதைச் செய்யும்; தன்னோடு இணைந்த கிரகத்தையும் நல்லது செய்யத் தூண்டும் (யோககாரக ஸம்பந்தாத்...). 6, 8, 12ம் இடங்களிலோ, கேந்திர, த்ரிகோணங்களில் அல்லாத தொடர்பற்ற நிலையிலோ இருந்தால் இழப்பை ஏற்படுத்துவான். இப்படி, ஆக்கத்தையும் அழிவையும் அளிப்பதில் திறமை பெற்றவனாக இருப்பான் சுக்கிரன்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

குளிர்ச்சியும் வெப்பமும் உருவாக்கத்துக்கும் மாறுபாட்டை அடையவும் காரணமாவது உண்டு. ஆனால், எல்லை மீறிய குளிர்ச்சியும், எல்லை மீறிய வெப்பமும் அழிவைச் சந்திக்க வைக்கும். தட்பக்கிரகமான சுக்கிரனுக்கு, வாழ்வு அளிப்பதிலும் அதைப் பறிப்பதிலும் பங்கு உண்டு. ராசியின் கடைசி 5 பாகைகள் சுக்கிரனின் த்ரிம்சாம்சகம். ராசி முழுவதும் சூரியனின் பங்கு பரவி இருக்கும். ஹோரையில் சந்திரனின் அம்சமும், த்ரேக்காணத்தில் செவ்வாயின் தொடர்பும் இருக்கும். இவற்றோடு இணைந்த சுக்கிர த்ரிம்சாம்சகமானது, தன்னில் தோன்றியவளை... விரும்பாத கணவன், ஒப்புக்கு ஒரு குழந்தை, முதுமையிலும் இன்பத்தைச் சுவைப்பதில் ஆர்வம்... இப்படி, மூன்றும் (கணவன், குழந்தை, இன்பம்) இருந்தும் நிறைவை எட்டாத வாழ்க்கையை ஏற்கவைக்கிறான்.

மகிழ்ச்சியைச் சுவைக்க வைக்கும் மனத்தெளிவு

மண வாழ்க்கை மனத்தெளிவில் இனிக்கும். படிப்பு, பட்டம், பதவி, ஆடம்பரப் பொருள்கள் அத்தனையும் பெற்று மகிழ, மனத் தெளிவு வேண்டும். நிம்மதியும், மனநிறைவும் இல்லாதவனுக்கு ஆடம்பரப் பொருள்கள் இன்பத்தை அளிக்காது. அவை சுமையாக இருக்குமே தவிர, சுவையாக இருக்காது. விருப்பம் இல்லாத கணவனை ஏற்கவேண்டி வந்ததே என்கிற எண்ணம் இன்பத்தைச் சுவைக்கத் தடையாக இருக்கும். ஒரு குழந்தையோடு முற்றுப்பெற்றதை எண்ணி, தனக்குக் குறை இருப்பதை ஊர்ஜிதம் செய்யும் அவள் மனம். பலநாள் அனுபவித்த பிறகும், உடலுறவில் திருப்தி வராததும் குறைதான். ஆக, மூன்றும் குறையோடு இருப்பதை அசைபோடும் மனம், தாழ்வுமனப்பான்மையில் தன்னை வருத்திக் கொள்ளும். மணம், மகப்பேறு, மகிழ்ச்சி ஆகிய மூன்றும் இயற்கை அளித்த அன்பளிப்பு. முழுமையை எட்டாத இந்த மூன்றும் முழு மகிழ்ச்சியை அளிக்காது. மனதின் தெளிவில் நுகர்பொருள்கள் இனிக்கும். காலமாற்றத்தால் சிந்தனை மாற்றம் ஏற்பட்டாலும், மனத்தெளிவு பெறாத வரையிலும் எந்த இன்பமும் இனிக்காது.

ஜோதிடம், மனிதனின் மனநிலையைப் படம் போட்டுக் காட்டி, அதன் தரத்துக்கு உகந்தபடி, அவன் சுவைக்கும் இன்பத்தையோ துன்பத்தையோ வரையறுத்துக் கூறும். மனம் போன போக்கில் பயணிக்கும் மனிதர்கள் ஏராளம். சட்டத்திட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், சுயநலத்தில் இன்பத்தை நோக்கிய அவனது பயணம் எங்கு முற்றுப்பெறும் என்பது அவனுக்குத் தெரியாது; ஜோதிடத்துக்குத் தெரியும்.

நாம் ஒன்று நினைக்க...

புதிய சிந்தனையாளர்களின் கூற்றுப்படி, அவள் தகுதியற்ற கணவனைத் துறக்கலாம்; விஞ்ஞான முறையில் இரண்டாவதாக ஒரு குழந்தையை ஈன்றெடுக்கலாம். மருத்துவ விஞ்ஞான முறையில், நீண்ட உடலுறவைச் சுவை குன்றாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த நிலைகளில் குறைபாடுகள் நிறையாக மாறி, அவளுடைய மனம் ஆனந்தத்தில் திளைக்கும் என்று எண்ணத் தோன்றும். அத்துடன், ஜோதிடக் கோட்பாட்டை பொய்யாக்கிய பெருமையும் சேரும். ஆனால், இந்த விஷயங்களில் அவளைச் செயல்படாமல் தடுப்பது அவள் மனம்.

சிந்தனையானது, அனுபவிக்கக் காத்திருக்கும் துயரத்தை எட்டும் வகையில்தான் செயல்படும் (புத்தி: கர்மானுஸாரிணீ). எவரும் கெடுதலை விரும்புவதில்லை. நல்லதையே எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், நல்ல முறையில் சிந்தனை செயல்பட்டும் கெடுதலை அடைந்தவர்கள் ஏராளம். அதேநேரம், எதையும் எதிர்பார்க்காமல் கடமை உணர்வோடு செயல்பட்டு, நன்மையை அடைந்து மகிழ்ந்தவர்களும் உண்டு. மனம், அதன் தரம், அதன் போக்கு ஆகியவற்றை நிர்ணயிப்பது சுக்கிரனின் த்ரிம்சாம்சகம். இப்படியான நிலையில், நமது சிந்தனை வளம் அவளை ஈர்க்காது.  இதுபோன்ற தருணங்களில் தான் 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது’ என்று சொல்லி, ஜோதிடத்துடன் பொருதி தோல்வியுற்ற மனம் துயரத்தை ஏற்றுக்கொள்கிறது.

விடை காண இயலாத விசித்திரங்கள்!

மகப்பேறு எட்டாத தம்பதிகள் ஏராளம். விஞ்ஞான மருத்துவத்தாலும் பயனடையாதவர்கள் ஏராளம். பலமுறை விவாகரத்தைச் சந்தித்தும் முழுமையான இன்பத்தை எட்டாதவர்களும் ஏராளம். பட்டமும், பதவியும், பணமும் இருந்தும் திருமணம் ஆகாமலேயே இருப்பவர்கள் ஏராளம். பல குழந்தைகளை ஈன்றெடுத்தும், முதுமையில் பாதுகாப்பு இல்லாமல் தவிப்பவர்களும் ஏராளம். எல்லா வசதியும் இருந்தும், நல்ல குடிமகனாக வாழ இயலாதவர்கள் ஏராளம். செல்வச் செழிப்பு இருந்தும் சுவையான, தரமான உணவுக்கு ஏங்குபவர்கள் ஏராளம். ஏழ்மை இருந்தும் வாழ்க்கையில் எதிர்பாராத பல நன்மைகளை அனுபவித்தவர்கள் ஏராளம். ஆலமரம் போல் விரிந்து பரந்து வளர்ந்த மருத்துவ விஞ்ஞானம் இருந்தும், நோய் நொடியில் தத்தளிப்பவர்கள் ஏராளம். 'எந்த நோய்க்கும் தீர்வு உண்டு’ என்று நம்பிக்கையை ஊட்டும் இன்றைய மருத்துவத்தில், நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் கைகழுவிவிடும் மருத்துவர்களும் ஏராளம்!  

தூக்குத்தண்டனைக்கு அழைத்துச் செல்லப்படுபவன் விடுதலையாகிறான். கொலைகொள்ளைகளிலும் கற்பழிப்புகளிலும் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். நிரபராதி தண்டனைக்கு ஆளாகிறான். அபராதி தப்பித்துக்கொள்கிறான். பிறரது உழைப்பில் தன்னை வளர்ப்பவர்கள் இருக்க, உழைத்து ஓடாகத் தேய்ந்தும் நிம்மதியை எட்டிப்பிடிக்க முடியாதவர்களும் உண்டு. இப்படியான விசித்திரங்களுக்கு எல்லாம் விஞ்ஞானத்தால் விடைகாண முடியவில்லை. சிந்தனைச் சிற்பிகளும் மௌனமாக இருக்கிறார்கள்.

வருங்காலத்தை சொல்லும் வரைபடம்!

மனமிருந்தும், சிந்தனையில் தெளிவு இருந்தும், உடல் ஆரோக்கியம் இருந்தும், சரியான முறையில் செயல்பட்டும் வெற்றி காண இயலவில்லை. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் வெற்றிகண்டவர்கள் ஏராளம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

வெற்றியை ஈட்டித் தந்தது எது, அதை இழக்க வைத்தது எது என்று வரையறுத்துக் கூறும் சிந்தனையாளர்களைக் காண முடியவில்லை. எல்லாம் நிரம்பி இருந்தும், அனுபவத்தில் ஒரு குறையோடுதான் வாழ்க்கையில் தென்படுகிறான். மேடு பள்ளமான வாழ்க்கைப் பயணத்தையே அனுபவத்தில் உணர்கிறான். உண்மையான நிறைவை எட்டாமலே போலியான நிறைவில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறான்.

சிந்தனையாளர்கள், சூழலுக்கு உகந்தவாறு வெற்றிக்கும் தோல்விக்கும் காரணத்தைக் காட்டி, முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஜோதிடம் ஒரு சாஸ்திரம். அது வருங்காலத்து வரைபடத்தைப் போட்டுக்காட்டும். அதன்படி செயல்பட்டால் துயரம் தொடாத வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று சொன்னால், புது சிந்தனையாளர்களின் மனம் ஏற்காது. அதற்குக் காரணம், அவர்கள் பிறந்த வேளையின் தரமானது, பிறர் சொல்வதை ஏற்காத வகையில் அவரது சிந்தனையைச் செயல்பட வைத்திருக்கிறது.

மன இயல்பை அடிப்படையாகக் கொண்ட பலித ஜோதிடம் எந்த வகையிலும் தோல்வியைச் சந்திக்காது. 'எனக்கு வாழ்க்கையில் இந்த அளவைத்தான் எட்ட முடியும்’ என்று முன்பே தெரிந்து இருந்தால், அதில் திருப்தி ஏற்பட்டுவிடும்; தேவையில்லாமல் துயரத்தை சுமக்கும் வேலை இருக்காது. கிடைத்த வாழ்க்கையில், திறமைக்கு ஏற்ற அனுபவத்தை அடைந்து நிம்மதி பெறலாம்.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism