சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
##~##
ண்டவன் அடியெடுத்துக் கொடுக்க, அடியார்கள் புராணம் பாடியது உண்டு; காவியம் படைத்தது உண்டு. தன் சம்பூர்ண காவியத்தைக் கடவுளே பக்தருக்குள்ளிருந்து பாடுவது அற்புதமல்லவா?! பகவான் சத்யசாயி பாபா நிதமும் மனதில் தோற்றுவிக்கும் கவிதைகளை, 'ஸ்ரீசத்யசாயி சரிதம்’ என்ற காவியமாக்கி, மூன்று பகுதிகளில் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டிருக்கிறார் சாயிபக்தை கமலா சடகோபன். இந்தப் பக்தையிடம் சுவாமி பேசுவது, பதில் சொல்வது, பிற பக்தர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வது எல்லாமே கவிதையில்தாம்! முதலில்... புரிந்துகொள்வதும், மற்றவர்களுக்குப் புரிய வைப்பதும் சிரமமாக இருந்தது. இப்போது இயல்பாகிவிட்டது. மும்பை 'மலாடு’ பகுதியில் வசிக்கும் இந்தப் பக்தை, எழுத்தாளருமில்லை; கவிஞருமில்லை. துவக்கத்தில், கவிதையில் இவருக்கு ஈடுபாடும் இல்லை. 1990-ஆம் வருடத்தில் இருந்து, பல ஆண்டுகளாக இவருக்குள்ளிருந்து கவிதை பாடிக் கொண்டிருக்கிறார் பகவான் பாபா.

'பர்த்தி என்றொரு பட்டினமாம்
பாபா என்றொரு ரத்தினமாம்
பாரில் மக்கள் துயர்தீர
வந்த வதரித்தார் அங்கே சத்யமாய்..!''

- என்று தொடங்குகிறது 'ஸ்ரீசத்யசாயி சரிதம்.’

'எத்தகைய தத்துவமும்
அவருரைத்தால் எளிதாகும்
எமக்கென அவர் வந்தார்
எமைத்துலக்கிப் பொலியவைப்பார்’

- என்று தெய்விகத்தை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது சாயி காவியம். ஆண்டவனுடைய சொல், தொடர், வாக்கியம் எப்படி அமைந்தாலும் அவை ஆண்டவனின் அருளும் ஆசீர்வாதமும், சக்தியும் காவலும் பரிபூரணமாகக் கொண்டவை! 'பாராயண நூலாகிய இந்தச் சரிதத்தை உள்ளன்போடு வாசிக்கும் பக்தர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்து, அவர்களைக் காப்பேன்’ என்று சுவாமி சத்யசாயி பாபா இந்த பக்தையிடம் கூறியிருக்கிறார். புட்டபர்த்தியிலும், சென்னை சுந்தரத்திலுமாகக் கிடைக்கும் இந்தப் பாராயண நூலின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை வெளியிடத் தயார் செய்து கொண்டிருக்கிறார் கமலா சடகோபன்.

இப்போதெல்லாம் இவருக்குள் சுவாமி பாபா, 'பேச்சு நடையிலேயே’ பதில் சொல்கிறார். கவிதை தமிழிலும், பதில் ஆங்கிலத்திலுமாக இருக்கிறது. இங்கு பாபாவிடம் பிரார்த்தித்து, பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களையும், பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் உடனுக்குடன் கூறி, துன்புற்றோர்க்கு பரம சாந்தியை அளிக்கிறார். 'எண்ணற்றவர்களுடைய துயரங்களை உன் மூலம் தீர்த்து, அவர்களுக்கு நல்வழி காட்டுவேன்’ என்று இந்த பக்தையிடம் கூறியிருக்கிறார் சுவாமி. உன்னதமான சாயி சேவையாய் இந்த தெய்வத் திருப்பணியைச் செய்து வருகிறார், எழுபது வயது கமலா சடகோபன்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஒருநாள்... சுவாமி வந்து 'பஜன் செய்’ என்றார். அப்போது எந்த பஜனும் இவருக்குத் தெரியாது. சுவாமியிடம் இதைச் சொல்ல, முதல் புதன்கிழமை, கணபதியில் தொடங்கி குரு, அம்பாள், சிவனார், ஸ்ரீராமர்... என்று அடுத்த புதன்கிழமை வரை ஒரு 'செட்’ பஜன்களை வரிசைக்கிரமமாக சுவாமியே இவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

பர்த்தியில் சுவாமி தரிசனத்தின்போது, ஏதோ ஒரு பிரச்னை யிலிருந்து தன்னைக் காப்பாற்றவேண்டும் என்று கமலா சடகோபன் முறையிட்டபோது, ''65 வருஷமா அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்'' என்று புன்னகையுடன் சொன்னார் சுவாமி. அப்போது சுவாமியின் வயது 65. அவதாரம் தோன்றியதிலிருந்து, 'காப்பாற்றுதலை’த்தானே செய்து கொண்டிருக்கிறது! தனக்குள் சுவாமி இருப்பதாக ஒவ்வொரு கணமும் உணர்வதாகச் சொல்கிறார் இந்த பக்தை. சமையல் செய்யும்போது சுவாமி பாகம் சொல்வார். சர்க்கரை வள்ளிக்கிழங்கு செய்யும்போது சுவாமிக்கு இது பிடிக்குமோ என்னவோ என்று நினைத்தபோது, 'எனக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றார் சுவாமி. 'புடலங்காய் வேண்டாம்’ என்பார். உப்பில்லை என்றால், 'உப்பு’ என்று குரல் கொடுப்பார்.

ஒருமுறை, பூஜையறையில் உட்கார்ந்து கமலா 'சஷ்டி கவசம்’ படித்துக் கொண்டிருந்தபோது, இவர் உட்கார்ந்திருந்த உயரத்தில் வந்து நின்றார் பாபா. க்ஷண நேரத்தில் இவருக்குள் போய்விட்டார். 'ஐயையோ... தனக்குள் போனவர் வெளியே வரவில்லையே’ என்று இவர் பயந்திருக்கிறார். அதற்குப் பிறகு, இரண்டு பாதங்களும் ஆரஞ்சு அங்கியும் தெரிந்தன. 'தொம்’மென்று ஒரு குதி! மறுபடியும் உள்ளே போய்விட்டார். 'என்னிடம் இருந்த வேண்டாத குணங்களையெல்லாம் வெட்டி எறிந்துவிட்டார், சுவாமி! என் கனவுகளில் சுவாமி தொடர்ந்து வருவது உண்டு’ என்கிறார் கமலா.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

''கேரளாவுக்குப் போகவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்து, ஒருமுறை கணவர், பிள்ளை, மருமகள் மற்றும் பேரக் குழந்தை சகிதம் குடும்பத்துடன் மே முதல் வாரத்தில் 'டெம்போ’வில் ஏறி, பயணம் மேற்கொண்டோம்'' என்று அந்த அனுபவத்தை விவரிக்கிறார் கமலா.

புறப்படுவதற்கு முன், இவரின் கணவருக்கு ஒரு மலையாளி நண்பர் ஃபோன் செய்து, ''என்ன நீங்கள்... கேரளாவில் வெயில் கொளுத்துகிறது. இந்த நேரத்தில் சுற்றிப் பார்க்க வருகிறீர்களே?!’ என்று சொல்லியிருக்கிறார். உடனே கணவர் சடகோபன் கமலாவிடம், 'என்ன நீ, இப்படி வெயில் நாளில் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறாய்?’ என்று சத்தம் போட்டார். 'இதென்ன சுவாமி, இப்படியரு  பிரச்னை! நீதான் இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். கடுமையான வெயிலில் எப்படிச் சுற்றுப் பயணம் போவது? ஏற்பாடு செய்ததைத் தள்ளிப் போடவும் முடியாது. நீதான் இந்தப் பிரச்னையைத் தீர்த்து, எங்களைக் காக்க வேண்டும்’ என்று பாபாவிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார் கமலா.

அன்று, சுவாமி குரு கனவைத் தந்தார். கோர்ட்டிலிருக்கும் 'டவாலி’யாக தோளில் சிவப்புப்பட்டை அணிந்தபடி கையில் 'பங்கா’ (அந்த நாள் விசிறி) வைத்தபடி வந்தார். கையிலிருந்த விசிறியால் அப்படியும் இப்படியுமாக வீசி விட்டுச் சென்றார். ஒன்றும் புரியவில்லை. ''அடுத்த நாள், நாங்கள் கேரளப் பயணத்தைத் துவங்கி விட்டோம். அங்கே போனதும், வானம் மூட்டம் போட்டிருந்தது. எங்கும் 'குளுகுளு’ என்றிருந்தது. கோட்டயம், டீ எஸ்டேட், வண்டிப் பெரியார், நாகர்கோவில், கன்னியாகுமரி வரை வெயில் என்பதே இல்லை. 'ஜிலுஜிலு’ என சுகமாய்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. சுவாமி பாபாவின் அருளால், கேரளப் பயணம் ஆனந்தமாக அமைந்தது! எல்லாம் ஆசை தீரப் பார்த்துவிட்டுக் கடைசியில் திருநெல்வேலிக்கு வரவும், கடுமையாய் வெயில் கொளுத்தத் தொடங்கியது. அன்றைக்கு சுவாமி தந்த கனவு, இப்போது புரிந்தது. சுவாமி 'டவாலி’யாக வந்து 'பங்கா’வை இழுத்து, அப்படியும் இப்படியுமாக விசிறி... கேரளாவையே குளிர வைத்துவிட்டார்! சுவாமிக்கு நன்றி சொல்லியபடியே திரும்பினோம்'' என்று சொல்லும் கமலா, தன்னுடைய சிக்கலைத் தீர்க்க சுவாமி தந்த இன்னொரு விசித்திரக் கனவையும் தெரிவித்தார்.

எப்பேர்ப்பட்ட அற்புத அனுபவம் தெரியுமா அது?!

- அற்புதங்கள் தொடரும்

'அமெரிக்காவுக்குப் பறந்த மருந்து!’

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது.

எங்களின் மகளுக்கு வளைகாப்பு முடிந்த கையோடு, வாஷிங்டனுக்குச் செல்ல நேர்ந்தது. மருமகனுக்கு அங்குதான் உத்தியோகம். இந்தியாவில் மகப்பேறு மருத்துவரால் எழுதித் தரப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாள் எங்கள் மகள். இந்த நிலையில், ''அந்த மாத்திரைகள் இங்கு கிடைக்கவில்லை. அந்த மாத்திரைகளை வாங்கி, உடனே அனுப்பிவையுங்கள். அவசரம்!'' என்று தொலைபேசியில் அழைத்துச் சொன் னார் மருமகன். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. தபாலில் அனுப்ப வும் முடியாது; அப்படியே அனுப்பி னாலும், போய்ச் சேர தாமதமாகி விடுமே என்று தவித்துப் போனோம். பகவான் ஸ்ரீசாயிபாபாவைப் பிரார்த்தித்தபடியே இருந்தோம்.  

அப்போது, எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர், அன்று இரவு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார் என்கிற விஷயம், நண்பர் ஒருவர் மூலமாகத் தெரிய வந்தது. முதல் கட்டமாக, நகரெங்கும் அலைந்து தேடி, பல கடைகளில் (ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருந்துக் கடைகள் பலவும் மூடியிருந்தன) ஏறி இறங்கி, ஒருவழி யாக மருந்து- மாத்திரைகளை வாங்கிவிட்டோம். அடுத்து, அமெரிக்கா செல்லும் அன்பரின் வீட்டைக் கண்டுபிடிப்ப தற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கதவைத் தட்டினால், சிறுமி ஒருத்தி மட்டுமே வீட்டில் இருந்தாள். விசாரித்ததில், அவர் தனது மாமா என்றும், அவரும் அத்தையும் பயணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருப்பதாகவும் தெரிவித்தாள்.

பரிதவிப்புடன் காத்திருந்த வேளையில், உள்ளே ஹாலில் ஸ்ரீசத்யசாயி பகவானின் திருவுருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் அபய ஹஸ்தம் காட்டிப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் பாபா. சட்டென்று மலர்ச்சியானது எங்கள் முகம். அங்கே, சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தோம். ஆனால், வெளியே சென்றிருந்தவர்கள் அப்போதும் வரவில்லை. அந்தச் சிறுமி எங்களிடம் வந்து, ''மருந்து- மாத்திரை பற்றி எங்கள் அத்தையும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள். அதை அவர்கள் வந்ததும் தருகிறேன். நிச்சய மாக, அதைக் கொண்டு போய் அமெரிக் காவில் உங்கள் மகள் வீட்டில் சேர்ப்பார் மாமா'' என்றாள் அந்தச் சிறுமி.

அதன்படி, மருந்துக் கவரையும் மருமகனின் முகவரியையும் கொடுத்துவிட்டு வந்தோம். பிறகு, எங்களுக்கு இந்த அன்பரைப் பற்றிய தகவலையும், முகவரியையும் தந்து உதவிய நண்பரைச் சந்தித்து நன்றி கூறலாம் என அவருடைய வீட்டுக்குச் சென்றோம். என்ன ஆச்சர்யம்... அங்கேயும் ஹாலில் பெரிய புகைப் படத்தில் அபயக் கரத்துடன் புன்னகைத்துக் கொண் டிருந்தார் பகவான் பாபா. இந்தச் சிலிர்ப்புடனேயே வீடு வந்து சேர்ந்தோம்.

செவ்வாய்க்கிழமை, மருமகன் போன் செய்து பேசினார். 'நேற்றைக்கே மருந்து- மாத்திரைகள் வந்துவிட்டன. விரைவுத் தபாலில் அனுப்பியிருந் தால்கூட, இந்நேரம் கிடைத்திருக்காது. உங்கள் மகள், மருந்தை உட்கொள்ளத் துவங்கிவிட்டாள்'' எனப் பூரிப்புடன் சொன்னபோது, சாயியின் கருணையும் அவருடைய பக்தர்களுக்கு சக மனிதர்கள் மீது இருக்கிற வாஞ்சையும் புரிந்து, வியந்தோம்!

- சுசீலா ஜெயராமன், சென்னை-26