Published:Updated:

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

Published:Updated:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கணவாய் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். இவரை, தேனி மாவட்டத்தின் எல்லைத் தெய்வம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஒருகாலத்தில், கொலை வழக்கு ஒன்றில் அண்ணன் - தம்பி இருவரும் சிக்கிக்கொள்ள, ஊர் மக்களால் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள். 'செய்யாத குற்றத்துக்கு இப்படி தண்டனை அனுபவிக்க வேண்டுமா’ என்று நொந்து போனவர்கள், கணவாய்ப் பகுதி வழியே மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இதை அறிந்த அவர்களின் தங்கை, தன் சகோதரர்களைக் காணும் பொருட்டு, தானும் அந்த வழியே பயணப்பட்டாள். வழியில் ஊர்மக்கள் அவளைப் பார்த்து, ஆவேசமானார்கள். அவளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி, அடித்து உதைத்தார்கள். 'நான் எதுவும் திருடவில்லை. என்னைக் கொன்ற பாவம் உங்களைச் சும்மா விடாது’ என்று சபித்துவிட்டு இறந்தாள் அவள். பின்னர் தங்கள் தவற்றை உணர்ந்த ஊர்மக்கள், 'எங்களை மன்னித்துவிடம்மா! உன்னைக் கன்னி தெய்வமாக வழிபடுகிறோம். நீ இறந்த இடத்தில், காசுகளை வைத்து உன்னைச் சாந்தப்படுத்துகிறோம்’ என்றனர்.  

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், ஊர் எல்லையில் காவல்தெய்வமாக ஸ்ரீதர்ம சாஸ்தாவின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வது எனத் தீர்மானித்தனர். அதன்படி எழுப்பப்பட்டதே தர்மசாஸ்தா கோயில் என்கிறது ஸ்தல வரலாறு.

அன்று முதல், இன்றளவும் பயணம் மேற்கொள் பவர்கள், தர்மசாஸ்தாவை மனதார வேண்டிச் சென்றால், பயணத்தில் பாதுகாப்பாகவும், பூட்டிய வீட்டு்க்குக் காவலனாகவும் இருந்து காத்து வருகிறார் என்பது ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து, இங்கே உள்ள சாலிமரத்தில் (ஒருவகையான காட்டு முள்மரம்) துணியைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர். கன்னிதேவதையின் நினைவாக சூலாயுதமும், விளக்குத் தூணும் அமைத்து வழிபடுகின்றனர். பேருந்தில் இந்தப் பகுதி வழியே செல்லும் பயணிகள், அவளை மனதார வேண்டிக்கொண்டு, கோயிலை நோக்கிக் காசுகளை இறைத்துச் செல்வதை இன்றைக்கும் காணலாம்.

குற்றங்களைத் தடுப்பார் கணவாய் தர்மசாஸ்தா!

பொய் வழக்கில் சிக்கித் தவிப்பர்கள் இங்கு வந்து வேண்டினால், விரைவில் அவர்களை அதில் இருந்து விடுவித்து அருள்வாராம் தர்மசாஸ்தா. அமாவாசை, பெளர்ணமி நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.  

-  ம.மாரிமுத்து

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism