Published:Updated:

சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

வேள்வி தரிசனம்!

சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

வேள்வி தரிசனம்!

Published:Updated:

''தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பார்கள். உலகில் உள்ள அனைவருமே அன்னையின் மூலமாகவே பிறந்தோம். அந்த அன்னையையும் இன்னொரு அன்னைதான் ஈன்றெடுத்தாள். அதனால்தான் அம்மா, மனைவி, மகள், பேத்தி என எந்த உறவில் இருந்தாலும், உலகத்துப் பெண்கள் அனைவரையும் மகாசக்தியாகவே பார்க்கிறது இந்து மதம். அப்படி, சக்தியின் அம்சமாகத் திகழும் பெண்களையே போற்றிக் கொண்டாட வேண்டும் எனும்போது, உலகுக்கே தாயாகத் திகழும் பராசக்தியை இன்னும் எவ்வளவு கொண்டாட வேண்டும்?! அந்தக் கொண்டாட்டத்தின் வகைகள்தான் அம்பிகைக்கு அபிஷேகம் செய்வது, அலங்காரங்கள் பண்ணுவது, பூமாலைகள் சூட்டுவது, நைவேத்தியங்கள் படைப்பது, தீபதூப ஆராதனைகள் மேற்கொள்வது, யாகங்கள் வளர்ப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்கிறார், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர்.

சென்னை - பாரிமுனையில், தம்புசெட்டித் தெருவில் உள்ளது ஸ்ரீகாளி காம்பாள் திருக்கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதத் தலம் இது. இங்கே ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியும் பிரமாண்டமாக தரிசனம் தந்து, தீயவற்றை அழித்து, நல்லனவற்றைப் பெருக்கி அருள்பாலிக்கிறாள்.

சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

''ஸ்ரீகாளிதேவியும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியும் உக்கிரமானவர்கள். அசுரக் கூட்டத்தை அதாவது தீய சக்திகளை அழிப்பதற்காக உருவெடுத்த மகா சக்தியான இவர்களுக்கு ஹோமங்கள், விசேஷ பூஜைகள் நடத்துவது மிகப் பெரிய பலனைத் தரும். குறிப்பாக, பிரத்தியங்கிரா தேவிக்கு மகா சாந்தி ஹோமம் செய்வது கூடுதல் பலனை வழங்கும்'' என்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

சந்தோஷமும் சமாதானமும் தரும் மகா சாந்தி மகா யாக பூஜை!

இந்தக் கோயிலில், 10.11.14 முதல் 21.11.14 வரை 12 நாட்கள் மகாசாந்தி மகா யாகம் சிறப்புற நடைபெற்றது. இந்த 12 நாட்கள் இப்படி ஒரு மகா யாகம் செய்தால், ஸ்ரீகாளிகாம்பாளுடன் தசமகா வித்யாதேவிகள், தசமகா மாத்ரு தேவிகள், மற்றும் 16 வகையான தேவதைக் கூட்டங்கள், அகோர வீரபத்திரருடன் அஷ்ட பைரவர்கள், ருத்திரர்கள், மகா சாஸ்தா, அஷ்ட வசுக்கள் என அனைவரும் இந்த யாகத்தால் குளிர்ந்து போவார்கள் என்பது ஐதீகம். ''மகா சாந்தி மகா யாகத்தில் தினமும் ஒவ்வொரு ஹோமமாக நவகிரக ஹோமம், திரிசக்தி பூஜை, ருத்ர ஹோமம், சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீகாளி நவாவரண ஹோமம், ஸ்ரீகாளி மாத்ரு ஹோமம், ஸ்ரீபத்ரகாளி நவாவரண ஹோமம், ஸ்ரீபிரத்தியங்கிரா நவாவரண ஹோமம், ஸ்ரீதிரிபுர பைரவி ஹோமம், ஸ்ரீவாராஹி ஹோமம் என நடத்தினோம். அம்பாளுக்கு அரளிப்பூக்களாலும், தாமரை மலர்களாலும் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்த மகாசாந்தி மகா யாகத்தின் பயனாக உலகில் அமைதி நிலவும்; எல்லா வளங்களும் பெருகும்; துயரங்கள் அகலும்; குறைகள் அனைத்தும் களையப்படும்; நோய்கள் நீங்கும்; நம் தேசத்தின் தரித்திரங்கள் அகலும்; துர்மரணங்கள் சம்பவிக்காது; அன்பும் அமைதியும், சந்தோஷமும் சமாதானமும் பெருகும். பெண்கள் தங்கள் சக்தியை இன்னும் அதிகம் வெளிப்படுத்துவார்கள். ஒற்றுமையுடனும், உண்மையுடனும் நிம்மதியாகவும் நிறைவாகவும் நம்மை எல்லாம் வாழச் செய்வாள் ஜகன்மாதா'' என்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

உலக மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ, அந்தப் பராசக்தி துணைபுரியட்டும்!

- வி.ராம்ஜி, படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism