Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

Published:Updated:
அருட்களஞ்சியம்
அருட்களஞ்சியம்
அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`குறள் வழி நடப்போம்!'

(பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம் பிரசுரித்த ‘திருக்குறள் நூற்றெட்டு’ என்ற நூலுக்கு, ஸ்ரீகாஞ்சி காம கோடி பீடாதிபதிகள் ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள் அருளிய ஆசிச் செய்தி.)

“வேதங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும், இதிகாஸ புராணங்களிலும் துலங்கும் தர்மங்கள், தெய்வப் புலமை திருவள்ளுவரது அழியாப் புகழ்பெற்ற திருக்குறளிலும் மிளிர்வதைக் காண்கிறோம்.

அருட்களஞ்சியம்

மனிதன் தேவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை, பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கடமை, அதிதி பூஜை இவையும், மறு பிறப்பும், சுவர்க்க நரகங்களும், பார்ப்பார்க்கும் பிறப்பையொட்டிய ஒழுக்கமும், மறை ஓதல் முதலிய அறு தொழில்கள், நான்கு ஆச்ரமங்கள், யக்ஞங்கள், யக்ஞங்களால் மழை சரிவரப் பொழிதல், பதிவ்ரதா தர்மம், கோ ஸம்ரக்ஷணம், இவற்றுக்கெல்லாம் காரணமான செங்கோலையுடைய க்ஷத்ரிய தர்மமும், நேர்மை கோணாத வைச்ய தர்மமும், பிறந்தோரெல்லோருக்கும் இன்றியமையாத பேரன்பாம் பகவத் பக்தியும், அதன் பயனாம் பகவானுடைய லோகத்தைச் சேர்ந்து நீடூழி வாழ்தலும், எல்லாப் பொருள்களுடைய உண்மை நிலையான பரம்பொருளின் தத்வ ஞானத்தினால் அவித்யை என்னும் இருள் நீக்கி அழியாச் சிறப்பாம் மோக்ஷ நிலையில் நிற்றலும், இன்னும் அநேக விதமான தர்மங்களும் குறளைப் படிப்போருள்ளத்து பசுமரத்தாணிபோல் பாய்வதைக் காண்கிறோம்.

காமகோடி கோசஸ்தானத்தில் வெளியிடப்படும் இப் பதிப்பில், இத்தகைய தர்மங்கள் மலிந்து நிற்கும் சில குறள்கள் தொகுக்கப்பட்டு, முறையே இதே பொருள்களைக் கொண்டுள்ள சாஸ்திர வாக்கியங்களும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இச்சாஸ்திர வசனங்களையும், அவற்றுக்குச் சரியான குறள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுக்கொன்று அர்த்தபுஷ்டியைக் கொடுத்துக்கொண்டு, கலைஞர்களுக்குக் கலைச் சுவையைப் பெருக்குவது மாத்திரமல்லாமல், மனிதன் தானெடுத்த பிறப்பை எந்த முறையில் உபயோகப்படுத்திக் கொண்டால், இம்மையிலும் மறுமையிலும் தாழ்நிலை எய்தாமல், இறுதியாக இம்மையும் மறுமையுமற்ற ஞான நிலையில், அழிவும் அசைவுமற்ற நிறைவை அடையலாம் என்பதற்கு ஒரு வழித்துணையாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் எல்லோரும் இப் பெரு நூலைத் துணை கொண்டு அறவழியே நடந்து, தம்தம் ஆத்மாவுக்கும், மரபுக்கும், நாட்டுக்கும் பெரும் சிறப்பைத் தேடியடைவார்களாக என ஸ்ரீசந்திர மெளளீச்வரர் சந்நிதானத்தில் பிரார்த்திக்கின்றோம்.”

1.12.1963 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism