னேஷணை, தாரேஷணை, புத்ரேஷணை. அதாவது, காசு- பணத்தின் மீது, மனைவி மீது, பிள்ளைகள் மீது என மூன்று ஆசைகள் உண்டு.

உலகில் உள்ள அனைவரும் ஆடுவதும் ஓடுவதும், பம்பரமாகச் சுழலுவதும் இந்த மூன்றுக்காகத்தான். ஓடி ஓடி, பல வழிகளிலும் பணத்தைச் சேர்ப்பது மனைவி, மக்களுக்காகத்தான். பணத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, அதைத் தவறான வழியிலேனும் சம்பாதித்துக் குவிப்பது, மனைவி மக்களுக் காகவே! அந்தத் தருணத்தில், பாவ- புண்ணியம், நரகம் என்பது பற்றியெல்லாம் யாரும் யோசிப்பதே இல்லை.

முறையற்ற வழியில் கிடைத்த பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால், பாவத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும் சக்தி, அந்தப் பணத்துக்கு இல்லை. தவிர, நம்முடைய பாவத்தில் பங்கு கொள்ள மனைவி மக்கள்கூட வரமாட்டார்கள்; வரவும் முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை நமக்கு விளக்குவதற்காகவே, வால்மீகி ஆரம்பத்தில் திருடனாக இருந்தார். அப்போது நாரத மகரிஷி அவரிடம் வந்து, ‘‘நீ சம்பாதிக்கும் காசு பணத்தில் பங்கு பெறும் உன் மனைவியும் மக்களும், நீ செய்யும் பாவத்திலும் பங்கு பெறுவார்களா எனக் கேட்டு வா!’ என்று சொல்லி அனுப்பினார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 5

அதன்படி வால்மீகியும் போய்க் கேட்க, ‘‘உன் பாவத்தில் நாங்கள் பங்கு பெற முடியாது” எனச் சட்டென்று பதில் வந்தது, அவர்களிடம் இருந்து. அதன்பின், வால்மீகி திருந்தினார் என்பது கதை.

ஆகவே தனேஷணை, தாரேஷணை, புத்ரேஷணை எனும் வலையில் அகப்பட்டுக்கொண்டால், நாம் செய்யும் பாவங்கள் நம்மைத் தாக்கும் என்பதை நாம் உணரவேண்டும். அப்படித் தாக்கப்பட்ட ஒருவன், அதிலிருந்து தப்பிப்பதற்காக குருநாதரைத் தேடிப் போய், அவர் திருவடிகளில் விழுந்து, ‘‘என்னைக் காப்பாற்ற வேண்டும்” என மன்றாடினான்.

அவனுக்கு குருநாதர் மூன்று விதமான தீட்சைகளை அளித்தார்.

அன்னதன் சிசுவை ஐயன்
ஆமை மீன் பறவை போலத்
தன்னகம் கருதி நோக்கித்
தடவிச் சந்நிதி இருத்தி
உன்னது பிறவி மாற்றும்
உபாயம் ஒன்று உண்டு சொல்வேன்
சொன்னது கேட்பாய் ஆகில்
தொடர் பவம் தொலையும் என்றான்
                                                                                 (தத்துவ விளக்கப் படலம்: 8)

இந்தப் பாடலில், மூன்று விதமான தீட்சை களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை இந்தப் பாடல் விவரிக்கும் விதம் அற்புதம்!

1. ஆமை போலத் தன் அகம் கருதி
2. மீன் போல நோக்கி
3. பறவை போலத் தடவி

அதாவது, ஆமை கரையில் முட்டைகளை இட்டுவிட்டுத் தண்ணீருக்குள் போய்விடும். அங்கிருந்தவாறே அது கரையில் உள்ள முட்டை களை நினைக்க நினைக்க, அதன் பலனாக கரையில் உள்ள முட்டைகள் பக்குவம் அடைந்து, குஞ்சுகள் வெளிப்படும். இவ்வாறு மனதாலேயே நினைத்து அருள் புரிவது, மானச தீட்சை எனப்படும்.

அடுத்தது, மீன். இது தண்ணீரில் நீந்தும். மீன் குஞ்சுகள் தாயைப் பின் தொடரும். அப்போது தாய் மீன் திரும்பிப் பார்க்கும். அந்தப் பார்வையிலேயே, மீன் குஞ்சுகள் பசியாறும்; அதாவது, மீன் தன்
குஞ்சுகளுக்குப் பார்வையாலேயே உணவு ஊட்டும். அதுபோல, கண்களாலேயே சீடனுக்கு அருள்புரிவதை, நயன தீட்சை என்பார்கள்.

அடுத்து, பறவைகள். அவை தங்கள் குஞ்சுகளை இரு சிறகுகளாலும் அணைத்து, உணவு ஊட்டும். அதுபோல, சீடர்களைத் தொடுவதன் மூலம் (ஸ்பரிசிப்பதன் மூலம்) ஞானத்தை ஊட்டுவது, ஸ்பரிச தீட்சை எனப்படும்.

‘‘என்னங்க அந்த தீட்சை, இந்த தீட்சைனு சொல்லிக்கிட்டு..? எதுக்கு இத்தனை தீட்சை? இந்தக் குருநாதருங்கள்லாம் ஏதோ ஒரு வகையில சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே?” என்று, இந்த அவசர யுகத்தில் எவரேனும் கேள்வி எழுப்பலாம்.

நன்றாக யோசித்துப் பாருங்கள்; நமது சாதாரண தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும் இந்த மூன்றும் தேவை!

முதலில், ஒரு சூப்பர் மார்க்கெட் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அங்கே நமக்குத் தேவை என்னவோ, அதை மனதால் நினைக் கிறோம். அது ‘மானச தீட்சை.’

பிறகு, அதைத் தேடி, கண்ணால் பார்க்கிறோம். அது, ‘நயன தீட்சை’. அதன்பின், நாம் பார்த்த பொருளைக் கைகளால் எடுக்கிறோம். அது ‘ஸ்பரிச தீட்சை’.

ஒரு சாதாரண் பொருளைப் பெறுவதற்கே, இந்த மூன்றும் தேவையாக இருக்கிறதே! அப்படியிருக்க...

முக்தி எனும் எல்லையான செல்வத்தை அடைய வேண்டும் என்றால், அதை அடையத் தகுதியுள்ள சீடன் யார் என அடையாளம் காண வேண்டும் என்றால்... இந்த மூன்று தீட்சைகளும் மிக மிக அவசியம்தானே?

- தொடரும்