Published:Updated:

ராசிபலன்

டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்

மனவலிமை மிக்கவர்களே!

 ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புதுவேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புதனும் சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு உண்டு.

வீட்டைக் கட்டி முடிக்க எதிர் பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடங்கியிருப்பதால், சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். 

இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் நேரம் இது.

ராசிபலன்

செயல்திறன் அதிகம் உள்ளவர்களே!

கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்க முடியும். வி.ஐ.பி.களின் உதவியால் தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சுக்ரனும், பூர்வ புண்யாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வராது என்றிருந்த பணம் வரும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

சூரியன் 8ல் நிற்பதால், முன்கோபம், சிறுசிறு காயங்கள், உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வந்து நீங்கும். கண்டகச் சனி தொடங்கியிருப்பதாலும், 5ம் இடத்தில் ராகு நிற்பதாலும், தர்ம சங்கடமான சூழ்நிலை, மனைவிக்கு உடல்நலக் கோளாறு, மூட்டு வலி வந்து நீங்கும். 3ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால், வேலைச்சுமை, ஏமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.

தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் காலம் இது.

ராசிபலன்

நல்லது செய்தே நலிந்தவர்களே!

சனிபகவான் வலுவாக 6ம் வீட்டில் அமர்ந்ததால், தன்னம்பிக்கை துளிர்விடும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும்.

சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

2ல் குரு வலுவாக இருப்பதால், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சூரியன் 7ல் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சி வசப் படுவீர்கள். மனைவிக்கு கர்பப்பை வலி வந்து நீங்கும். 1ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால், தடைகள், வீண் செலவுகள், சகோதர வகையில் இருந்த மனவருத்தங்கள் விலகும்.

வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

அதிரடி வளர்ச்சி காணும் தருணம் இது.

ராசிபலன்

சிந்தனைச் சிற்பிகளே!

சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 28ம் தேதி முதல் புதனும், 30ம் தேதி முதல் சுக்ரனும் 7ம் வீட்டில் அமர்வதால், சோர்வு, சலிப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். அழகு, இளமை கூடும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். கணவன்மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர், நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் குறையும். 1ம் தேதி முதல் செவ்வாய் 8ல் சென்று மறைவதால், சிறுசிறு வாகன விபத்து கள், ரத்த அழுத்தம், முன்கோபம், வீண் டென்ஷன், அலைச்சல் ஏற்படும்.

சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். ஜென்ம குரு தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

கோபத்தை அடக்குவதால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

மனசாட்சி உள்ளவர்களே!

31ம் தேதி வரை செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், ஓரளவு நிம்மதி உண்டாகும். பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். 1ம் தேதி முதல் செவ்வாய் 7ம் வீட்டில் நுழைவதால், சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் ஏற்படும்.

சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. 28ம் தேதி முதல் புதனும், 30ம் தேதி முதல் சுக்ரனும் 6ல் மறைவதால், வேலைச்சுமை, சிறுசிறு விபத்து, தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ் பிரச்னை ஆகியவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்.

டி.வி., ஃப்ரிஜ் போன்ற சாதனங்கள் பழுதாகும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். குருபகவான் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால், திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். ராசிநாதன் சூரியன் 5ல் நிற்பதால், அவ்வப்போது முன்கோபம் வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும்.

அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

கூடிவாழும் குணம் உடையவர்களே!

யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், எந்தப் பிரச்னையையும் சமயோசிதமாசகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். ஆடை, அணிகலன் சேரும்.

புதன் சாதகமாக இருப்பதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சூரியன் 4ல் நிற்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

தாயாரின் உடல் நலம் சீராகும். 3ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மனோபலம் கூடும். அயல்நாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். ராகு ராசிக்குள் நிற்பதால், வீண் டென்ஷன் உண்டாகும்.

1ம் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் நுழைவதால், சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

எளிமையை விரும்புபவர்களே!

சூரியன் 3ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால், தைரியம் பிறக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பாதச் சனி தொடர்வதால், கண் வலி, காது வலி, பல் வலி ஏற்படும்.

1ம் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் நுழைவதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 6ம் வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

குரு 10ல் தொடர்வதால், கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் காலம் இது.

ராசிபலன்

வெள்ளை உள்ளம் கொண்டவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள்.

சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், புது வேலை கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள்.

சூரியன் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கண் வலி ஏற்படக்கூடும்.

ஜென்மச் சனி தொடங்கியிருப்பதால், லேசாக தலைச்சுற்றல், கை, கால் அசதி, சோர்வு, மறைமுக விமர்சனங்கள், தாழ்வுமனப்பான்மை ஆகியன வந்து நீங்கும்.  

வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்ளுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும் வேளையிது.

ராசிபலன்

நீதி, நெறி தவறாதவர்களே!

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

1ம் தேதி முதல் செவ்வாய் 3ம் வீட்டில் நுழைவதால், பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால், உங்களுக்கு வேலைச்சுமை, முன்கோபம் வந்து செல்லும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். விரயச் சனி தொடங்கியிருப்பதால், திடீர் பயணங்கள், பழைய கடனைப் பற்றிய பயம் ஏற்படும்.

வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

தன் பலவீனத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

எதிலும் உடனடித் தீர்வை எதிர்பார்ப்பவர்களே!

யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் பணப் புழக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகளை கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

ராசிநாதன் சனி லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால், சிறுசிறு விபத்து, முன்கோபம் வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

சூரியன் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களை பகிர்ந்துகொள்வார்.  

வி.ஐ.பி.களால் பாராட்டப்படும்  வேளையிது. 

ராசிபலன்

 கொடுத்து உதவும் குணம் உடையவர்களே!

சூரியன் லாப வீட்டில் நிற்பதால், பயம் விலகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

பூர்வீகச் சொத்து கைக்கு வரும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். 1ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால், முன்கோபம் அதிகமாகும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்குங்கள்.

சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.  

வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.  

ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

சமாதானத்தை விரும்புபவர்களே!

சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும்.

சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். திருமண பேச்சு வார்த்தை கைகூடும்.  

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், நண்பர்கள், விருந்தினர் களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். 31ம் தேதி வரை செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், மனோபலம் அதிகரிக்கும்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்களால் மதிப்பு, மரியாதை கூடும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.

1ம் தேதி முதல் செவ்வாய் 12ம் வீட்டில் நுழைவதால், திடீர் பயணங்கள், சகோதர வகையில் செலவுகள், தூக்கமின்மை வந்துநீங்கும்.

வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புதுச் சலுகைகள் கிடைக்கும்.

வெற்றிக்கனியை சுவைக்கும்  தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism