Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

க்னம் (பிறந்தவேளை) அல்லது சந்திரன் இருக்கும் (நட்சத்திர பாதம் இணைந்த) ராசி, தனுசு அல்லது மீனமாகத் தென்படும்போது குருவின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், கணவன் மூலம் கிடைக்கும் அத்தனை இன்பங்களையும் சுவைப்பாள்; அத்துடன்,  பொருளாதார நிறைவில் உலக சுகங்களையும் சுவைத்து மகிழ்வாள் என்கிறது ஜோதிடம். 

உலக சுகத்தில் உயர்ந்தது தாம்பத்திய சுகம். அது கணவனிடம் இருந்து கிடைக் கும் பாங்கு நிறைவை எட்டவைப்பதால், அதை 'பதி ஸௌபாக்யம்’ (கடவுளிடம் இருந்து கிடைக்கும் ஆனந்தம்) என்று ஜோதிடம் குறிப்பிடும். 'ஆணோ, பெண்ணோ பரிணாம வளர்ச்சியின் வெகுமதியான தாம்பத்திய சுகத்தை எட்டாதவர்கள், ஊனமுற்றோரில் அடங்குவர்’ என்கிறது சாஸ்திரம்.உடலுறவில் மனம் மட்டுமே மகிழாமல், அத்தனை உறுப்புகளும் ஆனந்தத்தில் மூழ்கும். 'உனது உள்ளக்கிடக்கையை நான் அறியேன். மன்மதன் எனது உள்ளத்தை யும் உடலையும் வாட்டி எடுக்கிறான். எனது உடலுறுப்புகள் உன் இணைப்பால் இன்பத்தைச் சுவைக்க ஏங்குகின்றன’ என்று சகுந்தலை துஷ்யந்தனுக்கு காதல் கடிதம் எழுதியதை, அபிஞ்ஞான சாகுந்தலத்தில் காளிதாசன் குறிப்பிடுகிறான் (தவஞஜானே ஹ்ருதயம்...த்வயிமுக்தமனோரதானி அங்கானி).

எல்லாம் இன்பமயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்டைய நாட்களில் இரண்டு வருஷத் துக்கு ஒரு  குழந்தை பெற்றுக்கொள்வார்கள். எண்ணிக்கையில் 10, 12, 14 என குழந்தை களைப் பெற்றுக்கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் அத்தனைபேரும் தாம்பத்தியத்தின் சுவையை முழுமையாகப் பெற்று நிறைவை எட்டியவர்கள். முதுமையை எட்டிய அவர்களில் சுக்லசோணிதத்தின் வறட்சியால் குழந்தை உருவாகாமல் இருக்குமே தவிர, இன்பத்தின் அளவு என்றைக்கும் குறையாது. இந்த அனுபவம் முதுமையிலும் இன்பத்தின் இறுக்கத்தைத் தக்கவைத்துவிடும். இதைத்தான் 'எல்லாம் இன்பமயம்’ என்ற பழைமையான பாட்டு ஒன்று சுட்டிக்காட்டியது. பாரதத்தில் பிறந்தவர்கள் பண்போடு எல்லா இன்பங் களையும் அணு அணுவாக ரசித்து மகிழ்ந்த வர்கள். அதன் வெளிப்பாடுதான் 'காம சாஸ்திர’மாக உருவெடுத்தது. அலுவல்களில் இருந்து முற்றிலும் விடுபட்ட மனம் ஒன்றில் ஊன்றி, தன்னையும் மறந்தால் அத்தனையும் இன்பமயம். வைதவ்ய தோஷமும் (கணவனின் இழப்பு), களத்ர தோஷமும் (மனைவியின் இழப்பு அவர்களின் இன்பத்தின் இடையூறைச் சுட்டிக்காட்ட வந்ததே தவிர, அவர்களின் ஆயுளைக் கணக்கிட வரவில்லை. குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த தகவலும் இன்பத்தைச்சுவைப்பதில் உள்ள நெருடலை வரையறுக்க வந்ததே தவிர, குழந்தைகளைப் பற்றிய தகவலை அளிக்க வரவில்லை. ஆண் குழந்தைகள், மருமகள்கள், பெண் குழந்தைகள், மாப்பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள்... இப்படி தங்கள் வாரிசுகள் அத்தனை யையும் தாங்கள் அனுபவித்த இன்பத்தின் விரிவாக்கமாக உணர்ந்து, உயிர் பிரியும்வரை துயரம் தொடாத இன்பத்தைச் சுவைப்பர்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒற்றை வரி பலன்கள் உண்மையா?

அல்பாயுஸ்ஸா சிறு வயதிலேயே இளமையை எட்டிய நிலையில் இழப்பு, மத்யாயுஸ்ஸா  முதுமையை எட்டும் முன்பே மரணம், தீர்க்காயுஸ்ஸா இயற்கை

தந்த வாழ்நாள் முடிந்த பிறகு மரணம் என்ற ஆராய்ச்சியை, தம்பதிகள் பெறப்

போகும் இன்பத்தின் அளவை மதிப்பிடு வதற்காகப் பயன்படுத்தினர். அவர்கள்

சந்திக்கும் தசா காலங்களில் இன்பத்தின் சரிவை அல்லது ஏற்றத்தை வரையறுக்க முடிந்தது. நட்சத்திரப் பொருத்தங்கள், கிரக அமைப்புகளின் பொருத்தங்கள் அத்தனை யும் அவர்களின் தாம்பத்திய மகிழ்ச்சியை எட்டவைக்கும் உபகரணங்கள் ஆகும்.

இப்படியிருக்க, ரஜ்ஜுப் பொருத்தம் தாம்பத்தியம் இனிக்கும், 7ல் செவ்வாய் கணவனை இழப்பாள், 7ல் செவ்வாய் மனைவி மறைந்துவிடுவாள், 5ல் பாபக் கிரகம் குழந்தை பிறக்காது, இந்த ஜாதகம் வியாபாரம் செய்யும், இது வேலையில் விளங்கும், இது வெளிநாட்டில் பெருமை பெறும், இந்த ஜாதகத்துக்கு இரண்டு தாரங்கள், இந்த ஜாதகம் மறைமுக தாரம், இது சனியின் பிடியில் சிக்கித் தவிக்கும், இது கஜ கேஸரி யோகத்தில் பணத்தில் மிதக்கும், இது

சகட யோகத்தில் ஏழ்மையை ஏற்கும்... என ஒரு வரி பதிலில் முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் ஜோதிட மேதைகளுக்குத் தோன்றக்கூடாது.

ஜோதிட அறிவு அற்றவர்கள் ஊடுருவியிருப்ப தால், அவர்களை அடையாளம் காண முடியாத அப்பாவி மக்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். 'மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று சொல்பவர்களுக்கு, 'தாம்பத்திய உறவு முழு மகிழ்ச்சியை எட்டிவிடும்’  என்பதை சாஸ்திரக் கண்ணோட்டத்தில் வரையறுத்துக் கூறி சேவை செய்வதை பெருமையாக எண்ணும் மனநிலை வளர வேண்டும். நடைமுறையில் அவர்களுடைய கணிப்பு தவறியதற்கு அத்தாட்சியாக பல விவாகரத்துகள் தோன்றி, தாம்பத்தியத்தை அலைக்கழிப்பதைப் பார்க் கிறோம். நீதிமன்றங்களே பளு தாங்காமல் கவலைப்படும் அளவுக்கு மலைபோல் குவியும் விவாகரத்துகளை பண்டைய நாளில் கேள்விப் பட்டது இல்லை. புதுச் சிந்தனையாளர்களின் சமுதாயச் சீர்திருத்தம் அடிப்படை தத்துவத்தை அசைத்துவிட்டது. அத்தனை மனிதர்களுக்கும் மகிழ்ச்சியை எட்டுவதுதான் குறிக்கோள். வழிதவறிச் சிந்திப்பவனை நல்ல வழியில் இணைத்துவிட ஜோதிடர்கள் முயற்சிக்க வேண்டும். லோகாயத வாழ்க்கையில் விருப்பத்துக்கு இணங்க செயல் படும் மக்களுக்கு, மகிழ்ச்சியை எட்டும் பயணப் பாதையை சுட்டிகாட்டவேண்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

குரு த்ரிம்சாம்சகம்

ஒற்றைப்படை ராசியில் 10 பாகைகளுக்கு மேல் 8 பாகைகள் பரவியிருக்கும் குரு த்ரிம்சாம்சகம்.

இரட்டைப்படை ராசியில் 12 பாகைகளுக்கு மேல் 8 பாகைகள் இருக்கும். இரண்டாது த்ரேக்காணம் இரண்டிலும் உண்டு. ஹோரையில் சூரியனும் சந்திரனும் முறையே இணைந்திருப்பர். ராசி முழுதும் குருவின் ஆதிக்கம் இருக்கும். த்ரேக் காணத்தில் முறையே செவ்வாயும் சந்திரனும் இருப்பார்கள். செவ்வாய், சூரியன், சந்திரன், குரு ஆகியோரின் பொறுப்பு அதிகமாக இருக்கும். ராசிகளின் மற்ற பிரிவுகளில் மிச்சமுள்ள கிரகங்களின் இணைப்பும் இருக்கும்.

கிரகங்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து செயல்படுகின்றன. அதில் அவளது பிறப்பு, அதன் வழி அவளது வாழ்க்கை வளம், அவளது இயல்புஆகியவற்றை ராசியில் இணைந்த குரு த்ரிம்சாம்சகம் வரையறுக்கிறது. அத்தனைக் கிரகங்களின் தாக்கத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனியொரு கிரகம் தன்னிச்சையாக பலனளிக்காது என்கிறது ஜோதிடம். அத்தனை கிரகங்களின் பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டு, தனது பாங்கில் இயல்பை உருவாக்கும். விண்வெளி யில் சுழலும் கிரகங்கள் ஒவ்வொன்றும் மற்றுமுள்ள கிரகங் களின் இணைப்பில் சுற்றுச்சூழலின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

கிரகங்களும் சிந்தனை மாற்றமும்!

தட்பத்தின் குறைவில் வெப்பம் தலையெடுக்கும். அதுபோல், வெப்பக் குறைவில் தட்பம் ஆட்சி செய்யும். எதிரிடையான ஒன்றின் சேர்க்கையில் மற்றொன்று வலுப்பெறும் அல்லது வலுவிழக்கும் என்பது கண்கூடு. வெட்பதட்ப பாகுபாட்டில் பிரிந்த கிரகங்கள் அவற்றின் இணைப்பில் தென்படும் மாறுபாட்டை விளக்கும். அப்படித்தான் ராசியின் உட்பிரிவு களில் விகிதாசாரப்படி இடம்பிடித்த கிரகங்கள், பலம் பொருந்திய கிரகத்துடன் இணைந்து, அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. பஞ்சபூதங்களின் விகிதாசார கலவையில்  தோன்றிய உடலில் அவற்றின் தாக்கத்தால், மனம் மாறுபட்ட சிந்தனையை ஏற்கிறது. ஆக, அடிப்படைத் தத்துவத்தைப் புறக்கணிக்காமல் பலன் சொல்ல முற்பட்டால் உண்மையான விளக்கத்தை எட்டிவிடலாம். ஆறாவது அறிவுக்கு வேலை கொடுக்காத எந்தத் தகவலும் நம்பகத்தன்மையை இழந்துவிடும். ஜோதிடம் பொதுப் பலனைச் சொல்லாது. தனிமனிதனின் சிந்தனையின் அடிப்படையில் பலனை வரையறுக்கும். பொதுப் பலனை அஸ்ட்ரானமி (கணிதம்) அளித்துவிடும். பலன் சொல்லும் ஜோதிட பகுதிக்கு அந்த வேலை இல்லை. அப்படி இருப்பதாக சித்திரிப்பது புது சிந்தனையாளர்களின் கணிப்பு; ஜோதிடத்தின் கணிப்பு அல்ல.  

மூன்று நட்சத்திரங்கள்!

த்ரிம்சாம்சகத்தில் அதிக பாகைகள் குருவுக்கு இருக்கும். இரண்டிலும் (ஒற்றைப்படை ராசியிலும் இரட்டைப் படை ராசியிலும்) 2வது த்ரேக்காணத்தில் இணைந்து இருக்கும். அதன் அதிபதி 5வது ராசியின் அதிபதியாக இருப்பான். 5வது ராசி பூர்வ புண்யத்தைச் சுட்டிக்காட்டும். கர்மவினை அது வழி வெளிவர வேண்டும். அதன் தொடர்பில், குரு த்ரிம்சாம்சகம் தனது த்ரிம்சாம்சகத்தில் உதித்தவளிடம் சிந்தனைக்கு ஆதாரமான இயல்பை வெளிப்படுத்தும்.

1, 5, 9 பாவாதிபதிகளின் வாயிலாக கர்மவினையின் தாக்கத்தை

ஏற்று, கிரகங்களின் இயல்பை நிர்ண யிக்கவேண்டும். த்ரிகோணத்தை (1, 5, 9) லக்னத்துக்கு இணையாகச் (பிறந்த வேளைக்கு) சொல்லும் ஜோதிடம். ஜன்ம நட்சத்திரம், அனுஜன்ம நட்சத்திரம், த்ரிஜன்ம

நட்சத்திரம் என்று 1, 5, 9 ராசிகளில் இணைந்திருக்கிறது ஜோதிடம்.

நல்ல நாள் பார்க்கும்போதும், கிரஹணத்தில் பாதகம் ஏற்படும் போதும் இந்த மூன்று நட்சத்திரங் களையும் ஒன்றாக (ஜன்ம நட்சத் திரமாக) பார்ப்பார்கள். பரணியில் கிரகணம் பிடித்தால் பரணி, பூரம், பூராடம் மூன்று பேர்களும் பரிகாரம் செய்யவேண்டும் என்பர்.  அதுபோல் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது சுக்கிர தசை என்று சொல்லும் ஜோதிடம். பரணிக்கு சுக்கிர தசை என்று சொல்லி 5, 9 ராசிகளில் வரும் பூரம், பூராடம் இரண்டுக்கும் சுக்கிரனை இணைத்துவிடும். பிறந்த நட்சத்திரத்தின் தசை (அதாவது பரணி) முதலில் நடைமுறைக்கு வரும். ஆனால் பூரம், பூராடத்துக்கும் அது பொருந்தும் என்ற முடிவு 1, 5, 9 ஆகிய இடங்களில் இருக்கும்கிரகங்களுக்கும் கர்மவினையை நடைமுறைப்படுத்த வழிவகுக்கிறது.

பூர்வ புண்ய ஸ்தானம்

ஒரு ராசி மொத்தத்துக்கும் பூர்வபுண்ய சம்பந்தத்தை (கர்ம வினையின் தொடர்பை) ஏற்படுத்த முதல் த்ரேக்காணம், அதன் அதிபதி,2வது த்ரேக்காணம் 5க்கு உடையவனின் அதிபதி. 3வது த்ரேக்காணம் 9க்கு உடையவனின் அதிபதி என்று விளக்கிக் கூறுகிறது. செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன் என்று ஒற்றைப் படை ராசியிலும் சுக்கிரன், புதன், குரு, சனி, செவ்வாய் என்று இரட்டைப்படை ராசியிலுமாக... அத்தனை த்ரிம்சாம்சகத்துக்கும் பூர்வபுண்ய ஸ்தானத்தை (கர்ம வினையின் வடிகாலை) இணைக்கும் விதத்தில், த்ரேக்காணத் தின் தொடர்பில் 1, 5, 9 என்ற ராசியின் அதிபதிகளை இணைத்திருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டும்.

பரணி, பூரம், பூராடம் என்பதை ரஜ்ஜுவாகக் குறிப்பிட்டு, தாம்பத்திய இணைப்பு நெருடலை அளிக்கும் என்கிறது ஜோதிடம். இருவரது கர்மவினையும் இணையாது. மாறுபட்ட கர்மவினைதான் இணையும். வெப்பமும் தட்பமும் இணைய வேண்டும். அப்போதுதான் அதன் கலப்பில் இன்பம் உதயமாகும். வெட்பம் மட்டுமோ அல்லது தட்பம் மட்டுமோ இணைந்தால், அதிகமான ஒன்றால் விபரீத விளைவுகள் தலை தூக்கும். இணைப்பில் மாறுதல் தென்பட வேண்டுமானால், இணைக்கப்படும் பொருள்கள் எதிரிடையாக இருக்க வேண்டும். இல்லையேல் மாறுதல் தென்படாது; அதன் விரிவாக்கம்தான் இருக்கும். இந்த இரு ஜாதகங்கள் சேருமா என்று கேள்வி எழும்பினால்... 'இரண்டும் இயல்பில் மாறுபட்டு இருக்கிறதே எப்படி இணையும்?’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது. 'இந்த ஜாதகங்கள் இயல்பில் ஒன்றானால் சேருமா?’ என்ற கேள்வி எழாது!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

எதிரிடையான சேர்க்கைகள்...

மாறுபட்ட இயல்புடைய ஜாதகங் களை இணைக்க வழிவகுக்கிறது ஜோதிடம். தாம்பத்தியத்திலும், உலக வாழ்க்கையில் இணைந்து செயல்படும் தகுதியானது, இயல்பில் மாறுதல் இருப்பவர்களின் சேர்க்கையில்தான் தரமாக இருக்கும். எதிரிடையான இரண்டின் சேர்க்கையில் உருவாகும் மாறுதலே, அவர்களின் வாழ்க்கை முழுதுவதுமான இன்ப துன்பங்களை வரையறுக்கும். எதிரிடையான இணைப்பில் விரும்பிய மாறுதல் இருக்கும்.

காரத்தில் உப்பை இணைக்கும் போதுதான் ருசியை உணர முடியும். வெப்பத்துக்குக் குளிர்சாதனமும், தட்பத்துக்கு புதப்பும் (கதகதப்பும்) இணையும்போது, அவற்றின் மாறுபாட்டில் இன்பம் வெளிப்படுகிறது. ஆண்  பெண் உடலமைப்பின் படைப்பு, 'எதிரிடை இணைப்பு இன்பம் தரும்’ என்று சொல்லாமல் சொல்கிறது. ஓரினச் சேர்க்கையில் போலி இன்பம் இருக்கும். கட்டைவிரலை சப்பும் குழந்தைக்கு போலித் தாய்பால் குடிக்கும் இன்பம் இருக்கும். ஆண் பெண்ணாக மாறுவதையும், பெண் ஆணாக மாறுவதையும் மனப் பிணியாகப் பார்ப்போம்.

ஆக, 'இந்த இரு ஜாதகங்களை இணைக்கலாமா?’ என்ற கேள்விக்கு, 'இயல்பில் இருகூறான இணைப்பு பலன் தருமா?’ என்று பொருள். சகோதரர்களில் இருவரை இணைப்பது இல்லை. தந்தையின் ஜீவாணுக்களில் உருவான இருவரின் இயல்பு ஒன்றாக இருந்தால் தாம்பத்தியம் சிறக்காது.

கர்மவினை மாறினாலும் ஜீவாணுக்களின் தரம், அதன் இயல்பில் இடையூறைத் தோற்றுவிக்கும். அதுபோல் கோத்திரமும் இடையூறை ஏற்படுத்திவிடும். எதிலும் விபரீத இயல்புகளின் இணைப்பு விருப்பமான மாற்றத்தை அளிக்கும்.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism