Published:Updated:

கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

ரு பொன்மாலைப் பொழுதில், நண்பரின் வீட்டுக்குள் நுழைந்தேன்.என் தலை தெரிந்ததும், ''நான் கத்தி பார்த்துட்டேன்...'' என்று உரக்கச் சொன்னார் நண்பர்.

''நான் லிங்காவே பார்த்துட்டேன்' என்றேன்.

''அட, நான் அதைச் சொல்லலே!'' என்று கடுப்பான நண்பர், ''இது டிசம்பர் சீஸனாச்சே! ஊரெல்லாம் பாட்டுச் சத்தம்! என் பங்குக்கு நாமும் மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி செலுத்துவோமேனு பாடுறதுக்கு ட்ரை பண்ணேன். கத்திப் பாடலாம்னு முயற்சி செஞ்சேன். தொண்டை கட்டிக்கிட்டதுதான் மிச்சம்..!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பாட்டுங்கறது பொங்கலுக்குக் கரும்பு வாங்குறது மாதிரி இல்லை, சாரே! டிசம்பருக்கு டிசம்பர்தான் ஞானோதயம் பொறக்கும்னா, அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் வீட்டை காலிபண்ணிட்டுப் போயிடுவாங்க...'' என்றேன்.

''அப்படின்னா, என்னை மாதிரி 55 ப்ளஸ் வயசுக்காரங்களுக்கு நினைச்ச மாத்திரத்தில் சங்கீதம் வராதுன்னு சொல்றீங்களா?'' என்று அப்பாவியாகக் கேட்டார் நண்பர்.

கலகல கடைசி பக்கம்

''நிச்சயம் வராது!''

''ஆனா, சபாக்கள்லே சில பெரிசுகள் நான் பாடற மாதிரிதானே பாடறாங்க? வாயைத் திறந்தா மைக் வழியா சூடா காத்துதான் வருது. இருந்தாலும், எப்படியோ அவங்களுக்கு சான்ஸ் கிடைச்சுடுதே!'' என்ற நண்பரின் சிந்தனையை மாற்றுப் பாதையில் டைவர்ட் செய்தேன்.

''போகட்டும்... உங்களுக்கு ஏன் திடீர்னு சங்கீதத்தின் மேல் இத்தனை மோகம்?'' என்று கேட்டேன்.

''பகவானின் பாதாரவிந்தங்களை அடைய சங்கீதம் சுருக்குவழியாமே? சங்கீதம் பாடிக்கொண்டிருந்தாலே மோட்சமும், பிரம்மானந்தமும் சுலபமா கிடைச்சுடும்னு கேள்விப்பட்டேன். தியாக பிரம்மம் போன்ற மகான்களுக்கும் அப்படித்தான் மோட்சம் கிடைச்சுதாமே..?''

''இதே கேள்வியை பகவான் ரமணரிடம் ஒரு பக்தர் கேட்டார். அதுக்கு மகரிஷி என்ன தெரியுமா சொன்னார்... 'தியாகராஜர் பாடி மோட்சம் அடையலே; அடைஞ்சதைத்தான் பாடினார்!’ன்னு சொன்னாராம்!'' என்றேன்.

கூடவே, ''சாரமதி ராகத்தில் 'மோக்ஷமு கலதா...’ன்னு ஒரு கீர்த்தனை பண்ணியிருக்கார் தியாகய்யர். 'பக்தியும் சங்கீத ஞானமும் இல்லாதவங்களுக்கு மோட்சம் கிடையாதா ராமா?’ன்னு கேக்கறார். அதனால, நீங்க கேள்விப்பட்டது போல மோட்சம் கிடைக்க சங்கீதம் ஒரு சுருக்கு வழிதான்!'' என்று விளக்கினேன்.

நண்பருக்குப் புரிந்தது. ''சங்கீதம் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் பேசணும்...'' என்றார்.

'கொஞ்சமில்லை, நிறையப் பேசணும். சங்கீதம்கிறது கடலாச்சே!' என்றேன் நான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism