சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!
ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!

குறை தீர்க்கும் கொடுமுடி பெருமாள்!

##~##
ரோடு- திருச்சி ரயில் மார்க்கத்தில் உள்ளது கொடுமுடி. இந்த ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் மேல்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவீர நாராயண பெருமாள் திருக்கோயில்.

மலையத்துவச பாண்டிய மன்னன், இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளான். மேலும், பதினாறு கிராமங்களை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தான். கோமாற வர்மன் எனும் மன்னன், திருமஞ்சனத்துக் கான பொருட்கள் வழங்கி ஆலயத்தைச் சீரமைத்துள்ளான். தேர்மாறன் எனும் அரசன், பொன்னும் ஆபரணங்களும் தந்து வழிபட்டுள் ளான். சுந்தரபாண்டிய கேசரிவர்மன் எனும் மன்னன், இந்த ஆலயத்தின் சாந்நித்தியத்தில் திளைத்து, திருமாலுக்கும் அவர்தம் பெரிய திருவடியான கருடாழ்வாருக்கும் கிராமங்களை நிவந்தமாக அளித்து மகிழ்ந்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீதேவி- பூதேவி மற்றும் ஸ்ரீமகாலட்சுமியு டன் அருளும் ஸ்ரீவீர நாராயண பெருமாளுக்கு, வைகாசியில் மோகினி அவதாரம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு என வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். புரட்டாசியில் கூட்டம் அதிகம் வரும். 'கொடுமுடி பெருமாளை வணங்கினால் குறையன்றும் இருக்காது’ என்று போற்று கின்றனர் உள்ளூர் பக்தர்கள்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


வெங்கம்பூர் பெருமாள்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!

ரோடு- கரூர் செல்லும் வழியில், சுமார் 33 கி.மீ. தொலைவில்... ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெங்கம்பூர். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாள், சிறந்த வரப்பிரசாதியானவர்!

ஒரு காலத்தில், சேர தேசத்தின் பல பகுதிகளை சோழர்கள் வென்று, ஆட்சி செய்து வந்தனர். இதில் வீரசோழ மன்னனும்,  அவன் மகனும் ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினர். பல ஊர்களில் அழகிய, பிரமாண்ட மான ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். மகாராணி யின் பிரார்த்தனை நிறைவேறியதைப் போற்றும் வகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க, காவிரிக் கரையில் அமைத்ததுதான் வெங்கம்பூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம். நுழைவாயிலில் அரசமரம், வேம்பு மற்றும் புளியமரம் ஆகியவை இணைந்திருக்க, அங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகப் பெருமான். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக திருக்காட்சி தரும் ஸ்ரீவரதராஜரை தரிசித்துப் பிரார்த்தித்தால், வேண்டியன யாவும் விரை வில் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கரூர், ஊஞ்சலூர், கொடுமுடி, ஈரோடு என சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம், பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில், பெருமாளுக்குத் திருமஞ்சனம் மற்றும் வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், வியாபாரம் சிறக்கும்; லாபம் கொழிக்கும்; விவசாயம் தழைக்கும் என்பது ஐதீகம்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


அள்ளித் தரும் ஸ்ரீமகாலட்சுமி

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அம்மன்கோவில். இங்குதான், ஸ்ரீகரிய வரதராஜ பெருமாள் அருளாட்சி நடத்துகிறார்.

சுமார் 600 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அற்புதமான ஆலயம். காலப்போக்கில் சிதிலம் அடைந்து, வழிபாடுகள் ஏதுமின்றி இருந்ததாம்.  இதனால், அந்தப் பகுதியில் பட்டினியும் பஞ்சமும் தலைதூக்கியது. இதையடுத்து ஊர்மக்கள் அனைவரின் பெருமுயற்சியால், திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகமும் செய்யப் பட்டது. இதனால், அந்த ஊரே செழித்தது; ஊர்மக்களும் சிறந்து விளங்கினர் என்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீகரிய வரதராஜ பெருமாளை வணங்கினால், கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்; கவலைகள் யாவும் தீரும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை! இங்கே ஸ்ரீமகாலட்சுமித் தாயார் கருணையும் கனிவும் பொங்க, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருமணத் தடையால் கலங்கும் பெண்கள், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை மனதார வணங்கினால், விரைவில் கல்யாண வரன் தேடி வரும் என்கின்றனர், பெண்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீமகாலட்சுமித் தாயாருக்கு புடவையும், ஸ்ரீகரிய வரதராஜருக்கு வஸ்திரமும் சார்த்தி, நைவேத்தியம் செய்து வழிபட, வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


ஓலப்பாளையம் ஸ்ரீராமர்!

ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் சாலையில் உள்ளது விளக்கேத்தி பேருந்து நிறுத்தம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. பயணித்தால் வருகிறது ஓலப்பாளையம் கிராமம். இங்குதான், ஸ்ரீசீதாதேவியுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீராமரின் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமரை ஸ்ரீமாயவர், ஸ்ரீமாயவ பெருமாள் என்றெல்லாம் போற்றுகின்றனர் பக்தர்கள்.

புரட்டாசி மாதத்தில் பெண்கள் படையலிட மாட்டார்கள். அவர்களுடைய கணவன்மார்களே படையல் சமைக்க வேண்டுமாம். அதை மீறி, பெண்கள் பானை வைத்தால், அந்தப் பானை உடைந்துவிடும் என்பது ஐதீகம்! இந்த மாதத்தில் வந்து, படையலிட்டு வேண்டிக் கொண்டால், குடும்பத்தில் வளம் பெருகும்; தம்பதி ஒற்றுமை யுடன் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.   அதே போல், புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு 7 முதல் 9 மணி வரை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


மங்களகிரி பெருமாள்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ளது பெருமாள் மலை. இந்த மலையின் மீது பெருமாள் கோயில் கொண்டிருப்பதால், மலைக்கு இந்தப் பெயர் அமைந்ததாம்! முன்னொரு காலத்தில், மங்களகிரி என அழைக்கப்பட்டதாம் இந்தத் தலம்; எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமங்களகிரிப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. தாயாரின் திருநாமம் - ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயார். சித்தோடு மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பெருமாள்தான் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே! ஸ்ரீமங்களகிரி பெருமாளுடன் சயனக் கோலத்தில் அருள்கிற பெருமாளையும் இங்கு தரிசிக்கலாம்.

புரட்டாசி மாதத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் தலங்களில் இதுவும் ஒன்று. புரட்டாசி மாதம் துவங்கியதும் கடும் விரதம் மேற்கொண்டு சனிக்கிழமைகளில் பெருமாளைத் தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்களாம்!

தவிர, புரட்டாசியின் முதல் சனிக்கிழமை அன்று புதிதாக காலணி (செருப்பு) வாங்கி, இங்கே யுள்ள மரத்தில் கட்டித் தொங்கவிட்டால், சகல தோஷங்களும் நீங்கிவிடும்; திருமணத் தடைகள் அகலும்; வியாபாரத்தில் இருந்த நஷ்ட நிலை மாறி, அபரிமித லாபத்தைக் கொடுக்கத் துவங்கும் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்.

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


தோஷங்களை விலக்கும் ஆதிகேசவா!

காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிப்பதால், திரிவேணி சங்கமம், கூடுதுறை என்றெல்லாம் புகழ்பெற்ற பவானி தலத்தை அறியாதவர்கள், உண்டா என்ன?!

இங்கே, ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயமும், அருகில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலும் அருகருகில் இருப்பது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்கின்றனர் ஈரோடு மாவட்ட மக்கள்.  

தாயார்- ஸ்ரீசௌந்தரவல்லித் தாயார். ஆலயத்தின் ரங்க மண்டபத்தில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலன், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநம்மாழ்வார் ஆகியோர் காட்சி தருகின்றனர்.  

புரட்டாசி வந்துவிட்டால் சேலம், கோவை, நாமக்கல் மற்றும் பெங்களூரில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளை சேவித்துச் செல்வார்களாம். ஸ்ரீஆதிகேசவ பெருமாளை வணங்கினால், ராகு- கேது முதலான தோஷங்கள் விலகும்; மாங்கல்ய பாக்கியம் கிடைக்கப் பெறுவர்; தீராத நோயும் தீரும் என்கிறார் கோயிலின் அனந்த நாராயண பட்டாச்சார்யர்.

ஆண்கள் வைக்கும் 'பொங்கல்' படையல்!


தோட்டானியில் கோயில்கொண்ட ஸ்ரீகரிய பெருமாள்

ரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ளது வாவிக்கடை. இங்கே, தோட்டானி எனும் பகுதியில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகரிய பெருமாள்.

ஸ்ரீகரிய பெருமாள் சுயம்பு மூர்த்தம். பூமியில் இவரின் திருவிக்கிரகம் புதைந்து கிடந்த நிலையில், ஒரு பசு தனது பாலை தினமும் அந்த இடத்தில் சொரிந்து வந்ததை அடுத்து, இவரின் திருமேனியை ஊர்மக்கள் கண்டெடுத்தனர். அதன் பிறகு, அங்கே அழகிய ஆலயம் அமைத்து, ஸ்ரீகரிய பெருமாளின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள்.

ஸ்ரீராம நவமி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி என அனைத்து விழாக்களும் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஅனுமன் ஆகியோருக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன.  

பசுவானது இறைவனைக் காட்டி அருளிய தலம் என்பதால், இங்கு கோ பூஜையும் சிறப்புற நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில், இந்தத் தலத்துக்கு வந்து மடிப்பிச்சை ஏந்தி, ஸ்ரீகரிய பெருமாளை வணங்கித் தொழுதால், தொழில் உயரும்; குடும்பத்தில் செல்வம் கொழிக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை என விவரிக்கிறார் இந்தக் கோயிலின் சீனிவாசப் பட்டாச்சார்யர்.

கட்டுரை, படங்கள்: ச.ஆ.பாரதி, மு.கார்த்திகேயன்