Published:Updated:

மனதை அள்ளும் புத்த கயா!

புத்தம்... சரணம்...இ.லோகேஸ்வரி

கெளதம புத்தருடன் தொடர்பு கொண்ட யாத்திரைத் தலங்கள் நான்கு. அதில், புத்த கயாவே

மனதை அள்ளும் புத்த கயா!

முதன்மையானது. இங்குள்ள ஆலயம் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 

• கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடம் புத்த கயா. போதி (அரச) மரத்தின் கீழ் புத்தருக்கு ஞானம் கிடைத்ததால், இதை 'போதி கயா’ என்றும் அழைப்பார்கள்.

•  பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ளது புத்த கயா எனும் புண்ணிய பூமி.

•  உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்கள், புத்த கயாவை புனிதத் தலமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

•  அந்தக் காலத்தில், போதி மண்டபம் எனப்படுகிற இந்த இடத்தில், துறவி மடக் குடியேற்றம் என்று மிகப் பெரிய அளவில் இடம் இருந்ததாகத் தெரிவிக்கிறது வரலாறு.  

•  புத்த கயாவில் உள்ள முதன்மையான துறவி மடம், போதி மண்டா விகார். இதை மகா போதி கோயில் என்கின்றனர்.

மனதை அள்ளும் புத்த கயா!

•  இந்தத் திருத்தலத்தை, போதி மண்டா என்றும், விகாரை போதி மண்டா விகார் என்றும் குறிப்பிடுகின்றன நூல்கள்.

•  கோயிலின் மேற்குத் திசையில் அமைந்துள்ளது புத்தர் ஞானம் பெற்ற போதிமரம். 

•  செங்கல் கட்டுமானத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது இந்தக் கோயில். பிற்காலக் கட்டடக் கலைக்கு இது முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகவும் பெருமையுடன் சொல்வார்கள்.

• சுமார் 300 அடி உயரம் கொண்ட புத்தரின் திருவுருவச் சிலையை இங்கே தரிசிக்கலாம்.

•  மகா போதி கோயிலின் கோபுரம், சுமார் 55 மீட்ட உயரம் கொண்டது.

•  கோயிலின் நாலாபுறமும் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புகள் அழகுறக் காட்சி தருகின்றன.

மனதை அள்ளும் புத்த கயா!

•  இந்தத் தடுப்பு அமைப்பு களில், இரண்டு புறம் யானை பூஜை செய்கிற கஜலட்சுமியின் சிற்பமும், குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருவது போன்ற சிற்பமும் இடம் பெற்றுள்ளன.

• புத்த கயாவை 'உலகப் பாரம்பரிய களம்’ என்று கடந்த 2002ம் வருடம் அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம்.

மனதை அள்ளும் புத்த கயா!

• புத்த கயாவை தரிசித்துவிட்டு, பாட்னாவுக்குத் திரும்பும் வழியில் பால்கு நதிக்கரையில் அமைந்து உள்ள விஷ்ணுபுத் மந்திரையும் தரிசிக்கலாம்.

படங்கள்: முனீஸ்வரராஜா பழனியப்பன்