Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

புது இணைப்பை ஏற்கவைப்பதிலும், பரிகாரத்தைத் திணிப்பதிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமும், பெரு வெள்ளம் வடிந்த பிறகு அணை கட்டுவதும் பயன்பெறாது! 

தனுசு அல்லது மீன ராசிகளில், பிறந்த வேளை (லக்னம்) மற்றும் நட்சத்திர பாதம் இணைந்த வேளை (சந்திரன்) இருக்கும் போது, சுக்கிரனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் கணவனை அனுசரித்து நடப்பவளாகவும் (பதிவிரதை), குழந்தைகளை ஈன்றெடுப்பவளாகவும் இருப்பாள் என்கிறது ஜோதிடம். கணவனோடு இணைந்து வாழ்வதும், குழந்தைகளை ஈன்றெடுப் பதும் பெண்மைக்குப் பெருமை சேர்ப்பவை. ஆண்டவன் அவளுக்கு கருவறை என்ற உறுப்பை இணைத்திருக்கிறான். அது, குழந்தை பெறுவதற்காக ஏற்பட்டது. கணவனுடன் நெருங்கிய இணைப்பில் அது சாத்தியம். அவளுடைய பிறப்பின் இலக்கு அது என்றாலும் மிகையாகாது. இங்ஙனம் பெண்மையின் பரிசளிப்பில் வெளிவந்த குழந்தைகள் அறத்தின் இயக்குநர்கள் ஆவார்கள்.

அவர்கள், பிற்காலத்தில் நல்ல குடிமகன்களாக மாறி, கூடிவாழ்ந்து மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்விக் கிறார்கள். மக்கள்தான் உலகம். மலை,மடு, வனம், வனாந்தரம், நதி, கால்வாய், வீடு வாசல், வாகனம், உபயோகப் பொருட்கள் அத்தனையும் மக்களோடு இணைந்தால் மட்டுமே உலகமாகும். மக்கள் பங்குதான் உலகமாக மாறுகிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பெண்மையே உலகம்!

ஆண்மையின் பங்கில் பெண்மை சம்சாரத்தை உருவாக்குகிறது. அவளை சம்சாரம் (உலகம்) என்று சொல்லுவது தகும். அவளும், அவள் பெற்றெடுத்த குழந்தையும் இணைந்தால்தான் குடும்பம் பூர்த்தியாகும். பெண்மை இணையாத வீடு என்பது காடு; குழந்தைகள் இல்லாத வீடு, பாலைவனம். முன்னது, பயத்தைத் தழுவும்; பின்னது, வறட்சியை உணரவைக்கும். பெண்மை வாழ்வில் நம்பிக்கையையும் செழிப்பையும் ஊட்டும்.

இறையருளால் ஓங்கி வளர்ந்த மரங்கள் பழங்களை ஈன்று பிராணி களுக்கு உணவளித்து, அதன் விதையில் பல மரங்கள் உருவாகக் காரணமாகி, கானகத்தை உருவாக்கி, அதில் வாழும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது. அதேபோல், பெண்மையானது தனது செல்வங்களால் நாட்டை உருவாக்கி, அதை அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் உருவாக்குகிறது. மலடி யான பெண்மையும், காய்க்காத மரமும் தரம் குறைந்ததாகக் கருதப்படுகின்றனர். ஆண்மையுடன் இணைய விரும்பாத பெண்மையும், குழந்தையை ஈன்றெடுக்க மனமில்லாத பெண்மையும் ஆண்டவன் கட்டளையை அலட்சியப்படுத்துபவள் என்கிறது ஜோதிடம்.

உடலுறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டவன், பெண்மையிடம் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். அது நிறைவேறாமல் இருப்பது, அவருக்குக் கிடைத்த ஏமாற்றம். குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படும் அவரது படைப்பு வெற்றி அடையாமல் இருக்கும்வகையிலான எதிர்மறைச் செயல்பாடு, அவருக்கு அபசாரம் செய்வதாக மாறிவிடும். இப்படியான கோணத்தில் பதிபக்தியும் மக்கள் பேறும் இணைந்தவள் என்று குறிப்பிட்டது ஜோதிடம்.

வேத மந்திரத்தில் ஒரு வேண்டுகோள்!

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, சேர்ந்து வாழ்வார்களா, குழந்தைச் செல்வம் இருக்குமா

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஆகிய கேள்விகள் இயல்பாகவே வெளிவந்துவிடும். 'திருமணத்தில் இணைந்த நாங்கள், கொள்ளுப் பேரன் வரையிலும் விரிவடைந்த குடும்ப உறுப்பினர்களோடு களிப்புற்று வாழும் பேற்றைப் பெற வேண்டும்’ என்ற வேண்டுகோள் வேத மந்திரத்தில் ஒலிப்பதுண்டு (க்ரீடதௌபுத்ரை:நப்த்ருபி:ஏதாமாளௌஸ்வேக்ருஹே).

பண்டைய நாளில் இறுக்கமான தாம்பத்தியமும், எண்ணிக்கையில் அதிகமான குழந்தைச் செல்வங்களும் இருந்தன. இந்த பாக்கியத்தை இறைவனின் அருளாகவும், பெண்மையின் வெளிப்பாடாகவும் கருதினார்கள். இன்றைக்கு, உணவுத் தட்டுப்பாட்டைச் சரிக்கட்ட இனப் பெருக்கத்தைக் குறைக்க எண்ணிய புதுச் சிந்தனை பலனளிக்கவில்லை. தட்டுப்பாடு தொடர்கிறது. மக்கள் பேறு குறைந்ததுதான் மிச்சம்!

ஜோதிடமும் துரதிர்ஷ்டமும்!

உழைப்பில் பெருகவேண்டிய உணவை, இழப்பில் சரிக்கட்ட நினைப்பது சிறுபிள்ளைத்தனம். தொலைநோக்கு இல்லாத புதுச் சிந்தனைகள், பல இன்னல்களை அளித்ததுடன் குழந்தைப் பிறப்பையும் பாதித்துவிட்டது. தரமான குழந்தைகள் தோன்றாத தால் சமூகப் பிரச்னைகளும் தலைதூக்கியிருக்கின்றன. ஆனால், வருங்காலத்தையும் வளமாக்கும் விதமாகச் செயல்படும் ஜோதிடம், பிறப்பிலேயே பெருமையைத் தேடித்தரும் பெண்மையை அறிமுகம் செய்தது. இன்றைக்குப் பிடிப்பில்லா தாம்பத்தியமும், மகப்பேறு இல்லாத குடும்பமும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. 'பதிவிரதை’ என்கிற கோட்பாடு இழுக்காகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை அநாகரிக மாக உணரப்படுகிறது.  பொதுநலம் புறக்கணிக்கப்பட்டு, சுயநலம் ஏற்கப்படுகிறது. இந்தக் குழப்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டிய ஜோதிட மேதைகள் சிலர், அதில் தோல்வியுறுவது நமது துரதிர்ஷ்டம்!

ஜோதிட கையேடுகளை நம்பி பொருத்தத்தைப் பரிந்துரைப்பதும், திருமண இணைப்பு முறிந்தால், புது இணைப்பைப் பரிந்துரைப்பதும், மகப்பேறு இல்லாத நிலையில் பரிகாரத்தை ஏற்கவைப்பதும் ஜோதிட மேதைகளின் சிந்தனையில் உதிக்கக் கூடாது. அவர்களது மனப்போக்கை ஆராய்ந்தால், முறிவு தலைதூக்காது. உடல் ஆரோக்கியத்தை ஆராய்ந்தால், மகப்பேறு தடங்கலின்றி நிகழ்ந்துவிடும். அதைவிடுத்து, புது இணைப்பை ஏற்கவைப்பதிலும், பரிகாரத்தைத் திணிப்பதிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமும், பெரு வெள்ளம் வடிந்த பிறகு அணை கட்டுவதும் பயன்பெறாது!

அப்பழுக்கற்றது ஜோதிடம். காரிய காரணத்துடன் பலனை உறுதி செய்யும் விஞ்ஞானத் தகவல் ஜோதிடம். ஆனால், பல காலமாக அலட்சியப்படுத்தப்பட்டு, புதுச் சிந்தனையாளர்களின் வரவால் தூசி படிந்து, சுய உருவம் கண்ணில் படாமல் இருக்கிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சுக்கிர த்ரிம்சாம்சகம்...

ஒற்றைப்படை ராசியில் கடைசி ஐந்து பாகைகளும், இரட்டைப் படை ராசியில் முதல் ஐந்து பாகைகளும் சுக்கிர த்ரிம்சாம்சகம் இருக்கும். இரண்டிலும் ராசி முழுவதும் குருவின் ஆதிக்யம் பரவியிருக்கும். இரண்டு ஹோரைகளிலும் சந்திரன் இருப்பான். த்ரேக்காணத்தில் குருவும் சூரியனும் இருப்பார்கள்.

இந்த நிலையில் சூரியன், குரு, சந்திரன் ஆகியோருடன் விகிதாசார அளவில் இணைந்த சுக்கிரன், தனது த்ரிம்சாம்சகத் தில் பிறந்தவளை பதிவிரதையாகவும், குழந்தையை ஈன்றெடுப்பவளா கவும் உருவாக்குகிறான். சுக்கிரன் தட்பக் கிரகம். குரு, சந்திரன் ஆகியோருடன் இணைந்து, சூரியனின் பங்கையும் சேர்த்து உலகுக்கு உகந்த மாதரசியை உருவாக்குகிறான். சூரியன் ஆத்ம காரகன், சந்திரன் மனதுக்குக் காரகன், குரு சந்தான காரகன், சுக்கிரன் விவாஹ காரகன் என்கிறது ஜோதிடம்.

ஆன்மா, மனம் ஆகியவற்றின் இணைப்பில் தாம்பத்தியத்தின்  சுவையை உணரவைத்து, அதன் பலனாக சந்தானத்தை எட்ட வைக்கிறான் சுக்கிரன். தாம்பத்திய சுகத்தை உணர வைப்பவன், திருமணத்தை நடைமுறைப் படுத்துபவன், உலக சுகத்தில் ஒன்றான மகப்பேற்றை ஆதரவோடு அளிப்பவன் என்கிற கோணத்தில் சுக்கிரனின் பங்கு சிறப்பு பெறுகிறது.

புத க்ஷேத்திரத்தில் நீசம் பெற்று, குரு க்ஷேத்திரத்தில் உச்சம் பெற்று விளங்குவதால், அறிவாற்றலைவிட உலக சுகங்களை அள்ளி அளிப்பதில் சிறப்பு பெறுகிறார். வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி தரும் குழந்தைச் செல்வத்தை அளிக்கிறார். இப்படியிருக்க, 5ல் குருவைப் பார்த்து சந்தானம் இல்லை என்றும், 7ல் சுக்கிரனைப் பார்த்து மனைவி இல்லை என்றும், 8ல் ராகுவைப் பார்த்து கணவன் இல்லை, 9ல் சூரியனைப் பார்த்து தகப்பன் இல்லை, 4ல் செவ்வாயைப் பார்த்து தாயார் இல்லை என்பன போன்ற பொறுப்பில்லாத விளக்கங்கள் ஜோதிட மேதைகளிடமிருந்து வெளிவரக்கூடாது.

தோராயமாகப் பலன் சொல்லலாமா?

'காரகோ பாவனாசாய’ (காரகக் கிரகம் பாவத்தில் இருந்தால், அந்த பாவம் சிறப்பைப் பெறாது) என்ற கோட்பாடு அந்த பாவத்தை அழிக்காது. அங்கு காரக கிரகத்தின் ஒத்துழைப்பு போதுமான அளவு இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு பாவாதிபதியின் பலத்தை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும் என்ற தகவலை ஒதுக்கிவிட்டு, தோராயமாகப் பலன் சொல்லும் துணிவு அவர்களிடம் இருக்கக் கூடாது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

7ல் ராகு இருந்தால் கணவன் இழப்புக்கு வாய்ப்பு உண்டு என்றே பொருள். கணவனின் ஜாதகத்தில் ஆயுள்பாவம் நிறைவாக இருந்தால் இழப்பு இருக்காது. கணவன் ஜாதகத்தில் அவனது ஆயுள் திருப்திகரமாக இருக்கும்போது, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் தென்படும் இடையூறு, அவனது ஜாதகத்தின் அடிப்படையை மாற்றி அமைக்காது.

இவற்றையெல்லாம் ஆராயாமல் பலன் சொல்லத் துணிவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, கருணா மூர்த்திகளான முனிவர்கள் தங்கள் சிந்தனையில் ஆராய்ந்து அளித்த தகவல்களை, துர்உபயோகம் செய்யும் துணிவு இருக்கக்கூடாது. பாமரர்களுக்கு ஜோதிடம் தெரியாது என்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது விருப்பப்படி செயல் படுவதும் தகாது. அறிவு, ஆற்றல், படிப்பு ஆகியன இருந்தும், உழைத்துச் சம்பாதிக்கத் திறமை இருந்தும், இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, முறைப்படி பயிலாத ஜோதிடத்தைக் கையாண்டு எளிதில் பொருளாதாரத்தில் நிறைவு பெறலாம் என்ற நோக்கில் சில புது வரவுகள் ஜோதிடத்தில் நுழைந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மூடநம்பிக்கை என்றும், தீண்டத்தகாதது என்றும் மதிப்பீடு செய்தவர்கள் தலைசிறந்த ஜோதிடர்களாக விளங்குகிறார்கள்.

ஜோதிடம் விஞ்ஞானமல்ல; ஒரு நம்பிக்கை. ஆகவே, நாளேடுகளில் அதன் தகவல்களை வெளியிடக்கூடாது என்று மறுத்தார்கள். தற்போது வெளியிட முன்வந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியல்ல; வீக்கத்தில் வந்த பருமன். ஜோதிடத்தையும் மக்களையும் காப்பாற்ற பரோபகார சிந்தனையுள்ள ஜோதிட மேதைகள் முன்வரவேண்டும். முனிவர்களது உணர்வைப் புரிந்துகொண்டு, வருங்கால சந்ததியி னருக்கு வழிகாட்ட, அவர்களது சேவை நிச்சயமாக வேண்டும்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்...

ராசிச் சக்கரத்தில் சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில் செவ்வாயும் புதனும் இருப்பர். இரண்டிலும், பன்னிரண்டிலும் இடம் மாறி செவ்வாயும் புதனும் இருப்பார்கள். ஆராய்ந்து செயல்படும் எண்ணமும், அதே நேரத்தில் சுறுசுறுப்போடு செயல்படும் தகுதியும் சுக்கிரனுக்குக் கிடைத்துவிடும். லோகாயத சுகங்களை அனுபவிக்க வைப்பதில் சுக்கிரனின் பங்கு உண்டு. வெப்பக் கிரகங்களுடனான இணைப்பில் சுக்கிரன் விபரீத பலனை அளிக்கத் தயாராகிவிடுவான். நீசம், மௌட்யம் பெற்ற சுக்கிரன் லோகாயத சுகங்களை அளிக்கமாட்டான். 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நோக்கில் இன்பத்தைச் சுவைக்க முடியாமல் தவிக்கவைப்பான்.

சுக்கிரனுக்கு நான்கிலும் எட்டிலும் பாபக் கிரகங்கள் (வெப்பக் கிரகங்கள்) இருந்தால், விவாகத்துக்கு உறுதுணையாக இருந்து நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையில் இருந்து நழுவி, விவாகம் ஆனபிறகு (கைக்கு எட்டிய பிறகு), மனைவியின் இழப்பை ஏற்படுத்துவான் (வாய்க்கு எட்டமுடியாமல்). அதே நேரம், பெண் ஜாதகத்தில் 7  ல் செவ்வாயோடு இணைந்த சுக்கிரன் முதல் கணவனை (கைக்கு எட்டியவனை) துறக்கச் செய்து (வாய்க்கு எட்டாமல்) மற்றொருவனை ஏற்க வைப்பான். இங்கு, நிச்சயதாம்பூலம் நடந்த பிறகு கணவனாக ஏற்ற பிறகு, அது தடைப்பட்டு மற்றொருவரை ஏற்க வைப்பான். விவாகம் நடந்தேறாமல், மனதில் ஏற்றுக்கொண்ட கணவனைத் துறந்து, மற்றொருவனோடு முதல்முறையாக விவாகத்தில் இணைவாள். இதை 'புனர்பூ’ என்று ஜோதிடம் சொல்லும்.

விவாககாரகனான சுக்கிரன், வெப்பக் கிரகத்தின் சேர்க்கையில், மனதில் ஏற்றுக்கொண்ட கணவனைத் துறக்கவைத்து வேறொருவரைக் கணவனாக ஏற்கவைப்பான். இதுவும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதில் அடங்கும். 'இவன்தான் கணவனாக வரப்போகிறான்’ என்று மனதில் பதிந்தவன் இல்லை என்று ஆன பிறகு ஏற்படும் மனத்தாங்கலை ஏற்கவைப்பது, சுக்கிரனின் பலனாகச் சொல்லப்படும். உச்சனாக இருக்கும் சுக்கிரன், நீசபங்கம் ஏற்பட்ட சுக்கிரன், செல்வந்தனாக மாற்றி லோகாயத சுகத்தில் மூழ்கச் செய்வான். திறமை, புத்திகூர்மையுடன்

அறிஞனாக இருந்தாலும், குடத்தில் வைத்த விளக்குபோல் அவற்றை மங்கவைத்து, செல்வந்தன் என்ற தகுதியில் சமுதாய அங்கீகாரம் அளித்துப் பெருமைப்படுத்துவான். அவனது த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளை எல்லோரும் போற்றும் அளவுக்கு மாதரசியாக மாற்றிவிடுவான். வாழ்க்கையின் முழுமையை எட்டவைப்பான்.

  சிந்திப்போம்...