Published:Updated:

திருப்புகழ் அமிர்தம்...

ஏழு தெய்வங்கள்...ஏகாந்த வழிபாடு!வி.ராம்ஜி

திருப்புகழ் அமிர்தம்...

ஏழு தெய்வங்கள்...ஏகாந்த வழிபாடு!வி.ராம்ஜி

Published:Updated:

'முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற ஸ்வாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.''

'திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்’னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டா, வாழ்க்கையே மணக்கும்னு சொல்வேன். சொல்லப் போனா, எனக்கு இந்த அற்புதமான வாழ்க்கையைக் கொடுத்ததே திருப்புகழ்தான்! எல்லாம் அருணகிரிநாதரின் ஆசீர்வாதம்; கந்தபிரானோட பேரருள்!'' என்று சிலிர்ப்பும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் 'திருப்புகழ்த் திலகம்’ மதிவண்ணன்.

கம்பராமாயணம், அபிராமி அந்தாதி, திருமுறை, நீதிநூல்கள், சங்கத்தமிழ் எனப் பல விஷயங்

திருப்புகழ் அமிர்தம்...

களையும் எடுத்துக்கொண்டு சொற்பொழிவாற்றக்கூடிய மதிவண்ணன், திருப்புகழ் குறித்துப் பேச ஆரம்பித்தால் ஏதோ சந்நதம் வந்ததுபோல், மடை திறந்த வெள்ளமாகப் பொழிய ஆரம்பித்து விடுகிறார். சமீபகாலமாக, மிகவும் சக்தி வாய்ந்த திருப்புகழ் மகா மந்திர பூஜையை விமரிசையாக நடத்தி வருகிறார் இவர்.

''எல்லா ஸ்வாமிகளின் திருநாமங்களோடும் இயல்பா இணையற அழகு, முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு. விநாயகர் பேரோடு சேர்ந்து கணபதி சுப்ரமணியம், ஸ்ரீராமரோடு சேர்ந்து ராமசுப்ரமணியன், அப்பாவின் பேரோடு சேர்ந்து சிவசுப்ரமணியன், அம்மையுடன் சேர்ந்து சக்திவேலன், பெருமாளோடு இணைந்து வேங்கடசுப்ரமணியன், ஐயப்ப ஸ்வாமி யோடு சேர்ந்து ஹரிஹரசுப்ரமணியன், ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியோடு சேர்ந்து அனுமந்த குமார்னு முருகப்பெருமான் எல்லாக் கடவுளோடயும் இணைஞ்சிருக்கார்.

திருப்புகழும் இப்படித்தான். முருகன் அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் பாடினது திருப்புகழ்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா, வேற எதுக்கும் இல்லாத ஒரு தனிப்பெருமை திருப்புகழுக்கு உண்டுங்கிறது பலருக்குத் தெரியாத விஷயம். அதாவது, முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற ஸ்வாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர். சைவ, வைணவ, சாக்த பேதங்களெல்லாம் பார்க்காம, எல்லா தெய்வங்களைப் பத்தியும் உளமாரப் போற்றிப் பாடியிருக்கார். இது திருப்புகழுக்கு மட்டுமே உரித்தான தனிப்பெருமை!'' என்று உற்சாகம் பொங்க விவரித்தவர், அவற்றை உதாரணத்துடன் சொல்லத் துவங்கினார்.

திருப்புகழ் அமிர்தம்...

''பிள்ளையார் பத்தி அருணகிரிநாதர், 'வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வசைபரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே...’னு பாடியிருக்கார். 'திரிபுரமும் மதன் உடலும் நீறு கண்டவன் தருண மழவிடயன் நடராஜன் எங்ஙணமும் நிகழ் அருணகிரி சொரூபன்’னு சிவபெருமானைப் போற்றிப் பாடிப் பரவியிருக் கார். 'குமரி, காளி, வராஹி, மகேஸ்வரி, கெளரி, மோடி, சுராரி, நிராபரி, கொடிய சூலி...’னு அம்பாள் பத்தியும், அவளுடைய திருக்கோலங்கள் பத்தியும் அடுக்கிக்கிட்டே போறார். இப்படி ஒவ்வொரு தெய்வத்தைப் பத்தியுமே திருப்புகழில் சிலாகித்துப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.

அதனாலதான், திருப்புகழ் மகா மந்திர பூஜைல ஸ்ரீவிநாயகர், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்ப ஸ்வாமி, அனுமன் ஆகியோரின் படங்களையும், நடுநாயகமா முருகப்பெருமானோட படத்தையும் வைச்சு பூஜை பண்றோம். இப்படி ஏககாலத்தில் ஏழு தெய்வங்களை ஏகாந்தமா பூஜை செய்யும்போது கிடைக்கக்கூடிய பலன் பன்மடங்கு அதிகம்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் மதிவண்ணன்.

''விநாயகருக்கு அருகம்புல், சிவனாருக்கு வில்வம், அம்பாளுக்கு செண்பகம், முருகப்பெருமானுக்கு செந்தாமரை, மகாவிஷ்ணுவுக்கு பவழமல்லிகை, ஐயப்ப ஸ்வாமிக்கு கதம்பம், ஆஞ்சநேயருக்கு துளசின்னு பூக்களைப் பயன்படுத்தி இந்த பூஜை நடக்கும். அதேபோல, விநாயகருக்கு சுண்டல், சிவனாருக்கு சீரகசம்பா சாதம், அம்பாளுக்குப் பாயசம், முருகப் பெருமானுக்கு தினைமாவு, மகாவிஷ்ணுவுக்கு புளியோதரை, ஐயப்ப ஸ்வாமிக்கு நெய் அப்பம், ஆஞ்சநேயருக்கு மிளகுவடைன்னு நைவேத்தியம் செய்து பூஜை பண்றது ரொம்பவே விசேஷம்!

கடன் தொல்லையால் தவிக்கிறவங்க, அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுறவங்க, பையனுக்கோ பொண்ணுக்கோ இன்னும் கல்யாணமாகலையேன்னு ஏங்கறவங்க, சொந்தமா வீடு வாசல் அமையலையேனு அல்லாடுறவங்க, பூர்வீகச் சொத்துப் பிரச்னைல சிக்கி, கோர்ட்டு கேஸ்னு அலையறோமேனு புலம்பறவங்க... இப்படி துக்கத்தோடயும் வேதனையோடயும் யார் இருந்தாலும், அவங்க ஒரேயொரு முறை இந்தத் திருப்புகழ் மகா மந்திர பூஜையைச் செய்தால் போதும். முடியலைன்னா, அதுல கலந்துக்கிட்டாலும் போதும்; அவங்களோட பிரச்னை சீக்கிரமே சரியாயிடும். அவங்க நினைச்சது நிச்சயம் நடந்தே தீரும்!'' என்று உறுதிபடச் சொல்கிறார் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்.

திருப்புகழ் அமிர்தம்...

''மிகவும் வலிமையானது திருப்புகழ். அப்படிப்பட்ட திருப்புகழைக் கற்க, திருப்புகழைக் கேட்க, திருப்புகழை நித்தமும் ஜபிக்க, திருப்புகழ் பூஜையை அனுதினமும் அர்ச்சிக்க... முக்தி எளிதாகும்னு சொல்லுது திருப்புகழ் சிறப்புப் பாயிரம் பாடல். அந்தத் திருப்புகழை, மகா மந்திரத்தை ஜபித்து, பூஜித்து வணங்குவோம்; வளமுடன் வாழ்வோம்!'' என்று சிலிர்ப்பு மாறாமல் சொல்கிறார் மதிவண்ணன்.

அருணகிரிநாதரே போற்றி! அருள் வழங்கும் வேலவா போற்றி!