Published:Updated:

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

திமேதாவியாக இருந்தாலும் அமைதியாக காய் நகர்த்துபவர்களே!

 புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் நிறைவேறும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால், பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். மகனுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும்.

அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். 10ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 12ல் மறைவதால், திடீர் பயணங்கள் உண்டு. அவ்வப்போது சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். சொத்து வாங்கும் போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்குங்கள். புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாகச் சிலரை சந்தேகப் படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங் கள் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.  

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

னி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே!

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.

பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.

சூரியன் 12ம் தேதி வரை 9ம் வீட்டில் நிற்பதால், வீண் செலவுகள், தந்தையாருடன் மோதல்கள் ஏற்படக்கூடும். 13ம் தேதி முதல் 10ல் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

குரு 3ல் மறைந்திருப்பதால், வீண் அலைச்சல், டென்ஷன், தூக்கமின்மை வந்து நீங்கும். கண்டகச் சனி தொடர்வதால், மனைவிக்கு முதுகுத் தண்டில் வலி, மாதவிடாய்க் கோளாறு ஏற்படக்கூடும்.

உங்களால் பயனடைந்தவர்கள் உங்களைக் கண்டும் காணாமல் செல்வார்கள். அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும்.  

அறிவுத் திறமையால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

ன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே!

குருபகவான் 2ல் நிற்பதால், பணப்புழக்கம் அதிகமாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். யோகாதிபதி சுக்ரன் 9ல் நிற்பதால், தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், வாகன விபத்து, அலைச்சல், காரியங்களில் தாமதம் ஏற்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

சனிபகவான் வலுவாக 6ம் வீட்டில் நீடிப்பதால் மாற்று மொழியினரால் நன்மை உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள், மறைமுக விமர்சனங்கள் வந்து போகும்.

தாயாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.  

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர்களே!

ராகு வலுவாக 3ல் தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். என்றாலும், சனி 5ல் நிற்பதால், அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நலமாக இருக்கும் என்று கவலைப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். புதன் 8ம் தேதி முதல் 7ல் அமர்வதால், உற்சாகமடைவீர்கள்.

சுறுசுறுப்பாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 9ம் தேதி வரை செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால், வீண் செலவு, சகோதர பகை வந்து நீங்கும். 10ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால், அலைச்சல், டென்ஷன் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது அவசியம்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரகசியங்களைக் காக்க  வேண்டிய வேளை இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே!

சுக்ரன் 7ல் நிற்பதால், உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

8ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால், வேலைச்சுமை, சளித் தொந்தரவு, நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். 10ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 8ல் மறைவதால், முன்கோபம் அதிகமாகும்.

கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும். 12ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 6ல் நிற்பதால், எல்லாப் பிரச்னைகளையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

13ம் தேதி முதல் சூரியன் 7ல் நுழைவதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். மனைவிக்கு கை, கால் வலி, கர்ப்பப்பை கோளாறு வந்து நீங்கும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

வளைந்து கொடுக்க  வேண்டிய தருணம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

லங்கி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவர்களே!

குருபகவான் வலுவாக இருப்பதால், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும்.

13ம் தேதி முதல் சூரியன் 6ல் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சுக்ரன் 6ல் மறைந்திருப்பதுடன், 10ம் தேதி முதல் செவ்வாயும் 7ல் அமர்வதால், அலர்ஜி, வேலைச்சுமை, சைனஸ் காரணமாக லேசான தலைவலி வந்து நீங்கும்.

கணவன்மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வந்து போகும். ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லுவது அவசியம். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாகச் செல்லவும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.  

அமைதி காக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

வருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படுபவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஓரளவு பணப்புழக்கம் உண்டு. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், கல்யாண முயற்சிகள் பலிதமாகும். 13ம் தேதி முதல் சூரியன் 5ல் நுழைவதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை தலைதூக்கும்.

கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. 10ம் தேதி முதல் செவ்வாயும் 6ல் நுழைவதால், சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்றாலும் கேதுவுடன் சேர்வதால் ஹார்மோன் பிரச்னை, அலர்ஜி, சோர்வு வந்து போகும். குருபகவான் 10ல் நீடிப்பதால், வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புக்கள், கௌரவக் குறைவான சம்பவங்கள் வந்து நீங்கும்.

ஏழரைச் சனி தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம்.

இழுபறி நிலை மாறி, ஓரளவு ஏற்றம் பெறும் நேரம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

ளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே!

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். டிரஸ்ட், சங்கங்கள் தொடங்குவீர்கள்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவீர்கள். மகனுக்குத் திருமணம் கைகூடிவரும். ராசிநாதன் செவ்வாய் 10ம் தேதி முதல் 5ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பது சற்று தாமதமாகி முடியும். ஜென்மச் சனி தொடர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்வார்கள்.  

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

ன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவர்களே!

புதன் சாதகமாக இருப்பதால், நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். 13ம் தேதி முதல் 3ல் சூரியன் நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். பித்ருவழிச் சொத்து கைக்கு வரும்.

ராசிநாதன் குரு 8ல் மறைந்திருப்பதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், சந்தேகத்தின் காரணமாக நல்லவர்களை இழக்க வேண்டி வரும். ஏழரைச் சனி தொடர்வதால், திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி ஏமாற வேண்டாம். பயணங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து, அதை சரி செய்வீர்கள். புது முதலீடுகளை யோசித்துச் செய்யுங்கள். உத்தியோகத் தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரியின் ஆறுதல் வார்த்தையால் நிம்மதி கிட்டும்.

கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் காலம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

ருகிலிருப்பவர்களின குறைகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துபவர்களே!

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கேது வலுவாக இருப்பதால், வாழ்வின் சூட்சுமத்தை உணர்வீர்கள். ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததாலும், 9ம் தேதி வரை செவ்வாய் 2ல் நிற்பதாலும், டென்ஷன், தலைச்சுற்றல் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.

கண் பார்வைக் கோளாறு, பல் வலி வந்து போகும். 10ம் தேதி முதல் செவ்வாய் 3ம் வீட்டில் நுழைவதால், தைரியம் பிறக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். சனி வலுவாக இருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

காலத்துக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே!

ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், லோன் கிடைக்கும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வபுண்ணியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள்.

வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். 13ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதாலும், செவ்வாயின் போக்கு சாதகமாக இல்லாததாலும், வயிற்று வலி, காய்ச்சல், முன்கோபம், டென்ஷன் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.நீங்கள் ஒன்று சொல்ல, சிலர் அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு உங்களை குறை கூறுவார்கள். 6ல் குரு தொடர்வதால், தவறானவர்களை எல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்துவிட்டோமோ என்ற ஒரு ஆதங்கம் வந்து போகும்.

வியாபாரத்தில் ஆதாயம் சுமாராகத்தான் இருக்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தி யோகத்தில் நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அதிகாரிகள் உங்களைக் குறை கூறத்தான் செய்வார்கள்.

வேலைச்சுமை அதிகரிக்கும்  தருணம் இது.

ராசிபலன்-பிப்ரவரி 3 முதல் 16 வரை

ழுத்தமான கொள்கையாலும், ஆழமான பேச்சாலும் அடுத்தவர்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே!

ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், நினைத்த காரியம் சுலபமாக முடியும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

10ம் தேதி முதல் ராசிக்குள் செவ்வாய் அமர்வதாலும், 13ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 12ல் மறைவதாலும் வீண் விரயம், செலவு, திடீர்ப் பயணம், சகோதர வகையில் சங்கடங்கள் வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.  

ராகு 7ம் வீட்டிலும், கேது ராசிக்குள்ளும் அமர்ந்திருப்பதால், மனைவியுடன் வாக்குவாதம், கை, கால் வலி வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும்.

அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism