Published:Updated:

‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்!’

கோவை முகாமில் வாசகர்கள் நெகிழ்ச்சி!வி.ராம்ஜி

‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்!’

கோவை முகாமில் வாசகர்கள் நெகிழ்ச்சி!வி.ராம்ஜி

Published:Updated:

''இதோ, இந்தச் சொம்பிலேருந்து முயல்குட்டியை எடுத்துட்டா, 'அட, இந்தச் சாமியார் சொம்புலேருந்து முயல் எடுத்துட்டார்’னு ஆச்சரியமாப் பேசுவீங்க. ஆனா யாராவது, 'இந்தச் சாமியாருக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா? ஒரு முயலை ஏன் இந்தச் சொம்புக்குள்ளே திணிச்சு, படாதபாடு படுத்துறார்?’னு கேப்பீங்களா? மாட்டீங்கதானே? இப்படியெல்லாம் ஜால வேலைகள் செஞ்சாத்தான் சாமியார்னே ஒப்புக்குவீங்க. 

‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்!’

நான் இந்தச் சொம்புல இருக்கிற தண்ணியைக் குடிச்சு, மனுஷனாகிக்கிறேன். அதான் என்னால செய்யமுடியும்!'' என்று திரையில் சத்குரு சொல்ல, பயிற்சி முகாமில் பார்த்துக் கொண்டிருந்த வாசகர்கள் கைதட்டி ரசித்துச் சிரித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்திவிகடனும் ஈஷா யோகா மையமும் இணைந்து நடத்தும் இலவச ஈஷா யோகா பயிற்சி முகாம், கடந்த 18.1.15 அன்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள அர்த்ரா ஹாலில் நடைபெற்றது. ஒவ்வொரு பயிற்சி குறித்தும், திரையில் சத்குரு சொல்லச் சொல்ல, ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்கள் வாசகர்கள்.

பயிற்சி குறித்தும், பயிற்சியால் விளையும் பலன்கள் குறித்தும் சத்குரு விவரிக்க, வாசகர்களின் சந்தேகங்களுக்கு முகாமில் இருந்த பயிற்சியாளர் உரிய விளக்கங்களை அளித்தார்.

''என் பாட்டி சக்திவிகடனைத் தொடர்ந்து வாங்கிப் படிச்சு, சேர்த்துவைச்சுக்கிட்டும் இருக்காங்க. அவங்கதான் 'நம்மூர்ல யோகா கிளாஸ் நடத்தறாங்க. போய்க் கலந்துக்கோ. இன்னும் நல்லா படிப்பு ஏறும்னு சொன்னாங்க. இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, மனசு லேசாகுறதை உணர முடிஞ்சுது.  நல்லாப் படிக்கணுமே, நிறைய மார்க் வாங்கணுமேங்கற மாதிரியான டென்ஷன்லேருந்து ஒரு ரிலாக்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கு'' என்று உற்சாகமாச் சொல்லும் அட்சரா 11ம் வகுப்பு படிக்கிறார்.

''மதுரைல பயிற்சி நடந்தப்போ, ரொம்ப ஆர்வமா என் பெயரைப் பதிவு பண்ணினேன். ஆனா, அப்போ என்னால கலந்துக்க முடியாம போயிடுச்சு. அடுத்ததா கோவைல யோகா பயிற்சி முகாம்னு அறிவிப்பைப் பார்த்ததும், உடனே பதிவு பண்ணிட்டேன். உண்மையிலேயே சக்திவிகடனுக்கும் ஈஷா யோகா மையத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்!’

''நான் எல்.ஐ.சி. ஏஜென்ட்டா வொர்க் பண்றேன். எப்பவும் ஒருவித டென்ஷன்லேயே இருப்பேன். வீடு, பொது இடம், வாடிக்கை யாளர்கள்னு எல்லா இடங்களுக்கும் இந்த டென்ஷன்  பரவிக்கிட்டே இருக்கும். இதனால அயர்ச்சியாவும் இறுக்கமாவும் உணர்ந்தேன்.

இதுலேர்ந்து எப்படி மீண்டு வர்றதுன்னு கவலைப்பட்டேன். இப்படியொரு பயிற்சி இருக்கு, இதெல்லாம் செஞ்சா டென்ஷன் குறையும், வாழ்க்கை நல்லாருக்கும்னு இந்த முகாமுக்கு வந்ததன் மூலமா புரிஞ்சுக்கிட்டேன். இந்த ஈஷா யோகா பயிற்சியைத் தொடர்ந்து முழுமையா கத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்'' என்று உறுதிபடத் தெரிவித்தார் லட்சுமணன்.

காலையில் துவங்கி, மதிய வேளையில் பயிற்சி முடிந்த கையோடு, அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தோம்.

ஈஷா யோகா மையத்தை அடையும்போது கிட்டத்தட்ட மணி 2. மையத்தைச் சேர்ந்தவர்கள் வாசகர்களை அன்புடன் வரவேற்று, 'எல்லாரும் பசியா இருப்பீங்க. அதனால, முதல்ல சாப்பிட்டுடு வோம்’ என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே கேசரி, முட்டைகோஸ் பொரியல் என தடபுடலாக விருந்துச் சாப்பாடு அமர்க்களப்பட்டது.

பிறகு, ஆஸ்ரமத்தின் பரப்பளவு குறித்தும், ஒவ்வொரு இடத்தின் முக்கியத்துவம் குறித்தும் வாசகர்களுக்கு விளக்கப்பட்டது. அதையடுத்து தியானலிங்க தரிசனம். அந்த பிரமாண்ட நந்தியும், சில்லென வீசிய குளிர்ந்த காற்றும் வாசகர்களைச் சிலிர்க்கச் செய்தன.

அனைவரும் தியானலிங்கத்தைச் சுற்றி அமர்ந்து, பதினைந்து நிமிட நேரத்துக்கு தியா னத்தில் ஈடுபட்டார்கள். வெளியே வந்தபோது, ஒவ்வொருவர் முகத்திலும் ஒருவித பரவசம் படர்ந்திருப்பதை உணர முடிந்தது.

‘யோகா பயிற்சியும் அருமை...தியானலிங்க தரிசனமும் அற்புதம்!’

''இப்ப லிங்க பைரவியைத் தரிசனம் பண்ணப் போறோம். ரொம்ப சக்தி வாய்ந்த தேவி. தியானலிங்க வழிபாடு, ஞானத்தைக் கொடுக்கும். இந்த லிங்க பைரவியை வழிபட்டா, உங்க குடும்பம், கல்வி, வியாபார விஷயங்களெல்லாம் நீங்க நினைச்சது போலவே நடக்கும். நல்லா பிரார்த்தனை பண்ணிக்குங்க'' என்று சொல்லி விளக்கியதும், மிக நீண்ட வரிசையைக் கடந்து, லிங்க பைரவியைத் தரிசித்தோம். அதன் பிறகு சூரிய குண்டத்தைத் தரிசித்தார்கள் வாசகர்கள்.

''இந்த ஆஸ்ரமத்துக்கு வரணுங்கறதும், தியானலிங்கத்தை தரிசிக்கணுங்கறதும் எங்களின் ரொம்ப நாள் ஆசை. இன்னிக்கி, சக்தி விகடனால அது நிறைவேறிடுச்சு. அதுவும் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்ட அருமையான சாப்பாடு, ஆஸ்ரம அன்பர்களின் வழிகாட்டல், விளக்கம்னு மிகச் சிறப்பா நடந்தது. யோகா பயிற்சியும் அருமை; தியானலிங்க தரிசனமும் அற்புதம்! இந்த நாளை மறக்கவே முடியாது எங்களால!'' என்று ஒரே குரலில் நெக்குருகிச் சொன்னார்கள் வாசகர்கள்.

ஈஷா யோகா மையம் சார்பில், சக்திவிகடன் வாசகர்களுக்கு சத்குருவின் ஆன்மிக உரை கொண்ட சி.டி., தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி ஸ்டிக்கர்கள், நாகர் உருவம் கொண்ட மோதிரம் ஆகியவை வழங்கப்பட்டன.

ஈஷா யோகா மையத்துக்கு நன்றி சொல்லிப் பூரித்தார்கள் வாசகர்கள்.

''நீங்க முதல்ல சக்திவிகடனுக்குதான் நன்றி சொல்லணும். கோவைல முகாம்னு சொன்னதுமே, பக்கத்துல இருக்கிற ஆஸ்ரமத்துக்கு வாசகர்களை அழைச்சிட்டுப் போகணும். தரிசனம் பண்ணி வைக்கணும்னு சக்திவிகடன் உங்களுக்காக, உங்க தரப்புலேருந்து யோசிச்சு செயல்பட்டிருக்கு. எங்களுக்கும் இது புது அனுபவம்!'' என்று ஆஸ்ரமம் தரப்பில் அங்கிருந்த அன்பர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

நல்ல நல்ல அனுபவங்கள், நம்மை இன்னும் இன்னும் சீராக்கும்; செம்மையாக்கும்!

  படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism