Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிரீமியம் ஸ்டோரி

க்னம் (பிறந்த வேளை) அல்லது சந்திரன் (நட்சத்திர பாதம்) மகரம் அல்லது கும்ப ராசியில் இருக்கும் தறுவாயில், சனியின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவனைக் கணவனாக ஏற்பாள். சமுதாயம் புறக்கணித்தாலும் அவனை ஏற்றுக்கொள்வாள்; தரம் தாழ்ந்த செயலில் வெட்கமின்றி ஈடுபடுவாள்; தரம் தாழ்ந்த அனுபவத்தில் திருப்திப்படுவாள் என்கிறது ஜோதிடம். 

தன்னைப் போன்றவர்களுக்கு நாகரிகமாக வாழும் சூழல் இருந்தாலும், தரமான வாழ்க்கையை ஏற்க வழிவகை இருந்தாலும் கூட, அவளது சிந்தனை விபரீதத்தில் விருப்பம் காட்டுகிறது. காட்டில் வழிப்பறியில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திய வேடனுக்கு மனைவி இருந்தாள் (இவன் பிற்பாடு மனம் திருந்தி, தவமிருந்து வால்மீகியானான்). அரசபோகம் இருந்தும், குதிரை லாயத்தின் காப்பாளனைக் கணவனாக ஏற்றாள் அரசிளங்குமரி என்று சரித்திரம் சொல்லும் (பர்த்ருஹரி). ஜமீனுக்குச் சொந்தமானவளாக இருந்தும் எடுபிடியைக் கணவனாக ஏற்றவளும் உண்டு. தரமான தாம்பத்தியம் இருந்தும், நீசனைக் கணவனாக ஏற்று, அவனுடைய தொடர்பைத் தக்கவைக்க, கணவனையே அழிக்க முயன்ற காரிகைகளும் உண்டு (கொலையும் செய்வாள் பத்தினி).

தரம் தாழ்ந்த செயல்பாடுகள்...

இனிப்புச் சுவை பல பழங்களில் நிறைவாக இருந்தாலும், வேப்பம் பழத்தில் இருக்கும் தரம்

காலக் கணிதத்தின் சூத்திரம்

தாழ்ந்த இனிப்பைக் காகம் விரும்பிச் சுவைக்கும். ஆசையானது மடை திறந்த வெள்ளம்போல் பெருகி, சுவைக்க இடம் தேடும்போது, சூழலை மறந்து தராதரம் பார்க்காமல், கிடைத்த இடத்தில் ஒன்றிவிடும். கோபம் எல்லையை எட்டினால் குரோதமாக உருவெடுத்து, கிடைத்த இடத்தில் செயல் பட்டுத் தணியும். ஆத்திரத்தில் அடிக்கக் கை ஓங்குபவன், ஆள் அகப்படாத நிலையில் தன்னுடைய தலையிலேயே அடித்துக் கொண்டு ஆத்திரத்தைத் தணிப்பான். பசி வளர்ந்து அடக்க முடியாமல் போகும்போது, கீழ்த்தரமான உணவையும் ஏற்றுப் பசியைத் தணித்துக்கொள்வார்கள்.

இருபாலரிடமும் தென்படும் ஓரினச் சேர்க்கையும் தரம் தாழ்ந்த தேர்வின் மறுவடிவமாகும். இங்கு சுவையோ, சுவையில் ஏற்பட்ட அலாதியான திருப்தியோ அளவுகோல் அல்ல. வெளிப்பட்ட ஆசையின் தணிப்புதான் இலக்கு. பெற்ற குழந்தைகளை, வேலைப்பளு காரணமாக வளர்க்க நேரம் இல்லாமல், பிறரிடம் ஒப்படைக்கும் சில தாய்மார்களும் உண்டு. ஆனால், காரில் பயணிக் கும்போதும், மடியிலும், படுக்கையிலும் செல்லப் பிராணிகளுடன் அன்பைப் பகிர்ந்துகொண்டு செயல்பட நேரம் இருக்கும். இதற்குக் காரணம், கருணை உள்ளத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; ஆசையைச் செயல்படுத்த இடம் தென்படாமல், தன் கையே தனக்கு உதவி என்ற நிலைதான். பிள்ளைகளிடம் வெளிப்படுத்த இயலாததை செல்லப்பிராணிகளிடம் வெளிப்படுத்த வேண்டிய இப்படியான நிலையும் சில இடங்களில் உண்டு.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம்!

காலக் கணிதத்தின் சூத்திரம்

உடம்பு பூராவும் தேன் பரவியிருக்கிறது. ஆனால் ஈ, இனிப்பான தேனை ஒதுக்கிவிட்டு, அவனுடைய கால்விரல் இடுக்கில் வழியும் சீழைச் சுவைத்து மகிழும். அன்பான, அழகான, இன்பத்தில் மூழ்கடிக்கும் கணவனைப் பெற்றிருந்தும், அவனை ஒதுக்கிவிட்டு, அன்பும், அழகும், அரவணைப்பும் இல்லாதவனைத் தேடிப்பிடித்து அவனுடனான இணைப்பை விரும்பும் காரிகைகளும்  இருந்திருக்கிறார்கள். ஒப்பில்லா மனித இனத்தில் பிறந்தும், உப்புச்சப்பில்லாத விலங்கின உணர்வுதான் இதற்குக் காரணம் என்று சொல்லவேண்டியிருக்கிறது.

பணம், அழகு, பதவி, செல்வாக்கு, கம்பீரம், உயர்வு போன்றவற்றின் ஈர்ப்பில் இணையவில்லை; தன்னுடைய திருப்தி, மகிழ்ச்சி போன்றவற்றுக்காகவும் இணையவில்லை; பிறரது ஆசைக்குக் கட்டுப்படுவதோடு முடிந்துவிடும் இந்த இயல்பு விலங்கினங்களில் தென்படும். ஆக, ஆறாவது அறிவு இருந்தும் அது செயல்படாமல், 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற நோக்கில், இயந்திரம் போன்று  இயங்கும் நடைமுறைதான் வெளிப்படும்.

மனம் சார்ந்தது இன்பம்

இதையெல்லாம் அலசி ஆராயாமல், குறிப்பிட்ட த்ரிம்சாம் சகத்தில் உதித்தவளின் இயல்பை அறவே ஒதுக்கிவிட்டு, வெளிப் படையான கல்வி, பதவி, பணம், அழகு, தற்காலச் சூழல் ஆகியவற்றைக் கண்ணுற்று, விபரீதமான இணை சேர்ப்பில் இறங்கும் துணிவு, ஜோதிட

காலக் கணிதத்தின் சூத்திரம்

மேதைகளுக்கு இருக்கக்கூடாது. ஆண் பெண் இருவருடைய மனப்போக்குதான் அவர்கள் சுவைக்கும் இன்பத்துக்கு ஆதாரம். இன்ப உணர்வு மனம் சார்ந்தது. வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவது, பணம் சார்ந்தது. தாம்பத்தியத்தில் இன்பம்தான் இலக்கு. அதில் அவர்கள் இன்பத்தை உணர்ந்தால், மற்றவையும் அவர்கள் மனதுக்கு இன்பமாகவே தோன்றும்; துன்பம் தலைதூக்காது. தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியை எட்டிய தம்பதி களுக்கு ஏழ்மையும் இனிக்கும்; இன்னல்களும் பாதிக்காது.

பட்டம், பதவி, அந்தஸ்து, அழகு ஆகியவை பொருத்தத்தில் இருக்காது. நிலையில்லாத இவற்றைப் பொருத்தத்தில் இணைக்காது ஜோதிடம். ஜோதிடர் பரிமாறுபவர்; சமைத்தவர் அல்ல. தனது சிந்தனையின் பங்கை அதில் இணைத்து, ஜோதிடத்துக்குப் பெருமை சேர்க்கவேண்டிய வேலை தேவையற்றது. அது, ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது. வீக்கத்தின் புடைப் பாகத்தான் இருக்கும். மக்களின் பலவீனம் தங்களுக்குத் துணிவை அளித்தாலும், ஜோதிடர்கள் அதை ஏற்காமல் சேவை செய்வதே போற்றுதலுக்கு உரியது.

சமுதாயத்தின் அங்கம்

நேர்த்திக்கடனாகக் குவியும் ரோமங்கள் வியாபார நோக்கில் பலபேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்போது, ரோமத்தை வளர்த்து நேர்த்திக்கடன் கொடுத்து, ரோமத்தைப் பெருக்கும் ஆர்வம் வளர்ந்துவிடும். 'திருமணம் முறிவைச் சந்தித்தாலும், மறு திருமணம் உண்டு’ என்பது நடைமுறையில் உள்ளபோது, திருமண முறிவு அதிகமாகும் என்பது கண்கூடு! திருமணம் வியாபாரம் ஆகும்போது, தாம்பத்தியத்தின் இலக்கு பலவீனம் அடைந்து, ஆசையின் ஏக்கத்தைத் தணித்துக்கொள்ளும். இங்கே பயன்பாடு இலக்காக மாறிவிடுகிறது. பல விவாகரத்துகள் இயந்திரமயமான இணைப்பில் திருப்தி அடைந்துவிடுகின்றன. இப்படியான தொடர் விவாகரத்துகள் தரம்தாழ்ந் தவனையும் ஏற்க வைத்துவிடும். தரம் தாழ்ந்த இணைப்பில் ரத்த பந்தம் ஏற்படுவதால், உடல் ஆரோக்கியமும் பாதிப்படையவும் இடம் உண்டு. பண்டைய நாட்களில் ஒட்டுமொத்த சமுதாயத்தைக் காப்பாற்ற, குறிப்பிட்ட தாசி இனத்தவர்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒதுக்கிவைத்தார்கள். அது இருவருக்கும் பாதுகாப்பு அளித்தது. தாசியும் வாழ்ந்தாள்; சமுதாயமும் கொந்தளிப்பு இல்லாமல் வாழ்ந்தது.

திருமணம் என்பது ஒரு தனி மனிதனின் உரிமையல்ல; அது, சமுதாயத்தின் அங்கம். சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் சிதறுண்டு போகாமல் காப்பாற்றப்பட, தனிமனிதனின் திருமணம் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு இருக்கவேண்டும். 'திருமணம் பிறப்புரிமை’ என்பது ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கலாம்; சமுதாயத்துக்குப் பெருமை சேர்க்காது. சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஜோதிடம், திருமண இணைப்புக்கு உகந்த வகையிலான பரிந்துரைகளை அளித்தது. பக்காத் திருடன், கொலையாளி ஆகியோருக்குச் சமுதாயத்தின் தீங்கைக் கருத்தில் கொண்டு தண்டனைக்கு உள்ளாக்குகிறோம். திருமண முறிவை, அது அவர்களின் பிறப்புரிமை என்று ஏற்கிறோம். சமுதாயத்தின் சீரழிவைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

காலக் கணிதத்தின் சூத்திரம்

சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், இயல்பில் தரம் தாழ்ந்தவனை  ஏற்றாலும், அந்தப் பெண் சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பது இல்லை. அவள், தனது வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியில் நிம்மதி அடைந்துவிடுவாள். தாய்ப்பால் அளித்து குழந்தையை அழிக்க முற்பட்டாள் ஒருத்தி (பூதனை). ஆற்று நீரில் குழந்தையைத் துறந்தாள் ஒருத்தி (குந்தி). உடலுறவில் இணைந்து எதிரியை அழித்தாள் ஒருத்தி (விஷகன்யகை). இங்கெல்லாம் பெண்மையின் இயல்பு தேய்ந்துபோய்விட்டது. பெண்மையின் இழப்புதான் தாழ்ந்த நிலையிலான உடலுறவுக்கு இணைந்தது.

தாம்பத்திய இணைப்பின் தரத்தை உணவுபோல் மதிப்பீடு செய்துவிட்டோம். அது அறத்துக்கும், அதன் வழியில் உலக இயக்கத்துக்கும் ஊக்கமளிக்கும் இணைப்பு என்பதை மறந்து விட்டோம். இதை ஞாபகப்படுத்த வந்ததே ஜோதிடம். அன்றாட பலன்களைச் சொல்லி பாமர மக்களைக் களிப்பூட்டுவதல்ல ஜோதிடம். ஆனால், ஜோதிடத்தை விளையாட்டாகப் பயன்படுத்தும் போக்கு, பலபேரின் சிந்தனையைத் திசைதிருப்பி துயரத்தைச் சந்திக்கவைக்கிறது.

சனி த்ரிம்சாம்சகம்

மகரம், கும்பம் இரண்டு ராசிகளிலும் முழுமையாகச் சனி பரவியிருப்பான். இரண்டு ஹோரைகளிலும் சூரியனின் பங்கு அதிகமாக இருக்கும். முதல் த்ரேக்காணத்தில் சனியும், மூன்றாவது த்ரேக்காணத்தில் புதனும் இருப்பார்கள்.

ஒற்றைப்படை ராசியில் 5ல் இருந்து 10 பாகைகள் வரையிலும், இரட்டைப்படை ராசியில் 20ல் இருந்து 25 பாகைகள் வரையிலும் சனி த்ரிம்சாம்சகம் இருக்கும். கீழ்த்தரமான வேலைகளை மனமுவந்து ஏற்கவைப்பவன் சனி. மேலும், சூடுசொரணையின்றி தனக்கு வரும் இழுக்கை ஏற்க வைப்பவன்; தராதரம் பாராமல் செயலில் இறங்கவைப்பவன்; குறிக்கோளில் பிடிப்பு இல்லாமல் செயல்பட வைப்பவன். உடலுழைப்பில் வாழ வைப்பவனும் சனிதான். ஆனால், சமுதாய வாழ்க்கையில் தனது பங்கு உண்டு என்பதை ஏற்க வைக்காதவன். இவை எல்லாம் சனியின் பொறுப்பில் நிகழ்ந்துவிடும். ஆனால், மற்ற வெப்பக் கிரகங்களின் ஒத்துழைப்பையும், ஸப்தாம்சம், நவாம்சம், தசாம்சம் போன்ற ராசிப் பிரிவுகளில் தென்படும் வெட்பதட்ப நவகிரகங்களின் ஒத்துழைப்பையும் இணைத்து, சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளின் தராதரத்தை நிர்ணயிக்கும் ஜோதிடம்.

குறைவில்லாத மகிழ்ச்சி

பண்டைய நாட்களில் பெருக்கித் துடைத்து வீட்டை சுத்தம் பண்ணுதல், குழந்தைகள் பாதுகாப்பு, நெல்லுக் குத்துதல், கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தல், வயலில் நாற்று நடுதல், அரசாங்கத்தில் வெண் சாமரம் வீசுதல், தாம்பூலப் பெட்டியைச் சுமந்துகொண்டு எஜமானனைப் பின்தொடர்தல், குழந்தைகளை நீராட்டுதல் போன்ற வேலைகளைப் பெண்கள் ஏற்றார்கள். இதெல்லாம் உடல் உழைப்பில் நிறைவேறிவிடும். சமுதாயமும் இதைத் தரம் தாழ்ந்த வேலையாகப் பார்க்கும். இப்படி, தரம் தாழ்ந்த வேலையில் ஆர்வத்தோடு ஈடுபடும் இயல்பு சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளிடம் இருக்கும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்

வியாச மகரிஷியுடன் இரண்டாவது முறையாக இணைய விருப்பம் இல்லாத நிலையில், அரசகுமாரிகள் வேலைக்காரியை வியாசருடன் இணைய நிர்பந்தித்தார்கள். அவளும் இணைந்தாள்; விதுரர் பிறந்தார். அவளது செயல்பாடு அவமானமாகவோ இழுக்காகவோ பேசப்படவில்லை. அவளும் அதை இழுக்காகப் பார்க்கவில்லை. மாறாக, மகானின் தொடர்பில் உயர்ந்த புதல்வனைப் பெற்றதில் மகிழ்ந்தாள். சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளுக்கு, தனது செயல்பாட்டில் வெட்கித் தலைகுனியும் உணர்வு இருக்காது. அதைத் தவறில்லாத நடைமுறையாகவே எடுத்துக் கொள்வாள். சமுதாயப் பார்வையில் மாறுபட்ட கண்ணோட்டம் இருந்தாலும், அவளுடைய மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இருக்காது.

சூரியனும் புதனும்

இங்கு, சனி சூரியனோடும் புதனோடும் இணைந்து, தனது த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளின் இயல்பை உருவாக்கினான். சனியை மெதுவாக நகர்பவன் என்றும், சூரியனின் புதல்வன் என்றும் சித்திரிப்பது உண்டு. வெப்பத்தின் ஆதிக்கத்தில் சோம்பலும் வறட்சியும் தென்படும். நகர்தலில் சோம்பல் தென்படுமே தவிர, உழைப்பில் சோம்பல் இருக்காது. ஆக, சோம்பல் இல்லாத உழைப்பின் தொடர்ச்சி அவளிடம் உண்டு. வெப்பம் மாறுதலை உண்டுபண்ணும் தகுதி உடையது. சாலையில் தாரை உருகவைப்பதும், சேற்று நீரை உறிஞ்சி கட்டியாக்குவதும் வெப்பம்தான். பொருளின் தன்மைக்கு உகந்தவாறு மாறுபாடு தோன்றும்.

ஈவு, இரக்கம், கருணை, தாட்சண்யம், பிரிவு போன்ற குணங்கள் இயல்பாகவே பெண்மையில் தென்படும். இவை, சிந்தனையில் வெளிப்படும் குணங்கள். வெப்ப கிரகத்தின் தாக்கத்தில் அது மங்கிப்போய்விடுகிறது. மாறாக, தன்னுடைய ஆர்வம், விருப்பம், மகிழ்ச்சி போன்றவை முன்னுரிமை பெற்றுத் தராதரம் பார்க்காமல் செயல்படும் எண்ணத்தை அவளிடம் நடைமுறைப்படுத்திவிடும். அதன் வெளிப்பாடு, தரம் தாழ்ந்தவனையும் கணவனாக ஏற்க வைக்கும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்

புதன், சிந்தனை வளத்தைத் தோற்றுவிக்கும் தகுதியை வெப்பக்  கிரகத்தின் சேர்க்கையில் இழந்துவிடுகிறான். வெப்பக்கிரகத்தின் ஏகாதிபத்தியத்தில் மாறுபட்ட செயல்பாடு அவளில் தோன்றியது.

ஒளிமயமான கிரகம் ஒன்றுதான். அது சூரியன். அதிலிருந்து வெளிவந்த சனிக்குத் தனியே ஒளி இல்லை. அதுவும் ஜடம்தான். சூரிய ஒளியை ஏற்றுதான் தனது செயல்பாட்டை நடைமுறைப்படுத்த இயலும். இருவகையான ஒளிக் கீற்றுகள் சூரியனில் இருக்கும். ஒன்று, தன்னிடம் இருக்கும் ஒளியை கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பகிர்ந்தளித்து, அவற்றின் செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும். மற்றொன்று தன்னிடம் இருந்து விலகாமல் உலக இயக்கத்துக்கு ஆதாரமாகவும், பருவ கால மாற்றங்களுக்குத் தோதாகவும் திகழும். ரத்னங்கள், கண்ணாடிகள் போன்றவற்றைத் தனது கிரணத்தின் தாக்கத்தால் ஜொலிக்க வைக்கிறது. காலாகாலத்தில் மழை பொழியவும், அவனுடைய கிரணங்கள் பயன்படுகின்றன.

ஆக, ஆக்கபூர்வமான விஷயங் களில் வெப்பம் செயல்படுகிறது. சூரியனிடமிருந்து ஒளிபெறும் சந்திரனும் உலக இயக்கத்துக்கு உறுதுணையாகத் திகழ்கிறது.

கிரகங்களும் தங்களுடைய செயல்பாட்டைச் சிறக்கவைக்க சூரிய வெப்பத்தை எதிர்பார்க் கின்றன. இங்கும், சூரியனிடம் இருந்து பெற்ற வெப்பத்தின் வலிமையில், சனி தனது த்ரிம்சாம் சகத்தில் பிறந்தவளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு