Published:Updated:

“முக்கனியாய் இனித்தது பூஜை, சொற்பொழிவு, அன்னதானம்!'’

மறைமலைநகர் பூஜையில் வாசகியர் மகிழ்ச்சி!வி.ராம்ஜி

“முக்கனியாய் இனித்தது பூஜை, சொற்பொழிவு, அன்னதானம்!'’

மறைமலைநகர் பூஜையில் வாசகியர் மகிழ்ச்சி!வி.ராம்ஜி

Published:Updated:

''திருவிளக்கைத் திருமகளாக பாவித்து பூஜிக்கிறோம். அதேபோல், பெண்களையும் திருவிளக்கா கவும் திருமகளாகவும் பாவித்துப் போற்றுகிறோம். அப்படி, திருமகளே திருமகளைக் கொண்டு செய்யப்படும் இந்தத் திருவிளக்கு பூஜையானது மிகவும் மகத்தானது.'' என்று சிறப்பு விருந்தினரான தஞ்சாவூர்க் கவிராயர் பேச... பூரித்துப் போனார்கள் வாசகிகள்.

சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 24.2.15 அன்று மறைமலைநகர் ஸ்ரீசெல்வ முத்துக்குமார ஸ்வாமி கோயிலில் நடைபெற்றது. சக்தி விகடனின் 159வது விளக்கு பூஜை இது.

''ஆத்மார்த்தமாக எது செய்தாலும் அதில் கடவுளின் சாந்நித்தியம் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்கள் முன்னோர்கள். சக்தி விகடன் நடத்துகிற இந்த விளக்குபூஜையிலும் கடவுளின் சக்தியும் சாந்நித்தியமும் குடிகொண்டிருக்கிறது என்பது பரிபூரணமாகத் தெரிகிறது. இதோ, இந்த செல்வ முத்துக்குமார ஸ்வாமி கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் சக்திவாய்ந்த ஆலயம் இது. இன்றைக்கு (24.2.15) சஷ்டி நன்னாள். முருகப்பெருமானுக்கு உரிய நாளிலே, அவனுடைய சந்நிதியிலேயே விளக்குபூஜை நடக்கிறது. நீங்கள் பாக்கியசாலிகள், வரம் பெற்றவர்கள், இனி சுபிட்சத்துடன் திகழ்வீர்கள் என்பதற்கு, இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும், சொல்லுங்கள்!'' என்று தஞ்சாவூர்க் கவிராயர் நெகிழ்ந்து சொல்ல, மகிழ்ந்து போனார்கள் வாசகிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடுத்த வருஷம் எங்களுக்குச் சதாபிஷேகம். என் கணவரின் துணை யோடு இந்த பூஜைல கலந்துக்கிட்டேன். மனசுக்கு ரொம்ப நிறைவாவும் நிம்மதி யாவும் இருந்துச்சு'' என்று தெரிவித்தார், கூடுவாஞ்சேரியில் இருந்து வந்திருந்த வாசகி துர்காம்பாள்.

“முக்கனியாய் இனித்தது பூஜை, சொற்பொழிவு, அன்னதானம்!'’

''சக்தி விகடன் விளக்குபூஜை, நம்ம ஏரியாவிலேயோ அதுக்குப் பக்கத்து லயோ எப்போ நடக்கும்னு ஏக்கத்தோடு காத்துக்கிட்டே இருந்தேன். அது இன்னிக்கு நிறைவேறிருச்சு. இதோ, ஓடிவந்து கலந்துக்கிட்டேன்'' என்று சொல்லி நெகிழ்ந்தார், செங்கல்பட்டு வாசகி லட்சுமி.

வாசகியர் அனைவருக்கும் ஸ்ரீஅன்ன பூரணி திருவுருவப்படம், மகா பெரியவாளின் படம், மஞ்சள், சரடு, குங்குமம் ஆகியவற்றை வழங்கினார்

'உமாசங்கர் கேட்டரிங் சர்வீஸ்' நடத்தி வரும் வேங்கடசுப்ரமணியன். அத்துடன், இனிக்க இனிக்க கேசரியும், மணக்க மணக்க சாம்பார் சாதமும் வழங்கினார்.

''விளக்குபூஜைல சொற்பொழிவையும் சேர்த்தீங்க. இப்ப அன்ன தானமும் நடந்திருச்சு. ஆக, மாபலாவாழை மாதிரி இந்த விளக்குபூஜை, சொற்பொழிவு, அன்னதானம்! மொத்தத்துல எங்க மனசும் வயிறும் நிறைஞ்சிருச்சு'' என்று நெகிழ்ந்து சொன்னார்கள் வாசகிகள்.

இந்த நிறைவும் நிம்மதியும் தொடர... முத்துக் குமார ஸ்வாமி அருள்பாலிப்பான்!

படங்கள்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism