Published:Updated:

கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

தினமும் காலை ஏழரையிலிருந்து எட்டு மணி வரை எங்கள் அப்பார்ட்மென்ட் அமர்க்களப்படும். எண்பது வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம். ஒரு வீட்டில் சராசரி இரண்டு குழந்தைகள் என்றாலும், மினிமம் 160 குழந்தைகளின் பள்ளிக்கூட புறப்பாடு நடக்கும் நேரம் அது. ஸ்கூல் யூனிஃபார்மில், வண்ணத்துப் பூச்சிகளாக இளம் மொட்டுகள் முதுகிலும், கையிலும் மூட்டைகளுடன் கிளம்ப, கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுப்பார்கள் பெற்றோர்கள். 

பள்ளிக்கூட வேன்கள் அணி வகுத்து வர, மெயின் கேட் வரை வந்து டாட்டா காட்டுவார்கள் பெரும்பாலான பெற்றோர். குழந்தைகளைத் தனியாக அனுப்பிவிட்டு, பால்கனியிலிருந்து 'பை... பை...’ சொல்பவர்களும் உண்டு.

''பை ஆக்ருத்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பை பை பனுவல் டியர்...''

''ஸீ யூ சந்திஷ்ட்...''

''ஜாக்கிரதையா போயிட்டு வா, சிக்புக்...''

''இஷாயூ பேபி, பை...''

இப்படி விதவிதமான பெயர்களில் தங்கள் குழந்தைகளை விளித்து விடைகொடுத்துக் கொண்டிருக்க, இந்த நவீன நாமாவளிகள் எனக்கு தினசரி காலை நேரப் பொழுதுபோக்கு!

கலகல கடைசி பக்கம்

ஒரு குழந்தைக்கு அசின்தியா என்று பெயர். இன்னொன்றுக்கு ஆத்ரித். தன்ரிகா, ஆர்யமன், ஹ்ருதய் என வெவ்வேறு நாமகரணங்களுடன் குழந்தைகள்!

இவற்றில் எதுவுமே செல்லப் பெயர்கள் கிடையாது. நெல்லில் எழுதிய அக்மார்க் ஒரிஜினல் பெயர்கள். பள்ளிக்கூடப் பதிவேடுகளிலும் இதே பெயர்கள்தான். வருகைப் பதிவேட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் குழந்தைகளின் பெயர்களை எழுதுவதற்குள் 'மிஸ்’கள் திண்டாடிப் போவதாகக் கேள்வி!

''இப்போதெல்லாம் கருவுற்றதுமே மனைவியும் கணவனும் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை ரூம் போட்டு யோசிக்கிறார்கள். யாரும் வைக்காத பெயராக அது இருக்க வேண்டும் என்பதோடு, வைக்கப்போகும் பெயர் ஒருவருக்கும் வாயில் நுழைந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம்!'' என்றார் நண்பர்.

''அப்போ பகவான் பெயரைச் சூட்டறது, அம்மன் பெயரை வைக்கறது இதெல்லாம்..?'' என்று அப்பிராணியாகக் கேட்டேன்.

''அப்படி எதையாவது வச்சா 'பழைய பஞ்சாங்கம்’னு முத்திரை குத்தி, பரண் மேல உங்களைத் தூக்கிப் போட்டுடுவாங்க!''

'மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ என்கிறார் வள்ளுவர்.

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பம் தரும்; அவர்களின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பம் தரும்.

ஆனால், இன்றைய பெற்றோருக்குக் கூடுதல் இன்பத்தைக் கொடுப்பது, குழந்தைகளுக்கு அவர்கள் வைக்கும் அதிவிநோதமான பெயர்கள்தான் என்பதை, பாவம், வள்ளுவர் அறியமாட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism