கிருஷ்ணயஜூர் வேதத்தில், தைத்ரிய சாகையில் பரத்வாஜ முனிவர் வேத அத்யயனம் செய்தது குறித்த தகவல் உண்டு. பரத் வாஜ மஹரிஷி வேத அத்யயனம் செய்ய சங்கல்பம் செய்துகொண்டு
முறைப்படி படிக்க ஆரம்பித்தார். நூறு வருடங்கள் கடந்தன. பரத்வாஜர் இந்திரனிடம் மீண்டும் ஓர் ஆயுளை வரமாகப்
பெற்று வேத அத்யயனத்தைத் தொடர்ந்தார். அந்த ஆயுளும் முடிந்துபோனது. மீண்டும் ஓர் ஆயுள் கிடைத்தது. இப்படி மூன்று ஆயுள் நிறைவுற்று நான்காவது ஆயுளை அவர் கேட்டபோது, ‘‘நான்காவது ஆயுளைக் கொடுத்தால் என்ன செய்வீர்?’’ என்று அவரிடம் கேட்டான் இந்திரன்.

‘‘தொடர்ந்து வேதத்தையே அத்யயனம் செய்வேன்’’ என்றார் பரத்வாஜர். உடனே மூன்று மலைகளை உருவாக்கிய இந்திரன், ‘‘இவை வேதங்கள்; முடிவில்லாதவை’’ என்று கூறுவிட்டு, அந்த மலைகளில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்துவரச் செய்து, ‘‘நீர் செய்த அத்யயனத்தின் அளவு இவ்வளவுதான்’’ என்றான். எனினும் பரத்வாஜர் செய்த வேத அத்யயனத்தைப் பாராட்டி அவருக்கு சூரியலோகம் அளித்ததாக விவரிக்கப் பட்டுள்ளது.
இதிலிருந்து வேத அத்யயனத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். வேதமும், தர்மமும் இந்த உலகுக்கு வேர் போன்றன. ‘வேத: சிவ: சிவோ வேத: வேதாத்யாயி சதாசிவ:’ என்று சொல்லப்
பட்டுள்ளது. வேதம் மங்கலமானது; சிவமே வேதமாகத் திகழ்கிறது என்று பொருள். வேத அத்யயனம் செய்பவர்கள் மங்கலமானவர்களாக விளங்குவார்களாம்.
அதுமட்டுமா? வேத அத்யயனம் செய்ய இயலாதவர்கள் அதை செவிமடுக்க பாவங்கள் எல்லாம் கரைந்துபோகும்; அவர்கள் நெஞ்சில் நல்லன மட்டுமே நிலைத்தோங்கும் என்பார்கள் பெரியோர்கள். இத்தகு அற்புத பலன்களைப் பெற்றுத்தரும் ஓர் அரிய தருணம் சென்னையில் நமக்கு வாய்க்கவுள்ளது.

அனைத்துலகங்களையும் காக்கும் வேதங் களைப் போற்றும் வகையிலும், வேதங்களின் மகத்துவத்தை எல்லோருக்கும் உணர்த் தும் விதத்திலும் சென்னை- அம்பத்தூர் ‘ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ அனுக்ரஹா டிரஸ்ட்’ அமைப்பினர் மாபெரும் வேத ஸம்மேளன வைபவத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

2-ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத் ஸவத்தை முன்னிட்டு இந்த அமைப்பினர் நடத்தும் வேத ஸம்மேளனம் 25.3.15 புதன் கிழமை முதல் 31.3.15 செவ்வாய்க்கிழமை வரையிலும் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
சென்னை, அம்பத்தூரில் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெறும் இந்த வைபவத்தில், வேத ஸப்தாஹம் வேதபாஷ்ய உபன்யாஸம், வேத சாகைகளில் பாராயணம், விசேஷ ஹோமங்கள், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நிகழவுள்ளன.

ஸ்ரீ லட்சுமி நரஸிம்ஹரின் திருவருளுடனும், காஞ்சி ஜகத்குருவின் அனுக்ரஹத்துடனும், காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடனும், ஸ்ரீஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் ஆகியோரின் ஆசியுடனும் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, வேத பாராயணங்களை செவிகுளிரக் கேட்டும், ஹோமங்களில் கலந்துகொண்டும் ஸ்ரீவேதமாதாவின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.