யா நிசா ஸர்வபூதானாம்  

தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸா நிசா பச்யதோ முனே:  (கீதை 269)  

'யிர்கள் அனைத்துக்கும் எது இரவோ, அதில் அடக்கம் பயின்ற யோகி விழித்திருக்கிறான். பிராணிகளெல்லாம் எதில் விழித்திருக்கின்றனவோ, அது தத்துவ ஞானிக்கு இரவு’ என்பது இதன் கருத்து.

மனிதனும் தெய்வமாகலாம்!

அதாவது... நமக்கெல்லாம் இரவாக இருப்பது, தத்துவ ஞானிக்குப் பகலாக இருக்கிறது. நமக்கெல்லாம் பகலாக இருப்பது ஞானிக்கு இரவாக இருக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால்... நல்லதைக் கண்டால் நாம் கண்ணை மூடிக்கொண்டு, அந்தப் பக்கமே போகமாட்டேன் என்கிறோம். அது நமக்கு இரவு. அதே நேரம், தத்துவ ஞானிகளோ நல்லதை உணர்ந்து, அதைக்கடைப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்குப் பகல்.

கெட்டதைக் கண்டால், கண்களை அகல விரித்துக் கொண்டு அந்தப் பக்கமாகப் போகிறோம். பிரகாசமாக எண்ணி ஓடுகிறோம். ஞானிகளோ, கெட்டதைக் கண்டால் மனதையும் கண்களையும் மூடிக்கொண்டு, அந்தப் பக்கம் போகமாட்டோம் என்கிறார்கள்.

மனிதனும் தெய்வமாகலாம்!

நமக்கு வெளிச்சமாக இருப்பது, ஞானிகளுக்கு இருட்டாக இருக்கிறது.

இதையே தத்துவார்த்தமாக, 'பகல் காலம்போல் உபகாரம் நிசியில் உண்டோ?' என்கிறது கைவல்லிய நவநீதம். தெளிந்த ஞானத்தை அடைந்து நல்வழியில் நடப்பது பகல். அதை விட்டு, அறியாமை வசப்பட்டுத் துயரத்தில் ஆழ்வது இரவு.

சரி! அந்தப் பகலையும் இரவையும், அதாவது நல்லதையும் கெட்டதையும் படைத்தது பரம்பொருள்தானே? அப்படி இருக்க, கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டும் கடைப்பிடி என்றால், அது என்ன நியாயம்? இப்படி ஒரு வாதம் எழலாம்.

மனிதனும் தெய்வமாகலாம்!

பல்பொருள் அங்காடியில் (suஜீமீக்ஷீ னீணீக்ஷீளீமீt) எல்லா பொருட்களும் கிடைக்கும். அவற்றில் நமக்குத் தேவையானவற்றை மட்டுமே வாங்கி, உபயோகிப்போம். அதே கடையில் விஷமும் விற்பனைக்குக் கிடைக்கிறதென்று, அதிலும் கொஞ்சம் வாங்கி, உணவில் கலந்து உண்போமா என்ன?

துணி துவைக்க ஒரு சோப், குளியலுக்கு ஒரு சோப், தரை கழுவ ஒரு திரவம் என ஒவ்வொரு பொருளையும் வாங்கி, அந்தந்தச் செயல்களுக்கு மட்டும்தான் உபயோகிக்கிறோம். அதுபோல...

இம்பரில் நஞ்சை நஞ்சால்

இரும்பினை இரும்பால் எய்யும்

அம்பினை அம்பால் பற்றும்

அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர்

வம்பியல் மாயை தன்னை

மாயையால் மாய்ப்பர் பின்னைத்

தம்பமாய் அதுவும் கூடச்

சவம்சுடு தடிபோல் போமே

(தத்துவ விளக்கப்படலம்: 50)

'பாம்பு கடித்தால் விஷம் பாதிக்காமல் இருக்க, மருந்து என்னும் மற்றொரு விஷத்தால் நீக்குவார்கள்; இரும்பை அரம் என்னும் மற்றோர் இரும்பினால் அறுப்பார்கள்; ஏவப்படும் அம்பை மற்றோர் அம்பினால் தடுத்துத் தள்ளுவார்கள்; துணியில் உள்ள அழுக்கை உவர்மண் என்னும் அழுக்கால் நீக்குவார்கள்.

அது போல... அசுத்த மாயையை சுத்த மாயையால் நீக்குவார்கள். பிறகு, அந்த சுத்த மாயையும் நீங்கிப் போய்விடும்’

என்று சொல்லும் இப்பாடல், இறுதியில் ஓர் அபூர்வமான தகவலைச் சொல்கிறது.

அதை, திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் எளிமையாக விளக்குவார்.

 - தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism