ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ன்னை நம்பிச் சரணடைந்த பக்தர்களை பகவான் சத்ய சாயிபாபா சகலநிலைகளிலும் காத்து வழிநடத்துகிறார் என்பதற்கு, பக்தை கமலா சடகோபன் சொல்லும் சம்பவமே நல்லதொரு சாட்சி.

மும்பை, மலாடு பகுதியில் கட்டப்பட இருந்த குடியிருப்புக்காக, 1991-ல் விண்ணப்பித்து முன்பணம் தந்திருக்கிறார் இந்த பக்தை. ஆனால், கட்டடம் எழும்பும் பணி தள்ளிக்கொண்டே போனது. 'கோர்ட்டு, கேஸ்’ என்று வருடக்கணக்கில் தள்ளிப்போனதால், இனி அங்கு கட்டடம் வராது என்று உறுதியாகத் தோன்றியது. எனவே, கொடுத்த முன்பணத்தைத் திருப்பி வாங்கிவிட முடிவு செய்தார் கமலா சடகோபன். ஆனால், சுவாமி பாபா அதைத் தடுத்துவிட்டார். 'பணத்தைத்  திருப்பி வாங்காதே! அங்கு நிச்சயம் கட்டடங்கள் வரும்; 150 வீடுகள் வரும்; நீ இப்போது பணத்தைத் திருப்பி வாங்கினால், அந்த 150 வீடுகளும் வராமல் போய்விடும். காத்திரு!’ என்றார்.

##~##
சுவாமி சொன்ன பிறகு, எப்படி மீற முடியும்? பணத்தைத் திரும்ப வாங்கும் முயற்சியைக் கைவிட்டார் கமலா. அடுத்து, அங்கிருந்த வங்கி மேலாளரைப் போய்ப் பார்த்து சில விவரங்களைக் கேட்கச் சொன்னார், சுவாமி. அதன்படியே கேட்டார் கமலா. இதனிடையில் சுவாமி பாபா, கமலாவுக்குக் கனவுகளைக் கொடுத்தபடியே இருந்தார். ஒரு கனவில்,

ஆஞ்சநேயர் வந்து மண் எடுத்துக் கொடுக்க, ஸ்வாமி பாபா கொத்தனாராக இருந்து வீடு கட்டுகிறார். ஒவ்வொரு நாளும் கமலாவுக்கு இந்தக் கனவு வந்து கொண்டேயிருந்தது.

''என்ன அதிசயம்! 2002-ல் கோர்ட்டு, கேஸ் எல்லாம் முடிந்து, 2004-ல் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன் பிறகு, அங்கு குடியேறினோம். அது உண்மையில் சுவாமி புராஜெக்ட்'' என்று சந்தோஷமாகச் சொல்லிச் சிரிக்கிறார் கமலா. முழுக்க முழுக்க சுவாமியின் அருளால் விளைந்த அற்புதம் அது!

பர்த்தி சர்வீஸுக்குப் போயிருந்தபோது, 'அடையாள அட்டை’ கேட்டார்கள். இந்த பக்தை கொடுத்தபோது, அங்கிருந்த மருத்துவர் ஒருவர், அதிலிருந்த இவருடைய ரத்தப் பிரிவு, இவரின் கணவருடைய ரத்தப் பிரிவு இரண்டையும் (இவருடையது 'பி’ நெகடிவ்; இவர் கணவருடையது 'பி’ பாசிடிவ்) பார்த்துவிட்டுக் கேட்டார்...  'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்கள் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்களா?’ என்று.

''இரண்டு குழந்தைகள்; இரண்டு பேருமே ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகி, குழந்தைகளும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்'' என்றார் கமலா. ''இப்படி மனைவிக்கு 'நெகடிவ்’வும், கணவனுக்கு 'பாசிடிவ்’வுமாக ரத்தப் பிரிவு அமையும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது அபூர்வமானது!'' என்று சொல்லி வியந்தார் அந்த மருத்துவர். '65 வருடங்களாக உன்னைக் காப்பாற்றிக்கொண்டுதானே இருக்கிறேன்’ என்று பாபா முன்பொருமுறை தன்னிடம் சொன்னதை நினைத்து நெகிழ்ந்தார் பக்தை!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

இன்னொரு சம்பவத்தில், சுவாமி காத்து நின்றதை நினைவுகூர்கிறார் கமலா.

இவர் மகளுக்குப் பிரசவம் நிகழும் என்று டாக்டர் குறித்துச் சொன்ன நாளுக்கு மேல் பத்து நாட்களாகிவிட்டன. பிரசவ வலிக்கான அறிகுறியே இல்லை. டாக்டர் சொன்னபடி, மகளை மருத்துவமனையில் 'அட்மிட்’ செய்துவிட்டு, சுவாமியிடம் 'நார்மல் டெலிவரி’ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி இருந்தார். செயற்கை முறையில் பனிக்குடம் சிதைத்து, வலி எடுக்க ஊசி போட்டார் டாக்டர். வலி தொடங்கி, போகப் போகக் கடுமையானது. தீவிரமான வலியின் வேதனையை மகளால் தாங்கமுடியவில்லை. பிரசவம் நிகழ்வதற்கான பாதை சரியாகவில்லை. காலையில் இருந்து வலி தாங்கமுடியாமல் அழுது அரற்றிக்கொண்டிருந்த மகளுக்கு விரைவில் பிரசவம் நடக்க, கமலா ஹோமியோபதி மருந்தான 'காலிபாஸ்’ கொடுத்துப் பார்த்தார். ம்ஹூம்... ஒன்றும் நடக்கவில்லை.

மாலை 4.30 மணி வரை பார்த்திருந்த டாக்டர், ''எப்படியும் பிரசவமாக இரவு மணி ஒன்பது ஆகிவிடும். எதற்கும் இன்னும் ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அவசரமாக இன்னொரு 'கேஸ்’ பார்க்கப் போகவேண்டும்'' என்றார். அதைக் கேட்ட மகள் 'ஓ’வென்று அழுதாள். ''அதுவரை நான் உயிருடன் இருக்க மாட்டேன். இந்த வலி என்னைக் கொல்கிறதே!'' என்று புலம்பினாள். கமலா மனமுருகி பாபாவைப் பிரார்த்தித்தாள். ''சுவாமி! உங்களால் மட்டுமே நிலைமையைச் சீராக்க முடியும்'' என்று சொல்லி, தன் கையில் இருந்த 'காலிபாஸ்’ மருந்தை, 'இப்போது இது சாயி மருந்து, சாயி மருந்து’ என்று சொல்லியபடியே மகள் வாயில் புகட்டினார்.

அவ்வளவுதான்... பிரசவத்திற்கான உச்சகட்ட வலி தொடங்கிவிட்டது. நர்ஸ், டாக்டரை அழைக்க ஓடினாள். வேறு அறையை ஏற்பாடு செய்யாமல் இருந்ததால், 'எமர்ஜென்ஸி’ அறையிலேயே பிரசவம் நிகழ்ந்துவிட்டது. அனைவரும் மகிழ, அதன் பங்குக்கு வீறிட்டு அழுதபடி குழந்தை பிறந்தது. அரை மணி நேரம் முன்பு வரை, எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துவிட்டு, திடீரென்று பிரசவம் நிகழ்ந்ததை, இன்னொரு டாக்டரிடம் இந்த டாக்டர் சொல்லி வியக்க, மயக்கத்திலிருந்து மீண்டிருந்த மகள், தன் அம்மா தந்த மருந்தைப் பற்றிச் சொன்னாள். ஆச்சரியப்பட்ட டாக்டர், அதே மருந்துவமனையில் பிரசவம் தள்ளிப்போனபடி இருந்த இன்னொரு பெண்ணுக்கு அந்த மருந்தைத் தரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. வேறொன்றுமில்லை... 'இது சாயி மருந்து, சாயி மருந்து’ என்று சொல்லி மகளுக்குத் தந்ததால்தான், அது அருமருந்தாகி அதிசயம் புரிந்திருக்கிறது!

ஒவ்வொரு வீட்டிலும் ஊரிலும் நாட்டிலும் உலகிலும் சுவாமி புரியும் அதிசயங்களை யாரால் அறிந்து உணர முடியும்?! அன்போடு ஒவ்வொரு பக்தருக்குள்ளும் சுவாமி புரியும் மனமாற்றமே உண்மையில் அதிசயமாகும்! சாயி, இந்த பக்தைக்குள்ளிருந்து சொன்ன கவிதையைக் கொண்டே சாயியை உணர்வோம் இப்படி...

''அன்பெனும் கயிற்றாலே
ஆண் பெண் அனைவரையும்
ஒருசேரக் கட்டிவிட்டாய்
மாபெரும் மாயாவி நீ!''

- அற்புதங்கள் தொடரும்

தோல்வியில் இருந்து வெற்றி!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

டந்த முப்பது வருடங்களாக, எங்களுக்குக் கண்கண்ட தெய்வம், ஸ்ரீசாயி பகவான்தான். சென்ற வருடம், என் தந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து, அவரை மருத்துவ மனையில் சேர்த்திருந்தோம். பி.டெக். படித்துக் கொண்டிருந்த என் மகன்தான் அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டான். இத்தனைக்கும் அவனுக்கு அது இறுதியாண்டுப் படிப்பு வேறு!

இந்த நிலையில், 'இங்கு சிகிச்சை அளிப்பது கடினம். மதுரைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மருத்துவர்கள் தெரிவிக்கவே, தந்தையை ஆழ்வார்திருநகரியில் இருந்து மதுரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று, சேர்த்தோம். சாயி பகவான்மீது கொண்ட நம்பிக்கையைத் தவிர, வேறு எந்த நினைப்பும் இல்லை எங்களுக்கு.

நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு, என் தந்தையின் உடல்நிலையில் மெள்ள மெள்ள முன்னேற்றம் குடிகொண்டது. அதையடுத்து வந்த மூன்று நாட்களில், என் மகனுக்குத் தேர்வு. அந்தத் தேர்வு முடிவுகள் சில மாதங்களில் வந்தன. அதில் அவன் தேர்ச்சி பெறவில்லை. 'சுவாமி, நான் பி.எஸ்ஸி-யில் தேர்ச்சி பெறாமல் போய்விட்டேன். இப்போது என்னுடைய மகன் பி.டெக்-கில் தேர்வு பெறாமல் போய்விட்டான். இதென்ன சோதனை?! மருத்துவ மனையில் தாத்தாவுக்கு உதவியாக இருந்தான் என்பது தவிர, அவன் செய்த தவறு என்ன?’ என்று பகவான் சாயிபாபாவிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.

அதையடுத்து மகனுக்குள் ஒரு யோசனை... 'நன்றாகப் படித்து, நன்றாகத்தானே எழுதினோம்! மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் என்ன?’ என்று. அப்படியே விண்ணப்பித்தான். என்ன ஆச்சரியம்... எல்லாப் பாடங்களிலுமே அவன் தேர்ச்சி பெற்றிருப்பதாகச் சான்றிதழ் வந்தது.

அதுமட்டுமல்ல... முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான் அவன். பகவான் ஸ்ரீசத்திய சாயி பாபாவின் கருணையை நினைத்துச் சிலிர்த்த தருணம் அது.

- வி.குஞ்சரம், ஆழ்வார்திருநகரி