Published:Updated:

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

நாரதர் உலா !

ல்லிகை மணம் கமகமக்க, அலுவலக அறையின் மத்தியில் பிரசன்னமானார் நாரதர் பெருமான். 

''என்ன நாரதரே, பெண்களுக்குத்தான் மல்லிகை என்றால் பிடிக்கும். உமக்குமா?''

''நாராயண, நாராயண... மதுரை மல்லி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?'' என்று எதிர்க் கேள்வி கேட்டார் நாரதர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சரி சரி, நீங்கள் மதுரைக்குப் போய் வந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஏதேனும் விசேஷம் இருக்குமே?''

''இல்லாமலா? ஒவ்வொன்றாகச் சொல் கிறேன், கேளும்!'' என்ற நாரதர் தொடர்ந்தார்...

''மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே வரும் பக்தர்கள் படும் அவஸ்தை பற்றி, இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் மாநில பொதுச் செயலாளர்  சுந்தரவடிவேல் புலம்பித் தள்ளிவிட்டார்.

'குளித்துவிட்டு ஆசாரமாக வரும் பக்தர்களை, காவல் துறையினர் தொட்டுத் தொட்டுச் சோதனை

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

செய்வது பக்தர்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. லக்கேஜ்களை சோதனை செய்வதுபோல் பக்தர்களையும் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யலாமே?

அதேபோல், விளக்கேற்ற வரும் பெண்கள் கோயில் உள்ளே தீப்பெட்டி எடுத்து வர அனுமதி இல்லை. கோயிலின் உள்ளே ஏற்கெனவே ஏற்றப்பட்டு இருக்கும் விளக்கிலேயே புது தீபம் ஏற்றும்படி சொல்கிறார்கள். இதனால், பெண் பக்தர்கள் சென்டிமென்ட்டாக வருத்தப்படுகிறார்கள்’ என்றார் அவர்.''

''மீனாட்சி அம்மன் கோயில் தீவிரவாதிகளின் இலக்காக இருப்பதால், இந்தக் கெடுபிடிகள் அவசியம்தானே?'' என்றோம் நாம்.

''வாஸ்தவம்தான்! உலகத்தின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும், மதுரை கோயிலில் அடுத்த சில நிமிடங்களில் கெடுபிடி

அதிகமாகிவிடுகிறது. கைக் குழந்தைகளுக்காக வீட்டில் இருந்து எடுத்து வரும் டிபன்பாக்ஸைக்கூட உள்ளே அனுமதிப்பதில்லை. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூத்தைச் சொல்லவா? ஒரு நாள், மதிய வேளையில் கோயிலுக்

குள் சென்ற ஒரு குப்பை லாரியில் தொற்றிக் கொண்டு உள்ளே சென்ற ஓர் ஆசாமி, கோயிலில் இருந்த உற்ஸவ மூர்த்தியின் மாலையை எடுத்துத் தான் அணிந்துகொண்டு ஆட்டம் போட்டிருக்

கிறார். கொஞ்சம் பொறுத்தே தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர், அந்த ஆசாமி மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லி விரட்டி விட்டார்களாம். எத்தனை ஸ்கேனர், ரகசிய கேமராக்கள், போலீஸ் கண்காணிப்பு டவர் இருந்து என்ன? கோயிலைச் சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் எப்படிக் கோட்டை விட்டார்கள் என்பது இன்னமும் புரியாத புதிர்தான்!' என்ற நாரதர், 'பாதுகாப்பு தொடர்பாக, இதைவிட ஒரு முக்கியமான விஷயத்தில் அரசு துறையினர் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார்கள்!'

''அப்படி என்ன முக்கியமான விஷயம்?'' என்றோம் பரபரப்பாக.

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

''மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 1 கி.மீ. சுற்றள வில் உள்ள தனியார் கட்டடங்கள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், ஏராளமான கட்டடங்கள் இந்த விதியைப் பின்பற்றவில்லை என்பது அந்தக் கட்டடங்களின் உயரத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. இது தொடர்பாக சட்டப் போராட்டமே நடத்தி வருகிறாராம் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வக்கீலுமான முத்துக்குமார். அந்தக் கட்டடங்களின் மாடிகளில் இருந்து பார்த்தால் கோயிலின் கோபுரங்கள் எல்லாம் மிக அருகிலேயே தெரிகின்றன. வெளியூர் பக்தர்கள் பலர் அந்த மாடிகளில் ஏறி, கோபுர தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் போர்வை

யில் தீவிரவாதிகள் வந்து கோபுரத்தைக் குறி வைத்தால்..?''

''நினைக்கவே நடுக்கமாக இருக்கிறதே, சுவாமி! கோயிலுக்குள் செல்பவர்களுக்கு இருக்கிற கெடுபிடிகள் அந்தக் கட்டட உரிமையாளர்களுக்கு இல்லையா?''

''இல்லை என்பதுதான் நான் கண்கூடாகக் கண்ட உண்மை. பக்தர்களுக்குக் காவல் துறையின் கெடுபிடி போதாதென்று, கோயிலில் உள்ள கான்ட்ராக்ட் பணியாளர்கள் தரும் சிரமங்களும் அநேகம்! நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய முடியாதபடி, அடித் தொண்டையில் சத்தமாக அதட்டி, விரட்டுகிறார்களாம். சில நொடிகள்கூட ஸ்வாமி சந்நிதானத்தில் நின்று தரிசனம் செய்ய முடியாதபடி இழுத்துத் தள்ளுகிறார்களாம். தெய்வ நம்பிக்கையுடன் சேவை செய்யத் தன்னார்வத் தொண்டர்கள் எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, கான்ட்ராக்ட் பணியாளர்களை கோயில் நிர்வாகம் நியமிப்பதால் வரும் சிக்கல் இது!'

'உயர் அதிகாரிகளோ, மந்திரியோ சர்ப்ரைஸ் விசிட் அடித்து பக்தர்களிடம் கேட்டாலே, இதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?'

''ஆமாம்! இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணனும் இதைத்தான் சொன்னார்!' என்றார் நாரதர்.

''சித்திரைத் திருவிழா ஆரம்பமாகிவிட்டதே...? லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்களே! குடிநீர், குளியலறை, கழிப்பறை போன்ற

ஏற்பாடுகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன?''

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

''கோயிலுக்கு வெளியில் மதில் சுவரை ஒட்டி, மாநகராட்சி சார்பில் ஒரு குடிநீர்த் தொட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்மேல் ரொம்ப அக்கறையாக, 'குடிநீரை வீணாக்காதீர்கள்’ என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், குழாயைத் திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது. இதே நிலைதான் குளியலறை, கழிவறை போன்ற மற்ற விஷயங்களிலும்! மீனாட்சி அம்மனின் தாயார் காஞ்சனமாலையின் கோயி லுக்குப் போகும் வழியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இலவச காலணி பாதுகாப்பு நிலையங்களின் வாசலை அடைத்தபடி, இருபுறமும் கடைகள். தட்டுத்தடுமாறித்தான் பக்தர்கள் உள்ளே போக முடிகிறது. அதேபோல, கிழக்குச் சித்திரை வீதியில் உள்ள கருப்பசாமி மற்றும் மதுரைவீரன் சாமி கோயிலின் வாசலின் இருபுறமும் கடைக்காரர்கள் பொருட்களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதையின் மேலாக நிழற்கூரையும் அமைக்கப்படாததால், வெயில் நேரத்தில் பக்தர்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ்கூட இல்லை! வெளியூர்களிலிருந்து மட்டுமின்றி கண்காணாத தேசங்கள், வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் வரும் பக்தர்கள் மனநிம்மதியோடு செல்ல முடியாது என்றே தோன்றுகிறது.'

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

'ஒருவேளை, திருவிழா நெருக்கத்தில் ஏதேனும் தற்காலிக ஏற்பாடுகள் செய்வார்களோ?' என்று நாம் கேட்க, ''எல்லாம் அந்த சொக்கநாதருக்கே வெளிச்சம்'' என்று பெருமூச்சு விட்ட நாரதரை ஆசுவாசப் படுத்தியபடி, 'அதிருக்கட்டும்! பழநியில் நடக்கும் வியர்வை மோசடி பற்றி ஏதோ சொல்ல வந்தீரே,

அதை முழுசாகச் சொல்லி முடியும்!' என்று கேட்டோம்.

''ஆமாம்! சுவாமியின் விக்கிரகத்தில் இருந்து வடியும் வியர்வை நீர் என்று சொல்லி, மஞ்சள் நிற நீரை சின்ன பாட்டிலில் அடைத்து, ஒரு சின்ன பாட்டில் 1000 ரூபாய் வரை விற்கிறார்கள்! இது பற்றி, பழநி ஸ்ரீ தண்டாயுத பாணி ஸ்வாமி தேவஸ்தான அர்ச்சக ஸ்தானீக சங்கத்தின் தலைவர் சிவஷண்முக குருக்களிடம் கேட்டேன்.

'விக்கிரகத்துக்குத் தேய்மானம் ஏற்படக்கூடாது என்பதற்காக 1975ம் வருடத்திலிருந்து தங்கக் கவசம் அணிவிப்பதை நிறுத்திவிட்டோம். 1984ம் வருடத்திலிருந்து உபயதாரர்களின் அபிஷேகங் களையும் நிறுத்திவிட்டோம். தற்போது ஆறு கால பூஜைகள் மட்டுமே நடக்கின்றன. அதில் சுத்தமான பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம். முருகன் விக்கிரகத்துக்கு அர்த்தஜாம பூஜையின் போது சுத்தமான நீரைக் கொண்டு ராக்கால அபிஷேகம் செய்வோம். அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து, துணி கட்டி, பாதுகாப்பாக வைப்போம். அதற்கு 'கௌபீன தீர்த்தம்’ என்று பெயர். அடுத்த நாள் காலை 6 மணிக்கு பூஜை முடிந்ததும், விக்கிரகத்தைப் பருத்தித் துணியால் துடைத்து, அதை அந்தத் தண்ணீரில் நனைத்து, சில துளிகள் வீதம் பக்தர்களுக்குத் தருவோம். அதேபோல, இரவு பூஜையின்போது, 25 கிராம் சந்தனத்தை விக்கிரகத்தின் சிரசிலும், மார்பிலும் சாத்துவோம். அதையும் காலையில் எடுத்து பக்தர்களுக்கு ஒரு மிளகு அளவு தருவோம். மற்றபடி, சுவாமி யின் வியர்வை என்று சொல்லி விற்பதெல்லாம் பித்தலாட்டம்!’ என்றார் அவர். பக்தர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்!' என்ற நாரதர்,

`சொக்கனுக்கே வெளிச்சம் !'

''சரி, நான் மறுபடியும் ஒரு நடை மதுரை போய்ப் பார்த்து, அங்குள்ள நிலைமையை உங் களுக்கு வாட்ஸ்அப்பில் அப்டேட் செய்கிறேன்!' என்றவர், நம்முடைய பதிலை எதிர்பாராமல், விருட்டென மாயமானார்.

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்