Published:Updated:

திருப்போரூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்! கூடுதல் வசதி செய்துத் தர பக்தர்கள் கோரிக்கை

திருப்போரூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்! கூடுதல் வசதி செய்துத் தர பக்தர்கள் கோரிக்கை
திருப்போரூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்! கூடுதல் வசதி செய்துத் தர பக்தர்கள் கோரிக்கை

திருப்போரூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்! கூடுதல் வசதி செய்துத் தர பக்தர்கள் கோரிக்கை

முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கந்தசஷ்டி கொண்டாடுவது வழக்கம். கடலில் திருச்செந்தூரிலும், நிலத்தில் திருப்பரங்குன்றத்திலும், விண்ணில் திருப்போரூரிலும் என மூன்று இடத்தில் முருகன் போர் புரிந்ததாக ஆன்மிக வரலாறு உண்டு. தாரகாசூரனை விண்ணில் வதம் செய்த இடம் திருப்போரூர் என்பதால், இங்கும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். திருச்செந்தூரில் சூரபொம்மைகள் வீதியுலா வருவதில்லை. ஆனால், திருப்போரூரில் ஆறு நாள்களும் ஆறு விதமான பொம்மைகள் வீதியுலா வரும். முதல் ஐந்து சூரர்களை வீரபாகுவும், ஆறாவது சூரனான தாரகாசூரனை முருகனும் வதம் செய்வார்கள். அந்த 6 நாள்களும் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அதிகாலை முதலே பக்தர்கள் குளத்தில் மூழ்கி, விரதமிருந்து கந்தசாமியை வழிபடுவார்கள். சூரவதாரத்துக்காக கடந்த வருடம் திருப்போரூர் தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாவுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

கந்தசஷ்டி விழா குறித்து திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவரிடம் பேசினோம்… “திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால் சரியான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்வது கிடையாது. நேற்று முழுவதும் திருப்போரூர் பகுதியில் மின்சாரம் இல்லை. ஆனால் கோவில் தரப்பில் ஒரு ஜெனரேட்டர் வசதிகூட செய்து கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் சூரபொம்மைகளை பைபரில் செய்துள்ளார்கள். அதிக எடை இருப்பதால் அதை தூக்குவதில் சிரமம் உள்ளது. அவை கீழே விழும்போது, உடைந்துவிடுகிறது. போதிய அளவு குடிநீர் வசதி செய்துகொடுக்கவில்லை. இரவில் பக்தர்கள் தங்குவதற்காக கோடிக்கணக்கில் கட்டப்பட்ட கட்டடங்கள் பலவருடங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இரவு 8.30 மணிக்கே கோயிலை மூடிவிடுகிறார்கள். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிவிடுகிறார்கள். தரிசன நேரத்தை இரவு 9 மணிவரை நீட்டிக்க வேண்டும்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு