Published:Updated:

163 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம்

இளந்தமிழருவி

'இன்றைக்கு  மங்கல திருநாளாம் அட்சய திரிதியை என்பது  கூடுதல் விசேஷம். இன்று செய்யும் நற் காரியங்களுக்கான பலன்கள் பன்மடங்கு பெருகும் என்பார்கள். 

இதோ, இந்த விளக்கு பூஜையில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வீடுகளிலும் சுபிட்சம் பல்கிப் பெரு கும். இன்று மட்டுமல்ல, அனுதினமும் நீங்கள் விளக்கேற்றி வழிபட் டால், வாழ்நாள் முழுக்க அட்சய திரிதியைதான்!'' என சிறப்பு விருந்தினர் டாக்டர். ராமு பேசப் பேச, மொத்த வாசகியர்களும் ஆர்வமும் பூரிப்புமாக அதை உள் வாங்கிக் கொண்டு பூஜைக்குத் தயாரானார்கள்.

163 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 21.4.15 செவ்வாய்க்கிழமை அன்று வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற்றது. இது சக்தி விகடனின் 163வது திருவிளக்கு பூஜையாகும். ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி சந்நிதி முன்பு தீபலட்சுமி அலங்கரித்து வைக்கப்பட்டிருக்க, டாக்டர் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் வெகு அற்புதமாக நடந்துமுடிந்தது திருவிளக்கு

163 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம்

பூஜை.பிரதான திருவிளக்கை ஏற்றும் தருணத்தில், கோயில் பசு ஒன்று அழகிய பெண் கன்று ஈன்றது

என்ற தகவலை ஸ்வாமிகள் சிலிர்ப்புடன் பகிர்ந்து கொள்ள, அதை ஒரு சுப சகுனமாகக் கருதி வாசகியர் பூரித்துபோனார்கள். பூஜையில் ஓதுவாரால் தேவாரம் பாடப்பட்டதும் கூடுதல் சிறப்பு. பூஜையில் கலந்துகொண்ட வாசகி ஒருவர், 'இந்த பூஜையில் கிடைத்த நிம்மதியும் சந்தோஷமும் காலத்துக்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்'' என்றார் நெகிழ்வாக.

நமது விருப்பமும் வேண்டுதலும்கூட அதுதானே? அம்பாளின் அருளால் எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்!

படங்கள்: ச.வெங்கடேசன்