சிறப்பு கட்டுரை
Published:Updated:

அமாவாசைக் கோயில் !

நோய் தீர்க்கும் பரிகாரம்! கு.ஆனந்தராஜ்

'அமாவாசைக் கோயில்’ என்று அழைக்கப்படும் சித்தேஸ்வரன் கோயில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சமலையில் அமைந்திருக்கிறது. 

கஞ்சம் என்றால் தாமரை என்று பொருள். வானில் இருந்து பார்த்தால் இந்தக் கோயில் தாமரை வடிவில் தெரிவதால், கஞ்சமலை என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அமாவாசைக் கோயில் !

இந்த ஆலயத்தின் அருகில் ஓடும் வற்றாத பொன்னி நதியானது பல நோய்களையும் தீர்க்கும் தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இதனால்  சித்தேஸ்வரருக்கு, பொன்னி நதியின் அருகில் இருக்கும் காந்ததீர்த்தக் குளத்தின் நீரைக் கொண்டுதான் தினமும் அபிஷேகம் நடைபெறுகின்றது. இந்தக் கோயிலில் பிரத்தியேகமாக திருவிழாக்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆனால், ஒவ்வொரு

அமாவாசைக் கோயில் !

அமாவாசை அன்றும் கோயிலில் திருவிழாக் கூட்டம்தான். அன்றுதான் அனைத்துவிதமான நோய்களையும் போக்கும் பரிகாரம் செய்யவேண்டும் என்பது நியதி. அதன் காரணமாகவே இந்தக் கோயிலுக்கு அமாவாசை கோயில் என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மூலிகை சக்திகள் நிறைந்த காந்த தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்கு அருகில் உள்ள பரிகாரக் கிணற்றில் உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு வழிபடுகிறார்கள். இப்படி மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்ய, அனைத்து நோய்களும் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தவிர பவுர்ணமி நாட்களில், இந்த கோயில் அமைந்துள்ள மூலிகைகள் நிறைந்த  மலையில் கிரிவலம் சென்றா லும் நிறைவான பலன்

அமாவாசைக் கோயில் !

கிடைக்கும்.

படங்கள்: அ.நவின்ராஜ்

பரிகாரம் செய்வது எப்படி..?

அமாவாசை நாளில் காலையிலேயே கோயிலுக்கு வந்து, காந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, உப்பு, மிளகு ஆகியவற்றை பரிகாரக் கிணற்றில் கரைத்து, சித்தேஸ்வரரை வழிபட்டு வரவேண்டும். தொடர்ந்து மூன்று அமாவாசைகள் இப்படிச் செய்தால் அனைத்து விதமான நோய்களும், குறிப்பாக தோல் சம்பந்தமான நோய்களும் நீங்குகின்றன.