சிறப்பு கட்டுரை
Published:Updated:

நிறைவும் மகிழ்வும் நிலைத்திருக்கும் !

164 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம் இளந்தமிழருவி

'வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்தான். ஆனால், அந்த வழிபாடும் பிரார்த்தனையும் உங்கள் குடும்பத்துக்கானதாக மட்டுமே அமைந்திருக்கும். இதோ, இறை சாந்நித்தியம் மிகுந்த இந்தத் திருக்கோயிலில் நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி செய்யும் இந்தத் திருவிளக்கு பூஜை, கூட்டுப் பிரார்த்தனையாகும்.  இங்கு, உங்கள் பிரார்த்தனை உலகுக்கான பிரார்த்தனையாக அமையும். சுயநலம் அகன்று, பொதுநலமே மேலோங்கும். 

தனித்தனியே பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும், இப்படிக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டால், அது பெரும் அதிர் வலைகளை உண்டாக்கி, வேண்டுதல்கள் எளிதில் பலிப்பதற்கான சாத்தியத்தைப் பெற்றுத் தரும். அந்த வகையில் நீங்கள் எல்லோரும் பாக்கியசாலிகளே! உங்கள் குடும்பத்தில் இனி மகிழ்ச்சியே மேலோங்கும்!'' என சிறப்பு விருந்தினர் பார்த்தசாரதி பேச... வாசகிகள் அனைவரும் நெகிழ்ந்தார்கள்.

சக்தி விகடனும் தீபம் விளக்கேற் றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயிலில், கடந்த 5.5.15 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 164வது பூஜை இது.

நிறைவும் மகிழ்வும் நிலைத்திருக்கும் !

'நான் நினைச்சதெல்லாம் இதுவரைக்கும் நடந்துட்டு இருக்கு. இப்ப, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதற்கு முழுக்க முழுக்கச் சக்தி விகடன்தான் காரணம். எப்படின்னு கேட்கிறீங்களா? சக்தி விகடன் இதுவரை நடத்திய விளக்கு பூஜைகளில், நான் கலந்துகொள்ளும் 18வது பூஜை இது. ஒவ்வொரு முறையும் நான் வைத்த வேண்டுதல்கள் எல்லாம் பூரணமா நிறைவேறிடுச்சு. சக்தி விகடனுக்கு என் ஆயுசு முழுக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்'' என்று திண்டிவனம் வாசகி நவநீதம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து

நிறைவும் மகிழ்வும் நிலைத்திருக்கும் !

கொண்டார்.

'பூஜைகள் வழிபாடுகள் சம்பந்தமான சக்தி விகடனின் பணிகள் ஆத்மார்த்தமானவை. நான் சக்தி விகடனின் வாசகி மட்டுமல்ல; ஒரு பக்தை என்றே கூறலாம்'' என்றார் வாசகி சந்திரா.

பூஜையின் நிறைவில் வாசகர்கள் அனைவருக் கும் இனிக்க இனிக்கப் பொங்கலும், மணக்க மணக்க சாம்பார் சாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

''வயிறும் மனசும் நிறைஞ்சு போச்சு'' என்று மனதாரப் பாராட்டி விடைபெற்றார்கள் வாசகர்கள்.

இந்த நிறைவும் மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைத்திருக்க, அங்காள பரமேஸ்வரி அருள்புரிவாள்.

   படங்கள்: தே.சிலம்பரசன்