ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிக அற்புதமான முருக க்ஷேத்திரம் சென்னிமலை. முருகப் பெருமானுக்கு மிக உகந்த ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம் இது. சோழ மன்னன் ஒருவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, முருகப்பெருமான் அர்ச்சகராக வந்திருந்து, தம்மைத் தாமே பூஜித்து அருளிய பெருமைக்கும் உரியது இந்தத் தலம். சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இங்குள்ள கோயில், சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கொடுமணல். முன்பொரு காலத்தில் இங்கு வாழ்ந்த செல்வந்தர் ஒருவரிடம் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று சரியாகப் பால் கரக்கவில்லை. என்ன ஏதுவென்று கண்காணிக்கத் துவங்கிய செல்வந்தர், ஒருநாள் ஓர் அதிசயத்தைக் கண்டார். குறிப்பிட்ட ஓரிடத்துக்குச் சென்ற பசு, தானாகப் பால் சொரிய ஆரம்பித்தது. செல்வந்தர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, அழகே உருவான முருக விக்கிரஹம் ஒன்று கிடைத்தது. அந்த விக்கிரகம் இடுப்புக்கு மேலே நேர்த்தியாகவும், கீழ்ப் பகுதி பூர்த்தியாகாமலும் இருந்ததைக் கண்ட செல்வந்தர், அதைச் சீர்செய்ய முயன்றபோது, விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீறிட ஆரம்பித்தது. எனவே, முயற்சியைக் கைவிட்டுவிட்டு, ஸ்வாமியின் விக்கிரஹத்தை அப்படியே எடுத்துச் சென்று, அருகிலுள்ள சென்னிமலையில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலவரலாறு.

கோயிலில் முருகப்பெருமான் தண்டாயுத பாணியாக அருள்பாலிக்க, வள்ளிதெய்வானை இருவரும் அவரைத் திருமணம் செய்யவேண்டி, அமிர்தவல்லி சுந்தரவல்லியாக தவக்கோலத்தில் மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

பிண்ணாக்குச் சித்தர் இந்த மலையில் வாழ்ந்து முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. உச்சியில், பிண்ணாக்குச் சித்தர் வசித்த குகை ஒன்றும் உள்ளது. இந்தக் குகையின் வழியாக பிண்ணாக்கு சித்தர், பழநி மலைக்குச் சென்று வழிபட்டு வந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், மாமாங்க தீர்த்தம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கடுமையான கோடையில் நீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் தருணத்திலும், இதில் நீர் சுரந்து வழிந்தோடுவது அதிசயமே! அப்படி, கடந்த 2012ம் ஆண்டு இத்தீர்த்தம் வழிந்தோடியது என்கிறார்கள்.

கோயிலின் தினசரி பூஜைக்கான திருமஞ்சனப் பொருள்கள் பொதிகாளைகள் மூலம் எடுத்துவரப் படுகின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து சென்னிமலை ஆண்டவரை வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டுவதில் உள்ள தடைகள் நீங்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்துக்குச் செல்ல விரும்பும் அன்பர்கள் ஈரோடு, பெருந்துறை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களுக்குச் சென்றால், அங்கிருந்து சென்னிமலைக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. தினமும் காலை 6 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.