Published:Updated:

அகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் !

ஆலயம் தேடுவோம்ரெ.சு.வெங்கடேஷ்

அகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் !

ஆலயம் தேடுவோம்ரெ.சு.வெங்கடேஷ்

Published:Updated:

ரங்களை வழங்குவதில் சிவபெருமானுக்கு நிகர் அவர்தான். தன்னைச் சரணடைந்து வேண்டுபவர்களுக்கு, அவர்கள் இன்னார் இனியர் என்று பாராமல், அவர்கள் வேண்டும் வரங்களை அப்படியே அருள்பவர் சிவபெருமான். பஸ்மாசுரனுக்கு வரம் தந்ததும்கூட அப்படித்தான். அந்த வகையில், இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கெல்லாம் வரங்களை வாரி வழங்கவேண்டும் என்பதற்காகவே, அவர் கோயில் கொண்ட திருத்தலங்களில் ஒன்றுதான், திருச்சி மாவட்டம் ஆளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் திருக்கோயில். வரங்களை வாரி வழங்குவதாலேயே இத்தலத்து இறைவனுக்கு வரகுணேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதோ?!    

அளுந்தூரில் அருட்கோலம் கொண்டு, பக்தர்களுக்கு வரங்களைத் தப்பாமல் அருளும் வரகுணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? வறண்டு கிடக்கும் வயல்களுக்கு நடுவில், எப்போது  விதத்தில் மிகப் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை வரகுணபாண்டியன் கட்டியதால், இந்த இறைவனுக்கு வரகுணேஸ் வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அரசு பதிவேடுகளில் இறைவனின் திருப்பெயர் காசி விஸ்வநாதர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ காசி விசாலாட்சி!

அகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்குப் பார்த்தும் அருட்கோலம் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில், தென்மேற்கு திசையில் விநாயகரும், மகா மண்டபத்தின் உள்ளே முருகனும், பைரவரும் காட்சி தருகின்றனர். கோயிலின் பின்புறத்தில் அருள்பாலிக்கிறார் சண்டிகேஸ்வரர்.

கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இருந்தும், சில கட்டட வேலைப்பாடுகளில் இருந்தும், இந்தக் கோயிலுக்குப் பாண்டியர்களும், சோழர்களும், பல்லவர்களும் திருப்பணிகள் செய்திருப்பதாகத் தெரியவருகிறது எனத் தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். குலோத்துங்க சோழன் பெயர் ஒரு கல்வெட்டிலும், குலசேகர பாண்டியனின் பெயர் மற்றொன்றிலும் காணப்படுகிறது. ஆனால் எந்த குலோத்துங்கன், எந்த குலேசேகரப் பாண்டியன் என்ற தகவல்கள் தெளிவாகக் காணப்படவில்லை.

இப்படி ஒரு பிரசித்தி பெற்ற கோயில் இருந்தது என்பதற்கான சுவடே தெரியாத அவல நிலையில் இன்றைக்குக் காட்சி தரும் இந்தக் கோயிலின் இருப்பைச் சொல்லுவதே ஒரு சிறிய கோபுரம் தான். தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலின் அவலநிலை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே நீடிப்பது?

அகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் !

இத்தலத்துக்கு வந்து, வரங்களை அருள் வதையே தன்னுடைய குணமாகக் கொண்ட ஐயன் வரகுணேஸ்வரரை வேண்டி வணங்கிச் சென்றால், திருமண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனாலும், பக்தர்கள் உள்ளே செல்லவே பயப்படும் நிலையில்தான் தற்போது இந்தக் கோயில் உள்ளது. கோயில் கூரைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.  கோயில் கட்டடத்தின் உப பீடம் 3.5 அடி அளவுக்கு பூமிக்குள் புதைந்து கிடக்கிறது.

பக்தர்களுக்கும் ஊர்மக்களுக்கும் ஆறுதல் தரும் விதமாக, தற்போது இந்தக் கோயிலைப் புதுப்பிக்கவேண்டி, அளுந்தூரைச் சேர்ந்த சில அன்பர்கள் 'வர குணேஸ்வரர் பக்த ஜன அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருப்பணிகளைத் தொடங்கியுள்ளனர். நித்தியப்படி பூஜைகளே இல்லாத இந்தக் கோயிலில் இப்போதுதான் சில காலமாக நித்திய பூஜைகளுடன் பிரதோஷம், பௌர்ணமி, திருவாதிரை, அன்னாபிஷேகம் போன்ற வைபவங்களும் நடைபெற்று வருகின்றன.

கிராமப்புறங்களில் இருக்கும் இத்தகைய கோயில்கள் இப்படி கவனிப்பார் இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?

இதுபற்றி 'ஸ்ரீ வரகுணேஸ்வரர் பக்த ஜன அறக்கட்டளை’யைச் சேர்ந்த நந்த கோபாலனிடம் பேசியபோது, 'இந்தக் கோயில் பல வருஷங் களாவே சிதைஞ்சு போய்த்தான் இருக்குது. ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கோயிலைச் சீரமைக்கிற அளவுக்கு, எங்க ஊர் செழிப்பா இல்லை.  ரொம்பக் காலமா சரியான மழை இல்லை கடும் வறட்சி. அதனால பலர் கட்டட வேலைக்காக வெளியூர் போயிட்டாங்க. மீதி இருக்கிறவங்களும் கூடிய சீக்கிரமே வேற ஊருக்குப் போற ஐடியால இருக்காங்க இந்த நிலைமையில, எங்க ஊர்மக்கள்கிட்ட இருந்து கோயில் திருப்பணிக்குப் பெருசா உதவி எதிர்பார்க்க முடியாது. நாங்களும் ரொம்பச் சிரமப்பட்டுத் தான் பூஜைகள் நடத்திட்டு இருக்கோம். ரொம்பக் காலம் கழிச்சு, சமீபத்துல எங்க ஊர்ல மழை வந்துச்சு.

கோயிலுக்கு விளக்கேத்தி பூஜை செய்ய வும், திருப்பணிகள் நல்லபடியா முடியவும், எம்பெருமானே மழை வடிவில் கருணை பொழிஞ்சு ஆசீர்வதிச்சதா நம்பறோம். திருப் பணிகளை நல்லபடியா முடிச்சு இந்தக் கோயிலை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டா, எங்க ஊர் செழிச்சு வளரும்; நாடும் சுபிட்சம் பெறும்னு நம்பறோம். கோயிலுக்காக உழைக்க நாங்கள் தயாரா இருக்கோம். எங்களுக்குத் தேவை பக்தர்களின் உதவி மட்டும்தான்' என்றார் அவர்.

நம்பிச் சரணடைந்தோர்க்கு  அவர்கள் வேண்டுவன வேண்டிய வண்ணம் அருளும் வரகுணேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்யவேண்டியது நம்முடைய கடமை அல்லவா? ஆலயங்கள் நம்முடைய வழிபாட்டு ஸ்தலமாக மட்டும் இல்லாமல், கலாசாரம், நாகரிகம் போன்றவற்றை காலாகாலத்துக்கும் நம்முடைய சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் கேந்திரங்களாகவும் அல்லவா திகழ்கின்றன?! அந்த வகையில், நம்முடைய பாரம்பர்யத்தைப் பறை

சாற்றும் கேந்திரமாகவும், வேண் டும் வரங்களைத் தப்பாமல் அருளும் புனிதத் தலமாகவும் திகழும் வரகுணேஸ் வரர் ஆலயம் புதுப் பொலிவு பெற்று, நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் தொடர்ந்து நடைபெற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவிகளைச் செய்வோம்; நமக்கும் நம்முடைய சந்ததியினருக் கும் வேண்டும் வரங்களை வேண்டிய வண்ணமே அளித்துக் காப்பார் வரகுணேஸ்வரர் என்பது சத்தியம்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ஆசிரியக் கல்!

அகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் !

ஆலயத்தில் கிடைத்த சில கல்வெட்டுகளில் 'ஆசிரியக் கல்’ என்பது ஓர் அரிய கல்வெட்டாகக் கூறப்படுகிறது. ஆசிரியக் கல் என்பது, தன்னைக் காத்து உதவும்படி பிறருக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு. அது இறைவனுக்கோ, அரசனுக்கோ எழுதியதாக இருக்கலாம். இங்கு கிடைத்த ஆசிரியக் கல்லின் எழுத்துக்கள் 'ஸ்வஸ்தி’ என்ற மங்கள வார்த்தை யுடன் தொடங்குகிறது.  என்ற சொல் திருமகளைக் குறிக்கும். மேலும், 'நாயனாரும் மதுபதியும்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இதில், நாயனார் என்பது தலை வனாகிய ஈசனையும், மதுபதி என்பது தலைவியாகிய பார்வதி தேவியையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, மரண பயத்தைப் போக்கித் தன்னைக் காப்பாற்றி அருளவேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் வகையில் செதுக்கப்பட்ட ஆசிரியக் கல் இது என்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் ஒரு சில கோயில்களில் மட்டுமே இது போன்ற ஆசிரியக் கல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism