Published:Updated:

செந்தூர் முருகன் கோயிலிலே..!

நாரதர் உலா !

செந்தூர் முருகன் கோயிலிலே..!

நாரதர் உலா !

Published:Updated:

'திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்ஞ்’ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தார் நாரதர்.   

செந்தூர் முருகன் கோயிலிலே..!

''என்ன நாரதரே, பாட்டு பலமாக இருக்கிறது?! வைகாசி விசாகத் திருவிழா (ஜூன் 1) நெருங்குகிறதே, அந்த உற்சாகமோ?'' என்றபடியே அவரை வரவேற்று, வெயிலுக்கு இதமாக ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழரசம் கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாங்கி, ஒரு வாய் பருகியவர், ''பாட்டுதான் உற்சாகம்! ஆனால், திருச்செந்தூரில் விழா ஏற்பாடு களைப் பொறுத்தமட்டில் எதுவும் உற்சாகமாகச் சொல்லும்படி இல்லை!' என்று அலுத்துக்கொண்டார்.

'என்ன சொல்கிறீர் சுவாமி? திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகளைச் செய்ய லாம் என்று கலெக்டர் ஆபீஸில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கூடிப் பேசி முடிவு செய்வது வழக்கமாயிற்றே?'

'பேச்சோடு சரி! அடிப்படை விஷயங்களைக்கூட சரிவர கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்; வெளியூர்களில் இருந்து பஸ்களை விடுவதில் காட்டும் அக்கறையை, உள்ளூரில் பக்தர்களுக்குத் தேவை யான விஷயங்களைக் கவனிப்பதில் காட்டுவதில்லை என்று சொல்லி ஆதங்கப்படுகிறார்கள், திருச்செந் தூரில் உள்ள சமூக ஆர்வலர்கள்.'

''கோயிலில் போதிய வருமானம் வருகிறதுதானே?''

''ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறதாம். ஆனால், மற்ற கோயில்களில் உள்ளது போலவே இங்கேயும் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், போலீஸ் ஆகியோரிடையே முட்டல் மோதல் போக்குதான் நிலவுகிறது.'

'அடக் கடவுளே! இவர்கள் ஒற்று மையாகச் செயல்பட்டால்தானே, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைச் சரிவரச் செய்ய முடியும்?'

'அதில் என்ன சந்தேகம்? குறிப்பாக, திருச் செந்தூர் கோயிலுக்கான இணை கமிஷனர் பதவி இரண்டு வருஷங்களாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. கோயிலில் நடைபெறும் பல விஷயங்கள் அரசு மேலிடத்துக்குப் போகாமல்

இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்க லாமோ என்றுகூடத் தோன்றுகிறது' என்று பொடி

வைத்தார் நாரதர்.

''ஏதேதுஞ் நீர் சொல்வதைப் பார்த்தால், ஏதோ நடக்கக்கூடாததெல்லாம் அங்கே நடப்பது மாதிரி தெரிகிறதே?'' என்றோம்.

''முன்பெல்லாம் கோயிலின் ராஜகோபுரத்தை பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால், முழுமையாகத் தரிசிக்க முடியும். இப்போது அந்த இடத்தில் புதுக் கட்டடம் எழுப்பப்பட்டு, முடியும் தறுவாயில் உள்ளது. 'என்ன மண்டபம் இது?’ என்று, உள்ளூரில் உள்ள தாமிரபரணி அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் கேட்டேன்.

செந்தூர் முருகன் கோயிலிலே..!

  'காவடி மண்டபம்! பழைய மொட்டை போடும் இடம் இது. கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவுக் குள் இது வருவதால், சட்டப்படி இங்கே கட்டடம் கட்டக்கூடாது என்றோம். திருக்கல்யாணம் முடிந்து, சாமி இந்த வழியாகத்தான் போகும். ஆனால், அதை மறித்து, ஜெயலலிதா பெயரைச் சொல்லி 'காவடி மண்டபம்’ என்கிற பெயரில் இங்கே கட்டடம் கட்டிவிட்டனர். ஆனால், காவடியுடன் உள்ளே போக முடியாது. அந்த அளவுக்கு உயரம் கம்மியான மண்டபம் இது. திடீர் திடீரென கோயிலில் வழக்கத்துக்கு மாறாக இது மாதிரி ஏதாவது செய்தால், ஆட்சியாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படும். அந்தக் கட்டடம் கட்ட ஆரம்பித்த பிறகு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தடுத்துச் சோகங்களைச் சந்தித்து வருகிறார்கள்’ என்றவர், இது விஷயமாக தான் நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பதாகவும் சொன்னார்.'

பெருமூச்சொன்றை விடுவதைத் தவிர, நமக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

'அதற்குள் அசந்துபோனால் எப்படி? இன்னும் கேளும். பாலசுப்பிரமணிய ஆதித்தன் சொன்ன இன்னொரு தகவலையும் சொல்லிவிடுகிறேன். கோயிலின் ராஜ கோபுரத்தை முன்னின்று கட்டியவர் ராஜசித்தர் ஆறுமுகசாமி என்பவராம். இவருக்கும் செந்தில் ஆண்டவனுக்கும் நிறையத் தொடர்பு உண்டாம். அந்த ஆறுமுகசாமியின் நினைவாக ராஜகோபுரத்தைப் பார்க்கும் வகையில்

ஒரு காலத்தில் அமைந்திருந்த அவரது சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அருகில் உள்ள ஏதோ மருத்துவமனைக்குள் பூட்டி வைத்திருக் கிறார்களாம். அந்தச் சிலையை உடனடியாக எடுத்து முறைப்படி பராமரித்தால், ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும் என்கிறார் பாலசுப்பிரமணிய ஆதித்தன்.'' என்ற நாரதர் தொடர்ந்து கூறினார்.

''சமுத்திர ஸ்நானம் செய்யும் பக்தர்கள், உடலில் படிந்திருக்கும் உப்புத் தண்ணீரின் பிசுபிசுப்பு போக நல்ல தண்ணீரில் குளிக்க இடம் தேடி அலைகிறார்கள். நாழிக்கிணறு அருகில் பெரிய தண்ணீர்த் தொட்டி இருக்கிறது. பெண்கள் குளிக்க அந்த இடம் பாதுகாப்பானதாக இல்லை.

மேற்கூரை இல்லாத தடுப்பு ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்தத் தடுப்பை ஒட்டியபடி, புதிய ஒரு கட்டடம் இருக்கிறதுஞ்'

'இங்கேயுமா? அதென்ன கட்டடமோ?'

'பெண்கள் விரதம் இருப்பதற்கான சஷ்டி மண்டபமாம்! அது இன்னும் திறக்கப்படாமல் ஜெயலலிதாவுக்காகக் காத்திருக்கிறது. அதன் முதல் மாடியின் பக்கவாட்டில் இளைஞர்கள் சிலர் ஏறி நின்று, மேற்கூரை இல்லாத தடுப்பின் உள்ளே பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்க்கிறார்கள்...'

''இதுபற்றிக் கோயில் அதிகாரிகளிடம் யாராவது புகார் சொல்லியிருக்கிறார்களா?''

''சொல்லாமல் இருப்பார்களா? அது பற்றிப் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் இன்னும் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். நாழிக்கிணறு செல்லும் வழியில், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிக்கும் தண்ணீர்க் குழாய் உடைந்து, வழி நெடுகிலும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசாரமாக வரும் பக்தர்கள் அந்தத் தண்ணீரில் கால் படாமல் லாங் ஜம்ப் செய்வதுபோல் தாண்டித் தாண்டிச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

செந்தூர் முருகன் கோயிலிலே..!

இந்த தண்ணீரெல்லாம் குழாய் மூலம், நேராகச் சென்று கடலில் கலக்கிறது. அது மட்டுமல்ல, பொதுக் கழிப்பிடங்களின் கழிவு களையும் லாரியில் ஏற்றி, குழாய் வழியாகக் கடலில் கலக்கும்படி விடுகிறார்கள். அதுவும் பக்தர்கள் குளிக்கும் இடத்துக்கு மிக அருகே!'

'கேட்கவே சங்கடமாக இருக்கிறதே..!'  

''இன்னும் கேளும்! கோயில் விடுதியின் பின்பக்கம் கழிவுநீர்க் குழாய் உடைந்து, அந்தப் பகுதி முழுக்க துர்நாற்றம் வீசிக் கொண்டிருந் தது. கடற்கரையில், அபிஷேக நீர்க் கிணறு உள்ளது. அதிலிருந்துதான் சாமிக்கு அபிஷேக நீர் எடுத்துச் செல்கிறார்கள். அந்தக்

கிணற்றைச் சுற்றிலும் ஜனங்கள் அசிங்கம் செய்திருப்பதைப் பார்த்தபோது, வேதனை யாக இருந்தது. அந்தப் பொறுப்பற்றவர்களின் மனசில் நல்ல புத்தியை அந்தச் செந்தில் ஆண்டவன்தான் ஏற்படுத்த வேண்டும்!'

''ஆயிரக்கணக்கில் அங்கே குளிக்கிற மக்களின் கதியை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!'

'கடற்கரையில் மலைபோல் குப்பை களைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றை யார் எப்போது அப்புறப்படுத்து வார்கள் என்பது அந்தச் செந்தில்நாதனுக்கே வெளிச்சம். பக்தர்களுக்கு நல்ல சுகாதார மான சூழ்நிலை இல்லாமல் இருப்பது பற்றியும், கடற்கரைச் சுற்றுச் சூழல் மிக மோசமாக இருப்பது பற்றியும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டார்கள் தாமிரபரணி அமைப் பினரும், பி.ஜே.பி கட்சியின் வினோத், தி.மு.கவின் சுரேஷ் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்களும்!'

''பக்தர்கள் தங்கும் இடமாவது ஓரளவு நன்றாக இருக்கிறதா?'

''அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர் கள்? ஜெயந்திநாதர் விடுதி என்று ஒன்று உள்ளது. அதன் கட்டடங்கள் படுமோசமான நிலையில் இருக்கின்றன. நல்லவேளையாக, அதன் இரண்டு மாடி களில் 70 அறைகளைப் பூட்டிவிட்டார்கள். பக்தர்களுக்கு அறைகளைத் தருவதில்லை. கீழ்தளத்தில் ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கும் அறைகளை மட்டுமே வாடகைக்கு விடுகிறார்கள்.''

''இந்தப் பிரச்னைகளை எல்லாம் கோயில் தரப்பினரிடம் கொண்டு சென்றீரா?'

''அதுதானே என் வேலை?! அதிகாரிகள், அமைச்சர் என எல்லாரிடமும் பிரஸ்தாபித் தேன். அந்த விவரங்களை அப்புறம் சொல்கிறேன். இப்போது எனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. நான் புறப்படுகிறேன்' என்று சடுதியில் மாயமானார் நாரதர்.

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism