ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

கும்பாபிஷேக தரிசனம்...

திருவெளிச்சையில்... விஸ்வரூப ஆஞ்சநேயர் !

கும்பாபிஷேக தரிசனம்...
##~##

கடந்த நூற்றாண்டின் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மகா பெரியவாளால் கண்டறியப்பட்ட மகான் ஞானச்சேரி ஞானிகள் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்.காஞ்சி மகானின் வழிகாட்டுதலின்படி, இளம் வயதிலேயே வேதங்களைக் கற்றறிந்தவர். இந்த மகான் அன்றைக்கு எழுப்பிய கோயில், இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஞானமும் செல்வமும் தருகிற திருத்தலம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

பாகவதபுரம் எனும் ஊரில் அவதரித்த ஞானச்சேரி ஞானிகள் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், சிறு வயதில் அங்கிருந்த ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வந்தார். அப்போதே அதேபோன்று தானும் ஓர் ஆலயம் கட்டவேண்டும் என ஆவல் கொண்டாராம். அதன்படி, 95-ஆம் வருடம், திருவெளிச்சை கிராமத்தில் ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் ஆகியோருக்குக் கோயில் எழுப்பினார் என்கிறது ஸ்தல வரலாறு. 

கும்பாபிஷேக தரிசனம்...

சென்னை- வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் ஸ்ரீமலைஆஞ்சநேயர் கோயிலைத் தரிசிக்கலாம். அருகிலேயே வலப்புறமாக ஒரு சாலை பிரிகிறது. இதில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், திருவெளிச்சை கிராமத்தை அடையலாம். இங்குதான் ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீசிவசுப்ரமணியர், ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீகனகவல்லித் தாயார், ஸ்ரீபிரத்தியங்கிராதேவி மற்றும் ஸ்ரீவள்ளலார் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்க... ஞானிகள் எழுப்பிய ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஸ்ரீவிஸ்வரூப ஸ்ரீராம பக்த ஆஞ்ச நேயர் திருவிக்கிரத்தைப் பிரதிஷ்டை செய்து, கடந்த 11.9.11 அன்று கும்பாபிஷேகம் சிறப்புற நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக தரிசனம்...

எதிரில் ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான் சந்நிதி கொண்டிருக்க, அவர்களை வணங்கியபடி அஞ்சலி ஹஸ்தத்துடன் மிக அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். சாதி- மதப் பாகுபாடுகள் இன்றி,

இங்கு பலரும் வந்து வேண்டிச் சென்று, பிரார்த்தனை நிறைவேறியதாகச் சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

திருவெளிச்சை திருத்தலத்துக்கு வந்து வணங்கினால், திருப்பங்கள் நிகழும்; பூரண இறையருள் கிடைக்கும். நம்முடைய

வாழ்க்கையில் இதுவரை இருந்த இருள், மருள் யாவும் விலகி, வெளிச்சம் கிடைக்கும்!

- பொ.ச.கீதன்
படங்கள்: ப.சரவணகுமார்