Published:Updated:

வாயு மைந்தனை வழிபடுவோம்!

வாயு மைந்தனை வழிபடுவோம்!

வாயு மைந்தனை வழிபடுவோம்!

வாயு மைந்தனை வழிபடுவோம்!

Published:Updated:
வாயு மைந்தனை வழிபடுவோம்!


பஞ்சமுக தரிசனம்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரன் ஒருவனை அழிப்பதற்காக பஞ்ச முகத்துடன் காட்சி தந்தாராம் ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீஅனுமன் ஜயந்தியன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும்.

அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனையை தரும் இந்தத் திருமுகத்துக்கு வாழைப்பழமும்  கடலையும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

ஸ்ரீநரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும். இந்த முகத்துக்குப் பானகமும் நீர்மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.

கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும் உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும். தேன் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.

ஸ்ரீவராக முகம்: வடக்கு நோக்கியது. கிரகதோஷங்களை நீக்கி, ஐஸ்வரியம் அருளும். இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

ஸ்ரீஹயக்ரீவ முகம்: மேல்நோக்கிய இந்தத் திருமுகம் வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும். அவல், சர்க்கரை, வெண்ணைய் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.

- மாலதி நாராயணன், சென்னை-87

வாழ்க்கைப் பிரச்னை தீர...

வாயு மைந்தனின் பலம் முழுவதும் அவரது வாலில் இருப்பதாக ஐதீகம். ஒருமுறை, ஸ்ரீராம சகோதரர்களை வாலால் அரண் அமைத்து அனுமன் பாதுகாத்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

வீட்டில் இருக்கும் அனுமனின் திருவுருவப் படத்தில்... முதல் நாள்- அனுமனின் வால் நுனியில் சந்தன-குங்குமப் பொட்டு வைத்து ஆரம்பித்து, தொடர்ந்து ஒரு மண்டல காலம் அடுத்தடுத்து வரிசையாகப் பொட்டு வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பார்கள்.

- எஸ்.மாரியப்பன், தேனி

'பாதுகை’ காணிக்கை!

ந்திர மாநிலம் குண்டக்கல் அருகிலுள்ள காசாபுரம் கிராமத்தில், ஸ்ரீநெட்டிகண்டி ஆஞ்சநேய சுவாமி என்ற வித்தியாசமான திருப்பெயருடன், சுமார் 10 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார் ஸ்ரீஅனுமன்.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய இந்த அனுமன், தனக்குப் பாதுகைகள் செய்து வைக்குமாறு கூறினாராம். பக்தரும் ஒரு ஜோடி செருப்பு செய்து கோயிலில் வைத்தார். சில நாட்கள் கழித்துப் பார்த்தால், ஸ்ரீஆஞ்சநேயர் அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு நடந்தது போன்று அடையாளம் தெரிந்ததாம்! அதுமுதல், வருடம்தோறும் அனுமனுக்கு ஜோடி செருப்பு செய்து சமர்ப்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாராம் அந்த பக்தர். நாளடைவில் மற்ற பக்தர்களும், புதிய செருப்புகளை தலையில் சுமந்து வந்து நெட்டிகண்டி அனுமனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வருகின்றனர். இதனால், இன்னல்கள் விலகி இனிய வாழ்வு கிட்டும் என நம்புகின்றனர்.

இந்தக் கோயிலில், சனிக்கிழமை இரவு தங்கி வழிபட்டால், வேண்டிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து 18 நாட்கள் இந்த மாருதியை தரிசித்து வழிபட்டால் நோய்கள் தீரும் என்று சிலாகிக்கும் பக்தர்கள், வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து, நெட்டிகண்டி ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்குகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.

- ஜெயலெட்சுமி கோபாலன், சென்னை-64.

ஆஞ்சநேய அவதாரம்!

ஞ்சனாதேவி- கேசரி தம்பதிக்குப் பிறந்தவர் ஸ்ரீஆஞ்சநேயர். இவர் அவதரித்த திருவிடம்... ஜார்கண்ட் மாநிலத்தில், கும்லா என்ற

இடத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலை வில் உள்ள ஆஞ்சன் கிராமம் என்பர். ஆனால் சிலர், மகாராஷ்டிர மாநிலம்- பிரம்மகிரியே அனுமனின் அவதாரத் தலம் என்றும், இன்னும் சிலர், கர்நாடக மாநிலம் ஹம்பி அருகிலுள்ள ரிஷ்யமுக பர்வதம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ... சிரஞ்ஜீவியான அனுமன், ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் வசித்திருப்பார். ஸ்ரீஅனுமன் ஜயந்தி திருநாளில், ஸ்ரீராம நாமம் சொல்லி அனுமனின் அருள் பெறுவோமே!

- கே.கலா, திருப்பூர்

      ஆலத்தியூர் வழிபாடு!

வாயு மைந்தனை வழிபடுவோம்!

கேரள மாநிலம் திரூருக்கு அருகிலுள்ள ஆலத்தியூர், சிறப்பு வாய்ந்த அனுமன் தலமாகும். இந்த மூர்த்தி, வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப் பட்டவராம். கோயிலின் பிரதான சந்நிதியில், ஸ்ரீராமர் தரிசனம் தருகிறார்.

சீதாதேவியைத் தேடி அனுமன் இலங்கைக்குச் செல்வதற்கு முன், அவரைத் தனியே அழைத்த ஸ்ரீராமன், தனக்கும் சீதாவுக்கும் இடையேயான சில நிகழ்வுகளை விவரித்தாராம். இதை நினைவூட்டும் விதமாக, ஸ்ரீராமனின் அருகில் அவரது பேச்சை செவிமடுக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார் அனுமன். ஸ்ரீஅனுமன், இலங்கைக்கு செல்லும் பொருட்டு பெரிய குன்றின் மீது ஏறி நின்று விண்ணில் பாய்ந்ததை நினைவூட்டும் வகையில், இந்தக் கோயிலில் நீளமான ஒரு மேடை அமைந்துள்ளது. அதையட்டி, சமுத்திரத்தைக் குறிக்கும் வகையில் கருங்கல் பீடம் ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், ராமபிரானையும் அனுமனையும் தரிசித்து விட்டு, இந்த நீளமேடையின் மீது ஏறி நின்று, கருங்கல் பீடத்தைத் தாண்டித் தரையில் குதிப்பதை ஒரு சடங்காகவே செய்கின்றனர். இந்தப் பிரார்த்தனையால் ஆரோக்கியம், உடல் வலிமை, நீண்ட ஆயுள், கல்வி, செல்வம் ஆகியன கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம்- திரூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது ஆலத்தியூர்.

அணைப்பட்டி ஆஞ்சநேயர்!

துரை சோழவந்தான் அருகிலுள்ளது அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில். வைகையில் தண்ணீர் பெருகியோடும் காலங்களில், இந்த ஸ்வாமியின் பாதத்தின் அருகில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். இவர் வாலில் நவக்கிரகங்கள் உள்ளனவாம். அவை, கவிழ்த்துவைக்கப்பட்ட கிண்ணங்கள் வடிவில் காட்சியளிப்பதாகக் கூறுவர். அனுமனின் வாலில், நவக்கிரகங்கள் தலைதூக்கி நிற்கக்கூடாது. என்பதற்காகவே இப்படியரு அமைப்பு என்கிறார்கள்!

- ஆர்.ரமணகுமார், சென்னை-4

அனுமனுக்கு விசேஷமான தினங்கள்!

ஆஞ்சநேயருக்கு அனைத்து நாட்களும் விசேஷ மானவையே! இவரை வழிபடுவதற்கு ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி தடையாகாது. எனினும் புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஅனுமனை வழிபடத் துவங்குவது விசேஷம்.

மாதந்தோறும் அமாவாசை தினத்திலும், கேட்டை மற்றும் மூல நட்சத்திர நாளிலும் பூஜிக்கலாம். அதேபோல், ஸ்ரீராம நவமி திருநாளிலும், ஆஞ்சநேயரின் அவதார நன்னாளான... மார்கழி மாதம் மூலநட்சத்திரத்துடன் கூடிய அமாவாசையில் ஆஞ்சநேய வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது!

- சி.டி.கே.மூர்த்தி, சென்னை-82

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism