Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நட்சத்திரங்களை வணங்குவோம்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நட்சத்திரங்களை வணங்குவோம்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

சூரியனும் சந்திரனும் மறைந்திருக்கும் வேளையில், ஒளியை வழங்குபவை நட்சத்திரங்கள். கும்மிருட்டில்கூட போதிய ஒளியைத் தந்து உயிரினங்களுக்கு வழிகாட்டுபவை அவை! விண்ணில், கிரக மண்டலத்தையும் கடந்து, நட்சத்திர மண்டலம் பரந்து விரிந்து தென்படுகிறது. சப்தரிஷிகள், அகத்தியர், த்ருவன், அருந்ததி ஆகியோர் நட்சத்திர வடிவில், வானில் திகழ்கின்றனர் என்கிறது தர்மசாஸ்திரம் (ஸப்தரிஷய: ப்ரதமாம்கிருத்தி தானாம் அருந்ததீயத்குவ...). 

நட்சத்திர யாகத்தைப் பரிந்துரைக்கிறது வேதம் (நக்ஷத்ரேஷ்டி). வானில் உள்ள நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியதும், அவை தேவதைகளின் இருப்பிடம் என்று தெரிவித்ததும் வேதம்தான் (தேவ கிரஹாவைநக்ஷத்ராணி). ஒளி வடிவான தேவர்கள், ஒளி வடிவான நட்சத்திரத்தில் ஒன்றியிருப்பது பொருந்தும்தானே?! நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள் இணைந்த ஓடுபாதையில் பயணிக்கின்றன. ஒளியின் இணைப்பில் சைதன்யம் பெற்று, நம்முடைய கர்மவினையை எடுத்து விளக்குவதால், அவற்றுக்குக் கிரகங்கள் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது வேதம் (கிருஹ்ணாதீதிக்ரஹ;)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

க்ஷத்திரம் என்றால் அழிவு; நக்ஷத்திரம் என்றால் அழிவற்றது என்கிறது நிருக்தம். புவியில், வேள்வியில் ஈடுபட்டவன், நட்சத்திரம் வாயிலாக விண்ணுலகம் செல்கிறான் (யேவா இஹயஜதெ அமும்ஸ லோகம் நக்ஷதெ). எண்ணிக்கைக்கு அடங்காத அளவுக்கு நட்சத்திரங்கள் இருந்தாலும், 27 நட்சத்திரங்களை அறிமுகம் செய்தது வேதம். மேலும், வேள்விக்கு மட்டுமின்றி, அன்றாட அலுவல்களை நடைமுறைப்படுத்த, நட்சத்திரங்களின் தொடர்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.

ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான்.அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் காதில், நட்சத்திரத்தின் பெயரை ஓதுவான் தகப்பன் (நக்ஷத்ரநாமசநிர்திசதி...). அதையட்டியே, பஞ்சாங்கங்களில் நட்சத்திரத்தை வைத்து, பெயரின் முதல் எழுத்துக்களின் அட்டவணைகள் சேர்க்கப்பட்டன. நட்சத்திரப் பெயரு டன் இணைந்தபடி, நாம் வைக்கிற பெயர்

களுக்கு உயிரோட்டம் இருக்கும். இன்ன நட்சத்திரத்தில், இன்ன ராசியில், இன்ன பெயரில் இருப்பவரின் நன்மைக்காக... என்று அர்ச்சகர், நட்சத்திரத்தின் பெயரை யும் இணைத்து சங்கல்பம் சொல்லி, அர்ச்சனை செய்வார். ஒளி வடிவில் இயங்கிக் கொண்டிருப்பது நட்சத்திரம். எனவே, இந்த ஒளியின் பிறப்பில் இணைந்த மனிதன், உலகின் எல்லாப் பொருள்களுடனும் தனது இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நட்சத்திரங்களுக்கு கிரகங்களுடனும், கிரகங்களுக்கு அகண்ட விண்வெளி யுடனும் தொடர்பு உண்டு. அந்த விண்வெளி, உடலுக்குள் இருக்கும் விண் வெளியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்படி, பரம்பரையாக மனம் வரை தொடர்பு நீடித்திருக்கும். தந்தை ஓதிய நட்சத்திரத்தின் பெயர், காதினுள் இருக்கிற இடைவெளியில் புகுந்து, மனதை எட்டிவிடும். மனிதனை, ஆகாயத்தில் இருக்கிற நட்சத்திரத்தில் இணைந்த வனாகச் சித்திரிக்கிறது சாஸ்திரம். காலத்தில் இணைந்த கர்மவினையை, தருணம் வரும்போது வெளிப்படுத்தும் நவக்கிரகங்களின் தசைகளைப் பட்டியலிட்டு வரையறுப்பது, அவனு டன் இணைந்த நட்சத்திரமே!

அஸ்வினியில் ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங் களுக்கு எண்ணிக்கையை வைத்துப் பலனை அறிமுகம் செய்த வேதாங்க ஜோதிடம், 27-ல் மிச்சமிருக்கும் இரண்டு ஒன்பது ஒன்பதான நட்சத்திரங்களுக்கும், அதே பலனை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறது. அதாவது... மூன்று ஒன்பதில், முதலாவது வருகிற மூன்று நட்சத்திரங்களுக்குக் குறிப்பிட்ட தசையை அறிமுகம் செய்தது அது. அஸ்வினி, மகம், மூலம் என்கிற மூன்றில், கேது தசை என அறிமுகமானது, பிறகு வருகிற மூன்று ஒன்பதில், இரண்டாவது, மூன்றாவது எனும் எண்ணிக்கையில் மற்ற கிரகங்களின் தசா காலங்களையும் வரையறுத்துள்ளது. இதிலிருந்து, குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து தசா காலம் ஏற்படுவதால், நட்சத்திரம் ஒருவனது தசா கால அட்டவணையை நிர்ணயிக்கிறது. நல்லது- கெட்டது என மாறி மாறி வருகிற தசா காலத்தை, அவன் கர்மவினைக்குத் தக்க படி, அவன் பிறந்த வேளையில் இணைந்த நட்சத்திரம் அமைத்துக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ராசிகள் பன்னிரண்டும் ஜடங்கள். அதற்கு சைதன்யம், அதாவது செயல்படும் தகுதியை அளிப்பது நட்சத்திரங்களே! அவற்றுடன் இணைந்த ராசி, உயிரோட்டத்தைப் பெறுகிறது. அதற்கு ஒளி கிடைத்து, ராசியின் தரத்தில் தென்படும் தகவல்களை அளிக்க உதவுகிறது. உச்சம், நீசம், அஸ்தமனம், மௌட்யம் எனப் பல மாறுதல்களை கிரகங்கள் சந்திக்கின்றன. வக்கிரம், அதிசாரம் போன்றவற்றால் நிலையில்லாத போக்கு, அவற்றில் தென்படும் சாரத்தைத் துல்லியமாக அறிவது ஆகியவை கடினமான ஒன்று. விண்வெளியில் மாறுபாட்டுக்கு உட்படாமல் நிலையாக விளங்கும் நட்சத்திரத்தின் தொடர்பு நம்பகமானது என்பதால், நட்சத்திரத்தை இணைப்புக்குப் பயன்படுத்தினார்கள்.

தாத்தா, தந்தை, தனயன் ஆகிய மூவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் பிறக்க நேர்ந்தால், பரிகாரம் செய்யப் பரிந்துரைக்கிறது தர்ம சாஸ்திரம். தசைகளின் அட்டவணை ஒன்றாக இருப்பதாலும், இன்ப- துன்பங்கள் மாறி மாறி வருவதற்கு அவகாசம் இருப்பதாலும், தாத்தா தன்னுடைய தசா காலங்களில் அனுபவித்துத் தெரிந்திருப்

பதாலும், ஒருவேளை விபரீத விளைவு களுக்கு இடமிருந்தால், ஏற்க முடியாமல் அழுத்துகிற துன்பங்களை அகற்ற, தப்பான கர்மவினையைக் கரைக்கிற பரிகாரத்தைக் கையாண்டால், மற்ற இரண்டு பேரும் துன்பப்பட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில் முன்னோர்கள் அதனைக் கடைப்பிடித்துத் தப்பியுள்ளனர். 'ஏக நக்ஷத்ர ஜனன சாந்தி’ அதாவது, ஒரே நட்சத்திரத்தில் பிறந்த மூவரின் நன்மைக் காகச் செய்யும் சடங்கு என்கிறது சாந்தி ரத்னாகரம்.

பும்ஸுவனத்துக்குப் பூசம் சிறப்பு, குடுமிக் கல்யாணத்துக்கு புனர்பூசம் சிறப்பு, கன்யகாதானத்துக்கு சுவாதி சிறப்பு என நமது விசேஷங்களுக்கு நட்சத்திரங்களின் சிறப்பைச் சொல்கிறது சாஸ்திரம்

(வ்யத்தேகர்பேதிஷ்யேண, சௌனம் புனர்வஸ்வோ:). அவிட்டம் முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்களில் உயிர் பிரிந்தால், இறந்தவர்களுக்காகப் பரிகாரம் செய்யச் சொல்கிறது. பரணி, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி ஆகியவற்றில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம் (யம ருத்ராஹி...). மாடு வாங்க, கலப்பையில் பூட்ட, மகம், பூரம் இரண்டையும் சுட்டிக்காட்டுகிறது. நட்சத்திரப் பெயருடன் விளங்குபவள், திருமணத்துக்குச்  சிறப்பில்லை என்றும் (நஷத்ரநாமா சகர்ஹிதா:), நட்சத்திரங்களுக்கு நேரடி பலன் சொல்லும் தகுதி இருப்பதாகவும் சொல்கிறது வேதம். நட்சத்திரங்களின் ஒவ்வொரு பாதத்துக்கும் தனித்தனியே பலன் சொல்லும் பகுதியை வராஹமிஹிரர் தனது 'பிருஹத் ஸம்ஹிதை’யில் கூறுகிறார். வான சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவங்களில் நட்சத்திரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இரவு, நட்சத்திரங்களைப் பார்த்து, பிறகு விரதத்தை முடிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (நக்ஷத்ரம் த்ருஷ்ட்வாவாசம் விஸ்ருஜேத்).

புதுமணத் தம்பதி, துருவனையும் அருந்ததி யையும் பார்த்து, தங்களது திறமையை வலுப்படுத்திக் கொள்கின்றனர். (த்ருவம் அருந்ததீம் சதர்சயதி). மழை நீரானது சுவாதி நட்சத்திர வேளையில், முத்துச்சிப்பியில் விழுந்தால், முத்தாக மாறிவிடும் என்கிறார் பர்த்ருஹரி. கிருத்திகை, திருவோணம் முதலான விரதங்கள், நட்சத்திர அடிப்படையில் எழுந்தவை. அமிர்த- சித்த- மரண யோகங்களில், நட்சத்திரத்துக்குப் பங்கு உண்டு. முதல் ஒன்பது நட்சத்திரங்களில், 9-வது ஆயில்யம், இரண்டாவது மூன்றாவது ஒன்பதாவது நட்சத்திரங்களான கேட்டை, ரேவதி ஆகியவற்றின் கடைசி பாதத்துக்கு குறை உண்டு என்கிறது சாஸ்திரம். இதனை 'கண்டாந்தம்’ எனக் குறிப்பிடுகிறது ஜோதிடம். ஒன்பது நட்சத்திரங்கள் மூன்று துண்டை (கண்டம்) உள்ளடக்கியதே ராசிச் சக்கரம். மூன்று துண்டுகளின் கடைசி, கழிவுப்பொருள் போல் கருதப்படுகிறது. கரும்பின் கடைசி அப்படித்தான் இருக்கும். கண்டாந்தத்தில் பிறந்தவன், ஆயுஸ் இருந்தால் சீரும் சிறப்புமாக, அரச போகத்தில்

வாழ்வான். இல்லையெனில், தாயையும் தந்தையையும் பாழாக்கி மடிவான் என்கிறது ஜோதிடம். ராவணனின் ஜாதகத்தை (ரேவதி கடைசி பாதம்) உதாரணம்காட்டி விளக்கமளிப்பர். இங்கே, மற்ற ஜாதகத் தகவல்கள் நிறைய இருந்தாலும், நட்சத்திர கண்டாந்தம் முடிவை இறுதி செய்கிறது எனும் தகவல், நட்சத்திரப் பலனுக்கு அழிவில்லை என உணர்த்துகிறது (கண்டாந்த ஸமபஹேமர்த்ய:...).

கிருத்திகை நட்சத்திரம், வேள்வியைத் துவக்கச் சிறந்தது என்கிறது சாஸ்திரம் (கிருத்திகாஸ்வக்னிமாததீத). அது, அக்னி தேவனின் நட்சத்திரம் (ஏதத்வா அக்னேர் நக்ஷத்ரம்); நடைமுறையில், கத்திரி வெயில் என்பார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பல காலங்களாக போர் மூண்டது. சோர்ந்து போன தேவர்கள், நம்பிக்கை இழக்கும் வேளையில், அசுரன் ஒருவனை வீழ்த் தினான் தேவன். அதில் நம்பிக்கை முளைக்க, 'அண்ணனை வீழ்த்திய நட்சத்திரம்’

என்று அன்றைய நட்சத்திரத்துக்குப் பெருமை சேர்த்தனர், தேவர்கள். அது 'ஜேஷ்டா நட்சத்திரம்’. அண்ணனை அழித்த நட்சத்திரம், 'ஜேஷ்டக்னி’ எனப் பெயர் வைத்தனர் (தேவர்களுக்கு அசுரர்கள் அண்ணன் முறை). அடுத்த நாள், அசுர குலத் தலைவன், அதாவது மூல புருஷன் கொல்லப்

பட்டான். ஆகவே, அன்றைய நட்சத்திரம் 'மூலம்’ எனப்பட்டது. மறுநாள், எதிரிகள் பொறுமை இழந்தனர். அதற்குப் 'பூராடம்’ எனப்பட்டது. அந்தத் தகவல் அனைவரின் காதுகளுக்கும் எட்டியது. எனவே, அன்றைய நாள் 'ச்ரோணா’, அதாவது திருவோணம் என்றானது. இப்படியாக வெற்றி, பட்டாபிஷேகம் போன்றவை நிகழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் 'பரணி’ வரையிலான விளக்கம் வேதத்தில் உண்டு. ஆகவே, நட்சத்திரங்களால் நேரடிப் பலன் உண்டு என்பதற்குச் சான்றுகள் இவை!

ராசிகளை மனித உருவில் குறிப்பிடும்போது, மேஷம்- தலை, ரிஷபம்- முகம் எனத் துவங்கி மீனம்- பாதம் என உடலுறுப்புகளாகச் சொல் வர். அதேபோல், நட்சத்திரங்களையும் மனித உருவில் சொல்வர். அதாவது ஹஸ்தம்- கை, சித்திரை- தலை, சுவாதி- இதயம், விசாகம்- இரண்டு தொடைகள், அனுஷம்- உடல் சுமக்கும் பாதங்கள் என்கிறது. அத்துடன், நட்சத்திரங்களுக்குரிய தேவதைகளையும் எடுத்துரைக்கிறது வேதம் (கிருத்திகா நக்ஷத்திரமக்னிர்தேவதா...). பிறந்த நாளில், ஆயுஷ்ய ஹோமத்தில் அந்த நட்சத்திரத்தையும் தேவதையையும் பூஜித்து, வேள்வியில் உணவு அளிப்பார்கள். ஆகவே, அன்றாட வாழ்வில் நட்சத்திரங்களை வழிபடுவது நலம்! அந்தந்த நாளில் தென்படும் நட்சத்திரங்களின் பெயரைச் சொல்லி, வணங்க வேண்டும். அஸ்வினியில் அஸ்வினி தேவர்கள், பரணியில்

யமதருமர், ரோகிணியில் படைத்த பரம் பொருள், மிருகசீரிஷத்தில் சோமன், திருவா  திரையில் ருத்ரன் என தேவதைகளை அறிந்து வழிபட, நன்மை உண்டு. நாம் வளைய வருகிற ஆகாசத்தில் அவர்கள் தென்படுவதால், அவர் களை வழிபடுவது சிறப்பு! திருவாதிரையின் தேவதை ருத்ரனாக இருப்பதால், திருவாதிரையை 'ஈசன் நட்சத்திரம்’ எனப் போற்றுகிறோம். ஆருத்ரா தரிசனத்தைக் கொண்டாடுகிறோம். திருவோணத்தின் தேவதை 'பெருமாள்’ என்பதால், சிரவண விரதம் பெருமையுடன் திகழ்கிறது.  

பரம்பொருள் தோன்றுகிற வேளையை, நட்சத்திரத்தைக் கொண்டு கொண்டாடுகிறோம். ரோகிணியில் ஸ்ரீகிருஷ்ணரையும், புனர்பூசத்தில் ஸ்ரீராமரையும் வணங்குகிறோம். பிறந்த வேளை யின் பெருமைக்கு நட்சத்திரம் காரணமாக இருப்பதால், மகம் பிறந்த மங்கை, பரணிப் பெண் தரணி ஆளும், அவிட்டத்துக்கு தவிட்டுப் பானையிலும் பணம், பூரம் பிறந்த புருஷன் எனும் பழமொழிகள் உண்டு. இவை, நட்சத் திரங்களின் பெருமைக்கான உதாரணங்கள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இயற்கையின் பாதுகாவலர்களான நட்சத் திரங்களை வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது வேதம் (நக்ஷத்ரேப்ய: ஸமனமத்...). ஆகவே, காலையில் நீராடி, உடுத்திக்கொண்டு, அன்றைய நட்சத்திரத்தை வணங்கிவிட்டு, நம் அன்றாடப் பணிகளைத் துவக்கினால், அந்தப் பணிகளில் தடையிருக்காது; எதிலும் வெற்றி கிடைக்கும்!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism