Published:Updated:

திருப்பட்டூர் - பிரம்மா

திருப்பட்டூர் - பிரம்மா

திருப்பட்டூர் - பிரம்மா

திருப்பட்டூர் - பிரம்மா

Published:Updated:
திருப்பட்டூர் - பிரம்மா
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருப்பட்டூர். திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது, இந்த அழகிய கிராமம். இங்கே, பிரமாண்ட ஆலயத்தில், தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார், பிரம்மா!  

'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார் பிரம்மா. எனவே, இந்தத் தலத்தில் அருளும் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம்!

தலத்தின் நாயகி- ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளியதால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு!

பிரம்மனுக்கு வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தாராம்! 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது, முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான், பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் பக்தர்களது தலையெழுத்து மாறும்; தலைமுறையும் செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்!

இந்தத் தலத்தைப் போன்றே, பிரம்மன் அருள் பெற்ற தலங்களும், பிரம்மன் நமக்கு அருள் வழங்கும் ஆலயங்களும் ஏராளம்!

தேவர்களின் 'பிரம்ம’ முகூர்த்தமாம் புனித மார்கழியில்  பிரம்மதேவனை தரிசிப்போம்; அருள் பெறுவோம்!

படம்: செ. சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism