ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

பஞ்சாக்னியின் நடுவில் ஸ்ரீதபஸ் காமாட்சி!

பஞ்சாக்னியின் நடுவில் ஸ்ரீதபஸ் காமாட்சி!

 காஞ்சி காமாட்சியம்மன் ஆலயக் கருவறையில், அம்பாளுக்கு வலப்புறம் ஸ்ரீதபஸ் காமாட்சி காட்சி தருகிறாள். ஈஸ்வரனை மணம் செய்யும் நோக்குடன், பஞ்சாக்னியின் நடுவில், ஊசி முனையில் ஒற்றைக் காலில் நின்று, கரங்களை சிரம் மேல் குவித்து வைத்து தவக்கோலத்தில் அருள்கிறாள் இந்த அம்பிகை. கருவறையில் சற்று மறைவான இடத்தில் இருப்பதால், சாதாரணமாக பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பில்லை. ஸ்ரீகாமாட்சி அம்பாளை ஞான சக்தியாகவும் ஸ்ரீதபஸ் காமாட்சியை யோக சக்தியாகவும் போற்றுவர்.  

பஞ்சாக்னியின் நடுவில் ஸ்ரீதபஸ் காமாட்சி!
##~##

ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி 9 நாட்களும், ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இதையட்டிய கன்யாபூஜை யும் விசேஷம். முதல் நாளன்று ஒரு வயது குழந்தை, அடுத்த நாள் 2 வயது குழந்தை... எனத் தொடர்ந்து, 9-ஆம் நாள் 9 வயது சிறுமி எனும் முறையில் கன்யாபூஜை நடைபெறும். இவர்களுக்கு கோயிலின் சார்பாகவே எண்ணெய், சீயக்காய் மற்றும் அளவெடுத்து தைக்கப்பட்ட புத்தாடை தருவார்கள். தூய்மையாய் நீராடி, புத்தாடை அணிந்து அம்பாளின் கருவறையில் ஸ்ரீசக்ரத்தின் அருகில் அமரும் பெரும் பாக்கியம் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும். இங்கு நடைபெறும் சுமங்கலி பூஜையும் வெகுவிசேஷம்!

- சி.என்.முத்துசாமி சாஸ்திரிகள்,
காஞ்சிபுரம்