ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

ஷரத் பூர்ணிமா !

ஷரத் பூர்ணிமா !

ஷரத் பூர்ணிமா !

தமிழகத்தில் வீரம், செல்வம், கல்வி வரம் தரும் முப்பெருந்தேவியரை நவராத்திரியில் வழிபடுவோம். வங்காளத்தில் தேவி பூஜை விசேஷம். பெரிய பெரிய காளி விக்கிரகங்களைச் செய்து வைத்து வழிபட்டு, விஜயதசமி தினத்தன்று அவற்றை நீரில் கரைப்பார்கள். வெளி மாகாணங்களில் வசிக்கும் வங்காளிகளும், 'காலி பாரி’ என்பது போன்ற சங்கங்களை அமைத்து 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுவர். பந்தல் அலங்காரத்தில் போட்டிகள் வைத்து, மிகச் சிறந்தவற்றுக்கு பரிசுகளும் வழங்குவார்களாம். தொடர்ந்து வரும் பௌர்ணமியை 'ஷரத் பூர்ணிமா’ என்பர். இந்த நாள் வரையிலும் நண்பர்களுக்கு இனிப்புகள், மிஷ்டி எனப்படும் பால் பாயசம் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் செய்யப்பட்ட ஜாமூன்களை விநியோகித்து மகிழ்வார்கள்.

  குஜராத்தில்... இரவு நேரங்களில் பெண்கள் கூடி, கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் ஆடுவார்கள். மலர்களாலும் வெற்றிலையாலும் அலங்கரிக்கப்பட்ட குடத்தின்மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடுவது கர்பா; தாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போன்றது. பஞ்சாபிலும் தேவியை பூஜித்து பஜனை மற்றும் ஜாகரணை (இரவு கண் விழித்தல்) செய்து வழிபடுவர். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விஜயதசமி... ராவணனை வென்று ஸ்ரீராமன் வெற்றி சூடிய நாளாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைக்கு ஸ்ரீராம் லீலா வைபவம் சிறப்பாக நடைபெறும்.

- கே.நிருபமா, பெங்களூரு