ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

கோவை கோயில்கள் தரிசனம் !

கல்யாணம் கைகூட...முகூர்த்த தேங்காய் பிரார்த்தனை !

புரட்டாசி புண்ணியம்

 ஸ்ரீகல்யாண வேங்கடரமணர்

 கொங்கு தேசத்தின் முக்கிய ஊரான கோயம்புத்தூரில், பல திருநாமங்களுடன், பல இடங்களில் கோயில்கொண்டிருக்கிறார் திருமால். கோவை- காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உக்கடம். இந்தப் பகுதியில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீகல்யாண வேங்கடரமண ஸ்வாமி!

கோவை கோயில்கள் தரிசனம் !

சுமார் 500 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகல்யாண வேங்கடரமணப் பெருமாளுக்கு துளசி சார்த்தி வழிபட, தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்தத் தலத்தில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீசந்தான கோபாலன் கொள்ளை அழகு! இவரைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் வீட்டில் தொட்டில் ஆடும் என்கின்றனர், பெண்கள். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் முதலான பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, ஸ்ரீசந்தானகோபாலனைத் தரிசித்து பிரார்த்தித்துச் செல்கின்றனர். புரட்டாசி மாதம், உக்கடம் பகுதியே

களைகட்டி விடுமாம்! தினமும் சர்வ அலங்காரத்தில் காட்சி தருகிற ஸ்ரீகல்யாண வேங்கடரமண ஸ்வாமியையும், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணனையும் காணக் கண் கோடி வேண்டும்!

ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள்

கோவை- ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம். இவரை வழிபட வியாபாரம் சிறக்கும்; லாபம் கொழிக்கும் என்கிறார்கள் வணிகப்பெருமக்கள். இவர்களில் பெரும்பாலோர், தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைத் தரிசித்து விட்டே கடைகளைத் திறப்பார்களாம்.

கோவை கோயில்கள் தரிசனம் !

வருடத்தின் பல நாட்கள் விழா வைபங்கள் உண்டு என்றா லும், புரட்டாசியில் சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜை என அமர்க்களப்படுகிறது இந்த ஆலயம்; காலையும் மாலையும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்! திருமகளுடன் நரசிம்மர் அருளும் தலம் என்பதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்திக்க, கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீளலாம்; நசிந்த வியாபாரம் தலைதூக்கும்; லாபம் பன்மடங்கு பெருகும் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள். இங்கு, ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு பொரி மற்றும் பழங்களால் நைவேத் தியம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீகரிவரதராஜ பெருமாள்

கரிகால்சோழன் கட்டிய கோயில் இது.  கோவை உக்கடம் பகுதியில் அமைந்திருக்கும் புராதனமான இந்த ஆலயத்தின் நாயகன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள். இவருக்கு நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதுடன், அந்தப் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க... வேண்டிய வரம் கிடைக்கும்; வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் பிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

கோவை கோயில்கள் தரிசனம் !

குறிப்பாக, புரட்டாசியில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பது விசேஷமாம்!

ஸ்ரீவேணுகோபாலன்

கோவையின் மையப் பகுதியான ராஜா வீதி மற்றும் சலிவன் வீதி சந்திப்பில் உள்ளது ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோயில்; 600 வருடங்கள் பழைமையானது!

ஒரு காலத்தில் வயல்கள் சூழ்ந்த இந்தப் பகுதிக்கு, ஆநிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவர். அப்படி, மாடுகளை ஓட்டி வந்த சிறுவர்கள் சிலர், விளையாட்டாகக் கோயில் கட்டி, ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர்.

கோவை கோயில்கள் தரிசனம் !

அப்போது அந்தப் பகுதியை கிருஷ்ணராஜ உடையார் என்பவர் ஆட்சி செய்து வந்தார். பிள்ளைச் செல்வம் இல்லாத அவருடைய கனவில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், சிறுவர்கள் கோயில் கட்டி விளையாடிய இடத்தைச் சுட்டிக் காட்டி, 'இந்த இடத்தில் எனக்கொரு கோயிலைக் கட்டி வழிபட்டால், விரைவில் உனக்கு வாரிசு உண்டாகும்!’ என அருளினார். மன்னனும் கிருஷ்ணர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்டி வழிபட்டு, பிள்ளை வரம் பெற்றானாம்.

இன்றைக்கும் தன்னை நாடி வந்து வழிபடும் பக்தர்களுக்கு பிள்ளை வரம் தந்தருள்கிறார் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி. கோயிலுக்குள்ளேயே தெப்பக்குளமும் உள்ளது. ஸ்ரீருக்மிணி- சத்திய பாமாவுடன் அருளும் ஸ்ரீவேணுகோபாலனுக்கு முகூர்த்தத் தேங்காய் கொடுத்துப் பிரார்த்தித்தால், தடைகள் நீங்கி கல்யாண மாலை தோள் சேரும் என்கின்றனர் பக்தர்கள்.

அதேபோல், இங்குள்ள ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்தி வழிபட, நினைத்த காரியம் தங்குதடையின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பாலமலை ஸ்ரீஅரங்கநாதர் ஆலயம்

கோவை - 'கணபதி’ பகுதியில், பாலமலையில் கோயில்கொண்டு இருக்கிறார் ஸ்ரீஅரங்கநாதர். புரட்டாசியில், ஒவ்வொரு நாளும் இங்கு விசேஷம்!

  சனிக்கிழமைகளில், காலையில்.. ஸ்வாமிக்குத் திருமஞ்சனம்; மாலையில் திருமாலின் திருநாமங் களைப் போற்றும் பஜனைப் பாடல்கள் பாடி,

வழிபடுவர். புரட்டாசி 3-வது சனிக்கிழமைகளில், உத்ஸவரின் வீதியுலாவைத் தரிசிக்க பெருங்கூட்டம் கூடும். திருமஞ்சனம் சார்த்தி பெருமாளைப் பிரார்த்திக்க,

திருமாங்கல்ய பாக்கியமும்; இங்குள்ள ஸ்ரீஹயக் ரீவரை வழிபட, குழந்தைகளுக்கு கல்வியும் கலை ஞானமும் ஸித்திக்கும் என்பது ஐதீகம்!

கட்டுரை- படங்கள்: ம.முரளிதரன், த.சித்தார்த்