Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:

அஞ்சனை மைந்தனின் அற்புத தரிசனம்!

வாசகர் தகவல்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீசக்திஅனுமன். சுமார் 8 அடி உயரத்துடன் திகழும் இந்த அனுமன், இடையில் குறுவாளும், பின்புறம் பெரிய பட்டாக் கத்தியுடனும் தரிசனம் தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் அமைந்துள்ள கிராமம் மேலப்பாதி. இந்த ஊரில் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அருகில் ஓடும் காவிரியாற்றின் மீது பாலம் கட்டுவதற்கு, இரண்டு குரங்குகளின் உருவில் வந்து அனுமன் அருள்புரிந்த ஐதீகத்தின் அடிப்படையில், இரட்டை ஆஞ்சநேயர் கோயில் அமைத்து, வழிபட்டு வருகிறார்களாம் இப்பகுதிபக்தர்கள்.
திண்டுக்கல் அருகிலுள்ள ஊர் சின்னாளப்பட்டி. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு, மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று... கால்சட்டை மேல்சட்டை அணிவித்து வித்தியாசமான கோலத்தில் ராஜ அலங்காரம் செய்கிறார்கள். அன்றைய தினம், பள்ளிச் சிறுவர்கள் திரளாக வந்து அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர்.

தஞ்சை- புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில், அலங்கார மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி அருள்புரிகிறார் ஸ்ரீஜெயவீர அனுமன். வலது கையை உயர்த்தி அருளும் விதமும், இடது கையில் வெற்றிச் சின்னமான தாமரையை ஏந்தியபடியும் தரிசனம் தரும் இந்த அனுமனின் சந்நிதிக்கு முன் ராசிக் கட்டங்கள் உள்ளன. அதற்கு நேர் மேலே விதானத்தில் ராசிக்குரிய உருவங்கள் உள்ளன. பக்தர்கள், தங்களுக்குரிய ராசிக்கட்டத்தில் நின்று அனுமனை வழிபட, கிரகதோஷம் நீங்கும் என்கின்றனர்.

- டி.ஆர்.பரிமளரங்கன், திருச்சி-21. 
- எஸ்.ராமச்சந்திரன், சென்னை-4
 

##~##
'வீணை’ அனுமன்!

சென்னை- மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் பட்டாபிராமன் கோயிலில் அனுமன் கதாயுதத் துடன் காட்சி அளிக்கிறார்.

திருவையாறுக்கு அருகேயுள்ள புது அக்ரஹாரம் என்ற ஊரில், இடக்கரத்தில் புத்தகத்துடனும் வலது கையில் வீணையுடனும் காட்சி தருகிறார் அனுமன்.

- ஆர்.ராஜலக்ஷ்மி, ஹூப்ளி

வாசகர் தகவல்கள்

தலைகீழ் ஆஞ்சநேயர்!

த்திய பிரதேசம், உஜ்ஜயினியில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ள தலம் சான்வெர். இங்குள்ள கோயிலில், தலைகீழாக வெறும் தலைப்பகுதியுடன் மட்டுமே எழுந்தருளியுள்ளார் அனுமன். ஸ்ரீராமனையும் லட்சுமணனையும் மயில்ராவணன் என்பவன் பாதாள உலகத்துக்கு கடத்திச் சென்றான். இதனை அறிந்த அனுமன், அவர்கள் இருவரையும் மீட்டு வருவதற்காக, தலைகீழாக பாதாள உலகத்துக்குப் புறப்பட்ட இடம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் செவ்வாய்க் கிழமைகளில், ஆஞ்சநேயரின் முகத்துக்குச் செந்தூரம் பூசி பக்தர்கள் வழிபடுவார்களாம்.

- டி.ஆர்.பரிமளாரங்கன், திருச்சி-21

மட்டைத் தேங்காய் வழிபாடு!

ஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் ஸ்ரீசஞ்சீவி பக்த ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. திருமணப் பாக்கியம் வேண்டியும், குழந்தைப்பேறு வாய்க்கவும் இவரைப் பிரார்த்திக்கும் பக்தர்கள், மட்டைத் தேங்காய் கட்டி, வழிபட்டுச் செல்கிறார்கள். இதனால், தங்களின் வேண்டுதல்கள் வெகுசீக்கிரம் நிறைவேறும் என்பது அவர்களது நம்பிக்கை.

- ஆர்.லக்ஷ்மி, ஹூப்ளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism