'இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கவேண்டும் என்பதற்காக மட்டும் இல்லாமல், நம்முடைய வீடு விளக்கம் பெறவேண்டும் என்பதற்காகவும்தான் வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடுகின்றோம். நம் அகத்திலும் புறத்திலும் உள்ள அறியாமை, இல்லாமை போன்ற இருள் விலகவேண்டும் என்கிற உயரிய நோக்கத் தில்தான் திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

இந்தத் தீப வழிபாட்டில் நம் வேண்டுதல்களைச் சொல்லி, 'அருள் தா’ என வேண்டினால், நிச்சயம் அது பலிக்கும். அதுவும், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக இந்தத் திருவிளக்கு பூஜையைச் செய்வதன்மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் மிக அதிகம். நாம் எல்லாம் ஒன்றுகூடி உள்ள இந்த இனிய தருணத் தில், நமக்கு என்பதைத் தவிர்த்து, நமது தேசத்துக்காக இந்தத் திருவிளக்கு பூஜையில் பிரார்த்திப்போம். இதனால், நம் தேசம் மட்டுமல்ல, நம் வீடும் நலம் பெறும்'' என, சிறப்பு விருந்தினர் புலவர் மு.இராசரத்தினம் பேசியதை வாசகியர் ஆமோதித்து வரவேற்றனர்.

சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, போடிநாயக்கனூரில் உள்ள ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயிலில், கடந்த 2.6.15 அன்று நடைபெற்றது. இது, சக்தி விகடனின் 166வது பூஜையாகும். 'இதுவரைக்கும் நான் எத்தனையோ விளக்கு பூஜைகள்ல கலந்துக்கிட்டிருக்கேன். ஆனா, சக்தி விகடன் நடத்துற விளக்கு பூஜையில கலந்துக்கிறது இதுதான் முதல் தடவை. மிக அற்புதமா நடந்தது இந்த பூஜை'' என்று மகிழ்ச்சி ததும்ப பேசினார் வாசகி ஜான்சிராணி.

'சிறப்பு விருந்தினர் சொன்ன மாதிரி, என் வீட்டுக்காக மட்டும் இல்லாம, நம்ம நாட்டுக்காகவும்

நான் வேண்டிக்கிட்டேன். இங்கே ஏற்றிய ஒவ்வொரு விளக்கும், ஒவ்வொரு யாகத்துக்குச் சமம் என்றுதான் நான் சொல்வேன்' என்று நெகிழ்ந்து சொன்னார் வாசகி சாரதா.

வறுமை அகலவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், நாடு சுபிட்சம் அடைய வேண்டும் என்றெல்லாம் வாசகிகள் வைத்த வேண்டுதல்கள் பலித்து, தேசம் முன்னைவிடப் பிரகாசமாக ஒளிரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நமது வேண்டுதல்கள் அனைத்தையும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் நிச்சயம் நிறைவேற்ற அருள் புரிவாள்; ஒளி பெறுவோம்!

படங்கள்: வீ.சக்தி அருணகிரி